நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பேரவையின் கடிதங்கள் மற்றும் அறிக்கைகள்

2003ல் மைய அரசு விதித்த சென்ட்வாட் வரியினை திரும்பபெறக்கோரி மத்திய நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங்குக்கு அனுப்பியி கடிதம்



தீரன்சின்னமலைக்கு ஓடாநிலையில் மணிமண்டபம் அமைக்க ஆவண செய்த தமிழகமுதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம்





2009 பெண்ணாகரம் இடைத்தேர்தல் ஆதரவுக்கடிதம்




2008ல் சக்திமசாலவின் நிருவனர் சாந்திதுரைச்சாமி அவர்களுக்கு ஸ்ரீசக்திபுரோஸ்கர் விருது கிடைத்தமைக்கு பாராட்டுக் கடிதம்




சக்திமசால நிருவனருக்கு பேரவையின் சார்பில் நாம் அனுப்பிய பாரட்டுக்கடிதத்திக்கு பதில் நன்றி கடிதம்


தேசியநதிகள் இணைப்பை வழியுருத்தி ஆழியாரில் நடைபெற்ற கருத்தரங்கில் எமது பேரவையினால் வகுக்கப்பட்ட திட்ட வரைவினை தேசிய நதிநீர் ஆணையத்தின் தலைவர் சுரேஸ்பிரபு அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.




                          பேரவையின் சேலம்மாவட்ட கூட்டத்தின் தீமானங்கள்







2010ல் அ.தி.மு.க நடத்திய கண்டன ஆர்பாட்ட ஆதரவுக்கடிதம்




2010ல் ஆடி-18 தீரன்சின்னமலை நினைவுதின நிகழ்ச்சிக்கு அம்மா அவர்கள் கலந்துகொள்ள அழைப்பு மற்றும் திருச்சி கண்டன ஆர்பாட்ட ஆதரவுக்கடிதம்





திங்கள், 21 பிப்ரவரி, 2011

பேரவையின் விழா மற்றும் போராட்ட அழைப்பிதழ்கள்

கோவைசெழியனாரின் 7-ஆம் ஆண்டு நினைவு தின 
வீரவணக்கம் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்





                மாவீரன் தீரன்சின்னமலையின் வரலாற்று தொலைக்காட்சிதொடர்               
                                                       தொடக்கவிழா அழைப்பிதழ்





             ஆண்டுதோரும் நடைபெறும் தீரன்சின்னமலையின் பட்டாலி                  போர்ப்பாசறை விழாவின் சிறப்பு மலர்களின் முகப்பு







தீரன்சின்னமலைக்கு ஓடாநிலையில் மணிமண்டபம் அமைக்க 
உத்தரவிட்ட தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும்-அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் துண்டறிக்கை



கொங்குதமிழர்பேரவையின் சார்பில் நடைபெற்ற தீரன்சின்னமலையின் போர்ப்பாசறை விழாவின் அழைப்பிதழ்.







2009-ஆடி-18 தீரன்சின்னமலையின் நினைவுதினத்தில் மாவீரன் பிறந்த மேலப்பாளையத்தில் எமது பேரவையின் சார்பில் வீரவணக்கம் சமர்பிக்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் புகைப்படம்
            
2003ல் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற      உண்ணவிரதப்போராட்டத்தின் அழைப்பிதழ்




      கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி நடைபெற்ற   உண்ணாவிரதப்போராட்டத்தின் அழைப்பிதழ்.



வியாழன், 27 ஜனவரி, 2011

சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்

  மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார்.

 சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.

 அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார்.

 காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?  

 1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சி போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.

 அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக்  கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கிறது.

 அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினர்.

 "இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை.

 இதற்கு பழி தீர்க்கும் வகையில் சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.

            தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,
செய்தி ஊடகப்பதிவுக்காக-  டி.கே.தீரன்சாமி

புதன், 26 ஜனவரி, 2011

விஜயின்-காவலன் சந்தித்த சோதனைகள்


 கமலின் மன்மதன் அம்பு வெளியான நேரத்தில்-இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் வெளியிடப்பட இருந்துதது.கடந்த காலங்களில் விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தது.அடுத்த படத்தை சூப்பர்கிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற நிலைமை விஜய்க்கு ஏற்பட்டது.

 பிரண்ட்ஸ் படத்தை சூப்பர்கிட் படமாக கொடுத்தவர் இயக்குனர் சித்திக்.விஜய்-சித்திக் கூட்டணி மலையாலத்தில் வசூல் மழை பொழிந்த படத்தின் ரீமேக் கதையை கையில் எடுத்தது.காவலன் என்ற பெயரில் காமெடிக் கலக்களுடன் விஜய்க்கு தேவையான மசாலாவை கலந்து காவலன் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது.

 சத்தியராஜ்யை வைத்து தொடர்ந்து படம் எடுத்து கையைச்சுட்டுக்கொண்ட சக்திசிதம்பரத்தின் அலுவலகமும்-காவலன் திரைப்படத்தின் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் காவலன் திரைப்படத் தயாரிப்பாளர் ரோமேஸ்க்கும் சக்திசிதம்பரத்திற்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது.

 அதன் விளைவு காவலன் திரைப்பட வெளியீட்டு உரிமையை 42 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார் சக்திசிதம்பரம். இந்தபடம் வெளியானால் தனது கடன் பிரச்சனைகள் தீரும் என முடிவு செய்து தனது தகுதிக்கு மேல் கடன் பெறுகிறார்.

 கடந்த மாதமே வெளியிட தேதியும் குறிக்கப்பட்டது.சக்திசிதம்பரத்திற்கு முன்பே காவலன் படத்தை வாங்க கையில் பணத்துடன் நிறைய சம்பவான்கள் காத்திருந்தனர்.விஜயின் முந்தைய படங்கள் சறுக்கியதின் காரணமாக 40 கோடிக்கும் குறைவாக பேரம் பேசினார்கள்.ஆனால் சக்திசிதம்பரத்தின் விலை 42 கோடி ரூபாய்.

 மற்றவர்களைவிட கூடுதலாக விலை பேசியதன் காரணமாக சக்திசிதம்பரத்தின் கைக்கு வெளியீட்டு உரிமை சென்றது.ஆனால் விஜய் தரப்பு சொல்லும் காரணம் சிதம்பரத்தை நிதிநெறுக்கடியில் இருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என அவருக்கு வெளியீட்டு உரிமை தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.காவலனின் முதல் பிரச்சனை சக்திசிதம்பரம்.

 இந்த நேரத்தில் எந்திரன் படம் 40 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.சில இடங்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டு காவலன் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் வேகம் காட்டினார்கள்.

 இதே நேரத்தில்உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியானது.தொடர்ந்து காவலனும் வெளியாக இருந்தது.காவலன் வெளியானல் மன்மதன் அம்பு சொம்பு ஆகிவிடும்-மேலும் தங்களின் சொல்பேச்சு கேட்காத விஜய்க்கு தகுந்த பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தனர் கலைஞர் குடும்பத்தின் திரை உலக வாரிசுகள்.

 அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன.திரையரங்குகள் கிடைக்காத நிலையில் காவலன் வெளியீடு தைப் பொங்களுக்குத் தள்ளிப்போனது.

 விநியோகஸ்தர்களிடமும்,மீட்டர் வட்டி கும்பலிடமும் பணம் வாங்கிய சக்திசிதம்பரத்திற்கு நெறுக்கடிகள் முற்றியது.பணம் கொடுத்த சிலர் சிதம்பரத்தை வளைத்துத் தாக்கவும் செய்தார்கள்.சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.                
   
 காவலன்தைப்பொங்களுக்குஅவதரிப்பான்எனக்காத்திருந்தரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்,திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.அந்த நேரத்தில் கலைஞரின் இளைஞன்,மாறனின் ஆடுகளம் வெளியானது.

 கார்த்தியின் சிறுத்தையும்,விஜயின் காவலனும் கலைஞரின் குடும்பப்படங்களை அப்பர் பிளாப் செய்து விடும் என கலைஞரிடமே சொல்லப்பட்டது.அப்புறம் என்ன கடுமையான அஸ்திரங்கள் காவலன் மீது வீசப்பட்டது.

 சிறுத்தையின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் படத்தின் வெளியீட்டு உரிமையை தன் சொந்தப்பொறுப்பில் வைத்துக்கொண்டார்.அதனால் முன் கூட்டியே திரையரங்குகளை பதிவு செய்து கொண்டார்.

  இருப்பினும் நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவுக்கு சிறுத்தை படம் வெளியானால் அவமானம் என்று கூறி நடிகர் கார்த்தியின் வீட்டு முன்பு நாடார் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதன் பின்னனியில் இளைமை படத்தின் தயாரிப்பாளர் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.அதையும் மீறி சிறுத்தை படம் பொங்களில் சீறியது.

 ஆனால் சக்திசிதம்பரத்தின் பொருளாதார நெருக்கடி விஜயின் எதிர் முகாமில் இருந்தவர்களுக்கு சாதமாக அமைந்தது.தங்கள் அரசியல் பின் புலத்தை சரியாகப் பயன்படுத்தி காவலனுக்குத் தாங்க முடியாத சோதனைகளை ஏற்படுத்தினார்கள்.
 இது போன்ற சோதனைகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க பொதுச்செயலாளரை சந்தித்து காவலன் வெளியீட்டுக்கு ஆதரவு பெற்றார்.

 இறுதியில் இளையதளபதியும்,அவரது தந்தையும் இணைந்து அதிரடியாக களம் இறங்கி நீதிக்கு தண்டனை கொடுத்தவர்களைத் தண்டித்து,சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிருபித்து,பல கோடி ரூபாய்களை இழந்து காவலன் படத்தை பிரசவித்தார்கள்.

 காவலன் காற்று வாங்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! விளம்பரம் எதுவும் இல்லாமல் காவலன் இளைய தளபதியை காப்பாற்றியது. 



        பார்த்துவிட்டு கருத்தைக் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-     டி.கே.தீரன்சாமி.

செவ்வாய், 25 ஜனவரி, 2011


உலகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமை சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் 

இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை.

 நமது பாரததேசம் இருநூறு ஆண்டுகள் தொடர்ந்து மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம்  தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டுக்கு உட்பட்ட 24நாடுகளில் காங்கயம்நாட்டில் மேளப்பாளையம் கொங்குவேளாளர் சாதீ பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதியர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.

 1790க்கும் மேற்பட்டகாலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்து தூக்குமேடையில் நம்நாட்டு விடுதலைக்காக தம் இன்னுயிரை துறந்தவர்தான் தீரன்சின்னமலை.அடிமைதலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைபடுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

 தீரன்சின்னமலையின் கொங்குபடையில் கறுப்புச்சேர்வைதேவர்,கட்டுத்தரிநாடார்,ஆதிதிராவிடர்சுபேதர்வேலப்பன்,அருந்ததியர்சமூகத்தைசார்ந்த செறுப்புத்தைக்கும்தொழிலாளி பொல்லான்,ஆருயிர்நண்பனாக-வழிகாட்டும் தளபதியாக இஸ்லாமிய மாவீரன் கன்னடத்துப்புலி திப்புசுல்தான்,பத்தேமுகமதூசேன்,போர்ப்பயிற்சி அளித்த வெள்ளை இனத்தை சார்ந்த பிரான்சு வீரர்கள்,விருபாச்சிகோபாலநாய்க்கர்,வன்னியர்சமூகவீரர்கள்,என அனைத்துச்சமூகத்தை சார்ந்தவர்களும் சின்னமலையின்போர்படையில் வீரப்போர்புரிந்து நாம் இன்று ருசிக்கும் சுதந்திரத்திற்காக அன்றே மரணத்தை முத்தமிட்டார்கள். 

  மண்ணுரிமைக்காக மகத்தான தியாகம் செய்த மாவீரர்களின் பாதம்தொட்டு சமூக-அரசிய்ல்-சுற்றுச்சூழல்-குற்றவியல்-புலானாய்வு-செய்திகளை-கருத்துகளை இந்த வலைதளம் வாயிலாக உங்களுடன் -நீங்கள் எங்களுடன் உண்மைகளை உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்வோம். டி.கே.தீரன்சாமி...மாவீரன் தீரன்-