புதன், 26 ஜனவரி, 2011

விஜயின்-காவலன் சந்தித்த சோதனைகள்


 கமலின் மன்மதன் அம்பு வெளியான நேரத்தில்-இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் வெளியிடப்பட இருந்துதது.கடந்த காலங்களில் விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தது.அடுத்த படத்தை சூப்பர்கிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற நிலைமை விஜய்க்கு ஏற்பட்டது.

 பிரண்ட்ஸ் படத்தை சூப்பர்கிட் படமாக கொடுத்தவர் இயக்குனர் சித்திக்.விஜய்-சித்திக் கூட்டணி மலையாலத்தில் வசூல் மழை பொழிந்த படத்தின் ரீமேக் கதையை கையில் எடுத்தது.காவலன் என்ற பெயரில் காமெடிக் கலக்களுடன் விஜய்க்கு தேவையான மசாலாவை கலந்து காவலன் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது.

 சத்தியராஜ்யை வைத்து தொடர்ந்து படம் எடுத்து கையைச்சுட்டுக்கொண்ட சக்திசிதம்பரத்தின் அலுவலகமும்-காவலன் திரைப்படத்தின் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் காவலன் திரைப்படத் தயாரிப்பாளர் ரோமேஸ்க்கும் சக்திசிதம்பரத்திற்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது.

 அதன் விளைவு காவலன் திரைப்பட வெளியீட்டு உரிமையை 42 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார் சக்திசிதம்பரம். இந்தபடம் வெளியானால் தனது கடன் பிரச்சனைகள் தீரும் என முடிவு செய்து தனது தகுதிக்கு மேல் கடன் பெறுகிறார்.

 கடந்த மாதமே வெளியிட தேதியும் குறிக்கப்பட்டது.சக்திசிதம்பரத்திற்கு முன்பே காவலன் படத்தை வாங்க கையில் பணத்துடன் நிறைய சம்பவான்கள் காத்திருந்தனர்.விஜயின் முந்தைய படங்கள் சறுக்கியதின் காரணமாக 40 கோடிக்கும் குறைவாக பேரம் பேசினார்கள்.ஆனால் சக்திசிதம்பரத்தின் விலை 42 கோடி ரூபாய்.

 மற்றவர்களைவிட கூடுதலாக விலை பேசியதன் காரணமாக சக்திசிதம்பரத்தின் கைக்கு வெளியீட்டு உரிமை சென்றது.ஆனால் விஜய் தரப்பு சொல்லும் காரணம் சிதம்பரத்தை நிதிநெறுக்கடியில் இருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என அவருக்கு வெளியீட்டு உரிமை தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.காவலனின் முதல் பிரச்சனை சக்திசிதம்பரம்.

 இந்த நேரத்தில் எந்திரன் படம் 40 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.சில இடங்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டு காவலன் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் வேகம் காட்டினார்கள்.

 இதே நேரத்தில்உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியானது.தொடர்ந்து காவலனும் வெளியாக இருந்தது.காவலன் வெளியானல் மன்மதன் அம்பு சொம்பு ஆகிவிடும்-மேலும் தங்களின் சொல்பேச்சு கேட்காத விஜய்க்கு தகுந்த பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தனர் கலைஞர் குடும்பத்தின் திரை உலக வாரிசுகள்.

 அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன.திரையரங்குகள் கிடைக்காத நிலையில் காவலன் வெளியீடு தைப் பொங்களுக்குத் தள்ளிப்போனது.

 விநியோகஸ்தர்களிடமும்,மீட்டர் வட்டி கும்பலிடமும் பணம் வாங்கிய சக்திசிதம்பரத்திற்கு நெறுக்கடிகள் முற்றியது.பணம் கொடுத்த சிலர் சிதம்பரத்தை வளைத்துத் தாக்கவும் செய்தார்கள்.சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.                
   
 காவலன்தைப்பொங்களுக்குஅவதரிப்பான்எனக்காத்திருந்தரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்,திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.அந்த நேரத்தில் கலைஞரின் இளைஞன்,மாறனின் ஆடுகளம் வெளியானது.

 கார்த்தியின் சிறுத்தையும்,விஜயின் காவலனும் கலைஞரின் குடும்பப்படங்களை அப்பர் பிளாப் செய்து விடும் என கலைஞரிடமே சொல்லப்பட்டது.அப்புறம் என்ன கடுமையான அஸ்திரங்கள் காவலன் மீது வீசப்பட்டது.

 சிறுத்தையின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் படத்தின் வெளியீட்டு உரிமையை தன் சொந்தப்பொறுப்பில் வைத்துக்கொண்டார்.அதனால் முன் கூட்டியே திரையரங்குகளை பதிவு செய்து கொண்டார்.

  இருப்பினும் நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவுக்கு சிறுத்தை படம் வெளியானால் அவமானம் என்று கூறி நடிகர் கார்த்தியின் வீட்டு முன்பு நாடார் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதன் பின்னனியில் இளைமை படத்தின் தயாரிப்பாளர் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.அதையும் மீறி சிறுத்தை படம் பொங்களில் சீறியது.

 ஆனால் சக்திசிதம்பரத்தின் பொருளாதார நெருக்கடி விஜயின் எதிர் முகாமில் இருந்தவர்களுக்கு சாதமாக அமைந்தது.தங்கள் அரசியல் பின் புலத்தை சரியாகப் பயன்படுத்தி காவலனுக்குத் தாங்க முடியாத சோதனைகளை ஏற்படுத்தினார்கள்.
 இது போன்ற சோதனைகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க பொதுச்செயலாளரை சந்தித்து காவலன் வெளியீட்டுக்கு ஆதரவு பெற்றார்.

 இறுதியில் இளையதளபதியும்,அவரது தந்தையும் இணைந்து அதிரடியாக களம் இறங்கி நீதிக்கு தண்டனை கொடுத்தவர்களைத் தண்டித்து,சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிருபித்து,பல கோடி ரூபாய்களை இழந்து காவலன் படத்தை பிரசவித்தார்கள்.

 காவலன் காற்று வாங்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! விளம்பரம் எதுவும் இல்லாமல் காவலன் இளைய தளபதியை காப்பாற்றியது. 



        பார்த்துவிட்டு கருத்தைக் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-     டி.கே.தீரன்சாமி.

கருத்துகள் இல்லை: