புதன், 22 ஏப்ரல், 2015

ஏப்ரல்-22 உலக புவிதினம்..


சாயநீர் ஓடும் நொய்யல் நதி

ஏப்ரல்-22 உலக புவிதினம்.புவியை பாதுகாப்பது!.
புவியை பாதுகாப்பதுன? நம்ம ஏன் புவியை பாதுகாப்ப வச்சுக்கனும்?.                                                                                                                                               

அரசாங்கம் எதுக்கு இருக்கு? எம்.எல்.ஏக்கள்,பஞ்சாயத்துக்கள்,அமைச்சர்கள்,அதிகார மையங்கள்னு-நம்மோட வரிப்பணத்தில் 99-விழுக்காடு சம்பளமா வாங்கிக்கிறாங்கா!
ஊழலா..லஞ்சமா..மீதியை கொள்ளையடிக்கிறாங்கா! அவங்க புவியை பாதுகாக்கட்டுமே! அவங்களுக்கு என்ன வேலை?

உங்க ஆதங்கம்..கோபம் எனக்கு புரியுது...ஆனா..பாருங்க புவின்னு சொன்ன..

நம்ம சித்தர்கள் கணக்கில மண்(உடல்),நீர்(இரத்தம்),நெறுப்பு(உடல் வெப்பம்),காற்று(ஆக்சிசன்),ஆகாயம்(உயிர்) என்று ஐந்து பொருள்கள்,பஞ்ச பூதங்கள்,பொளதீக பிரிவுகள்னு சொல்லாறங்கா..

இப்ப இந்த ஐந்து பிரிவுகளின் சேர்க்கை தான் நம்ம உயிருள்ள உடலா இருக்கு..அப்போ..இவைகளை மாசுபடுத்தாம..முடிந்த அளவு ஒவ்வொரு தனிமனிதனும் அக்கரை எடுத்துக்கிட்ட..புவியை சுத்தமா வச்சுக்க முடியும்...மேலும் மரக்கன்றுகள் நிறைய நடனும்..இன்றைய புவிதினத்தில் இதை உறுதிமொழியா ஏற்றுக்கொள்வோம்... 

கீழே பாருங்கா தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி.(ஏப்ரல்-22)

காகிதங்கள்,காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால் அவை பூமியைவிட்டு நீங்க 1-முதல் 2-மாதங்கள் ஆகும்.
தெர்மாகூல் கப்புகளை போட்டால் 50- ஆண்டுகள்..பிளாஸ்டிக் கேன்கள் 80-முதல் 200 ஆண்டுகள்,பிளாஸ்டிக் பைகள் 50-முதல் 1000 ஆண்டுகள்..,
பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள்,..ஆகும்.

இதில் பிளாஸ்டிக் பொருள்கள் அணுகுண்டைவிட அபாயகரமானவை...

கீழே உள்ள புகைப்படம்-மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம்நாடு,மேலப்பாளையம் கிராமத்தில் பாய்ந்து ஓடும் இயற்கையின் அருற்கொடையான பாசன வாய்க்கால்.....
best links in tamil

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா
கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஏப்ரல்-17 மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா,கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த காங்கேயம் நாடு மேலப்பாளையத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தேசிய இளையோர் பிரிவு செயலாளர் டி.எஸ்.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

மேலும் இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஆர்.தங்கவேல்,மாநில
கைத்தறிப்பிரிவு செயலாளர் கே.எஸ்.செல்வராஜ்,செயற்குழு உறுப்பினர் பி.மோகன்,குண்டடம் ஒன்றிய அமைப்பாளர் பி.ராமசாமி,தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் பொன்னுச்சாமி,கரூர் மாவட்ட அமைப்பாளர் சி.சண்முகம்உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மேலப்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
— with தெ.கு.தீரன்சாமி தேசிய அமைப்பாளர் கொங்குதமிழர்கட்சி.

திங்கள், 6 ஏப்ரல், 2015

மோடியின் இலங்கைப்பயணம் சீனாவை சீண்டிப்பார்க்குமா?

modi-maithee

இதயச்சந்திரன்:-

திரு.மோடி,ஒரு மிகச் சிறிய நாட்டின் பக்கத்திலுள்ள அணுஆயுத வல்லரசு இந்தியாவின் பிரதமர் அவர். ஆசியாவில் சீனாவை அடக்க அமெரிக்க யானைப்பாகன் பயன்படுத்தப்போகும் அங்குசம்.


இவ்வாறாக இலங்கை அரசியலில் இருந்து இந்திய தேசத்தை வர்ணிக்கலாம்.

மறுபுறம் பார்த்தால் மகிந்த ஆட்சி உருவாகுவதற்கு உதவிய நாடு. அமெரிக்காவையும், சீனாவையும் ஓரங்கட்ட சீபாஒப்பந்தத்தை நிறைவேற்றிடத் துடித்து தோல்வியுற்ற நாடு என்றும் கூறலாம்.


80 ஆரம்பத்தில் உருவான அமெரிக்க- இந்திய பனிப்போர், 87 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக புதிய வடிவம் அடைந்தது. இன்றும் அந்த ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால் கொழும்புத் துறைமுகத்தில் ஒரே மாதத்தில், இரு தடவைகள் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்ததால், ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.

2009 இற்குப்பின்னர், இந்தியாவின் அமெரிக்காவுடனான பனிப்போர் சீனாவுடன் தாவி, இப்போது துறைமுகநகர திட்டம் கிடப்பில் போடும் அளவிற்கு முறுகல் நிலையை எட்டியுள்ளது.

அதேவேளை ஆசியப்பிராந்திய புதிய சமநிலை உருவாக்கத்தில் வியட்நாமிற்கு அடுத்ததாக இலங்கையில்தான் அமெரிக்க-இந்திய தந்திரோபாயக்கூட்டு, இயங்குநிலையை வந்தடைதுள்ளதாகக் கணிப்பிடலாம்.

இந்த வருடத்திற்கான சீனாவின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி 6.5% ஆகக்குறையுமென மதிப்பிட்டாலும், ஆசியாவில் அதன் மேலாதிக்க விரிவாக்கத்தை இந்தியா பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இதனடிப்படையிலேயே அமெரிக்காவுடன் ஒரு தற்காலிக தந்திரோபாயக் கூட்டு ஒன்றினுள் தன்னை பிணைத்துக்கொள்ள இந்தியா முன்னிற்பதைக் காணலாம்

ஆழமாக நோக்கினால்  அமெரிக்க சார்பு அணிகளின் பலவீனத்தையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறது என்பதை அவதானிக்கலாம்.

அதாவது அரச வட்டி வீதத்தை 1.75 ஆகக் கீழிறக்கிய தென்கொரியாவின் பொருண்மியப் பலவீனமும், இக்கட்டான காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய தாங்குதிறன் (stress test ) ஐரோப்பிய வங்கிகளுக்கு இல்லை என்கிற மதிப்பீடுகளும், திறைசேரி திவாலாகிப்போன கிரேக்கத்தின் கையறுநிலையும், இலங்கையின் புதிய ஆட்சிக்கு கடன் கொடுக்க மறுத்த அனைத்துலக நாணய நிதியமானது (IMF) பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் உக்ரேய்ன் இற்கு ஓடோடிச்சென்று 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வரும் காரணங்களையும் இந்திய புரிந்து கொள்கிறது.

அமெரிக்காவின்பங்குச் சந்தை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பாவின் பொருளாதாரம் அதன் மத்திய வங்கியிடம் (ECB)கையேந்திக் கொண்டிருக்கிறது

கார்பொரேட் முதலீட்டாளர்கள் ஆசியாவை நோக்கி நகர்கின்றார்கள். சீனாவின் வளர்ச்சி வீதம் குறைவடைவதனால், அவர்கள் முதலீட்டிற்கான வேறு சாதகமான நாடுகளைத் தேடுகின்றார்கள். அதுமட்டுமல்லாது அமெரிக்க- சீன அதிபர்களின் விஜயமானது இந்தியாவை நோக்கி இக் கார்பொரெட்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

ஆக மொத்தம் ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே இது  சாதகமாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

அதேவேளை சீனாவின் முத்துமாலை சுற்றிவளைப்பினை உடைத்தெறிய வேண்டுமாயின், யாரோடு கூட்டுச் சேர்ந்தாவது, தன்னைப்பொருண்மிய ரீதியாகவும், படைத்துறைரீதியாகவும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு டெல்லியின் தென் வளாகம் வந்திருப்பது போல் தெரிகிறது

இதில் விசித்திரமான நகர்வுகளும் நடைபெறுகின்றன. அதாவது அமெரிக்க- இந்திய இராஜதந்திர நெருக்கத்தால் சீனாவின் முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்கிறது.

தற்போதுள்ள 400 மில்லியன் சீன முதலீட்டினை, 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் பல உடன்பாடுகளில் மோடியும் ம் க்ஷி ஜின்பிங்கும் கடந்த வருடம் கைச்சாத்திட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பராக் ஒபாமாவின் அண்மைய விஜயம் 4 பில்லியன் முதலீட்டைக்கூடக் கொண்டுவரவில்லை

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவோடு ஒரு இணக்கப்பாடு தனக்கு இருப்பதுபோல் மைத்திர்-இரணில் ஆட்சி அதிகாரத்திற்கு காட்டிக்கொள்ள இந்தியா முனைகிறது.

ஆட்சி மாற்றமானது  நாடாளுமன்றத்  தேர்தலோடு முற்றுப்பெறும் வரை, இதே போக்கில் இந்தியா தனது காய்களை நகர்த்துமென எதிர்பார்க்கலாம்

.நா.அறிக்கை தொடக்கம், முன்னைய ஆட்சியாளர்களால் களவாடப்பட்டதாகச் சொல்லப்படும் பணத்தினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரும் விவகாரம்வரை, இந்தியாவின் அனுசரணையை அரசும் எதிர்பார்க்கும், இந்தியாவும் அதற்காகப் பாடுபடுவது போல் காட்டிக்கொள்ளும்.

நாட்டின் வருமானத்தைப் பொறுத்தமட்டில், கையும் கணக்கும் சரியாக இருப்பதால் மேலதிக கடன் வழங்கத் தேவையில்லைஎன்று கிறிஸ்டின் லகாட்டின் ( இவர்தான் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளர் என்று நம்பப்படுகிறது) அனைத்துலக நாணய நிதியம் இலங்கையைக் கைவிட்ட விவகாரமும் இந்தியாவிற்கே சாதகமாக அமையப்போகிறது

அதாவது உறுதியான ஆட்சி ஏற்படும்வரை, வாக்குறுதிகளை வழங்கும் வைபவங்களே நிகழும். பிரித்தானியப்பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்தாலும் இதுதான் நடக்கும்

இந்த வகையான இடைக்கால நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் போது, ‘குறைநிரப்பும்பங்கினை இந்தியா மனமுவந்து ஏற்கும் நிலை தோன்றுமென்பதே நிஜமானது.

இந்த விஜயத்தின் போது ஏற்கனவேயுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் (FTA ) ஆழ- அகலங்கள் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் இந்தியாவிற்குச் சார்பான வர்த்தக உபரி ( Trade Surplus) அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வெகுவாக அதிகரிக்கும்

இந்த அச்சத்தினை வெளிப்படுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் பட்டாலி சம்பிக்க ரணவக்க, இலங்கையின் பொருளாதாரமானது முற்றுமுழுதாக இந்தியாவின் பிடிக்குள் அகப்படுவது ஆபத்தானது  என்கிறார். அதாவது இதனை இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ‘கடனை ஓரிடத்தில் இருந்து மட்டும் வாங்காமல், எல்லா வல்லரசுகளிடமிருந்தும் பகிர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள்என்பது போலிருக்கிறது சம்பிக்கவின் அறிவுரை

அதாவது மகிந்தர் விட்ட தவறை நீங்களும் விடாதீர்கள்என்று சொல்ல வருகிறாரா? இல்லையேல் இந்தியா குறித்தான மகாவம்ச மயக்கத்திலிருந்து பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இருப்பினும் சிங்களத்தின் இராஜதந்திர மைய ஓட்டத்திலிருந்து முரண்படாமல் அவர் பேசுகிறார் என்பதுதான் உண்மை வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘அமைச்சர்என்கிற வகையில் இவரையும் சந்திப்பாரென எதிர்பார்க்கலாம்.

இவரின் வருகையை இரண்டு தரப்பினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுதரப்பு மைத்திரி- மகிந்த   கட்சி ( கள்).

கூட்டமைப்பைப் பொறுத்தவரை, 13 வது திருத்தச் சட்டத்தில் எஞ்சியுள்ளவற்றை வடமாகாண சபையில் பிரயோகிப்பதற்கு, புதிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அத்தோடு வடமாகாணசபையிலுள்ள அமைச்சுக்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும், நீண்ட கால வேலைத்திட்டங்களுக்கும் இந்தியாவின் நேரடி உதவி கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் விடுப்பார்கள். ஆனால் சம்பூரில் கடற்படை பிடித்து வைத்திருக்கும் மக்களின் நிலங்கள் குறித்து எவர் பேசுவார் என்று தெரியாது

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத்தெரிகிறது. நோர்வே தூதுவர் மற்றும்  அமெரிக்க இராஜதந்திரிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிடம் கேட்ட இன அழிப்பு தீர்மானம் ஏன்?’ என்ற கேள்வியை, இந்தியப்பிரதமரும் கேட்பார் என எதிர்பார்க்கலாம்

மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் பெரும் இராஜதந்திர நெருக்கடியை இத்தீர்மானம் கொடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் இவர்கள் விடுபடவில்லை. வடக்கிற்கு செல்லும் இராஜதந்திரிகள் யாவரும் தமது உரையாடல்களில் இக்கேள்வியையும் இணைப்பார்கள்.

அடுத்ததாக, கொழும்பு அதிகார மையத்தைப் பொறுத்தமட்டில், மைத்திரி தரப்பினரே மோடியோடு நெருக்கத்தை ஏற்படுத்த முனைவார்கள் என்று கூறலாம். வரலாற்று ரீதியான அரசியல் உறவும் அதற்கு ஒரு காரணம். .தே.கட்சியானது மேற்குலகிற்குச் சார்பானது என்கிற இந்தியாவின்  இறுகிப்போன நிலைப்பாடும்‘, இக்கூற்றிக்கு வலுவூட்டும்.

சீனாவை நோக்கிய முனைவாக்கம் தடுக்கப்பட வேண்டும்என்பதோடு, மேற்குலக ஆதிக்கத்தை அனுமதிக்கும் தரப்பு அதிகார மையத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் இந்திய வெளியுறவு கொள்கைப் பிரிவு கவனம் செலுத்த முற்படும் ஆகவே மைத்திரியோடு மகிந்தாவையும், நரேந்திர மோடி அவர்கள் சந்திக்கும் வகையில் இந்தியத் தரப்பு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்

பூகோள எதிர்கால அரசியலையும், இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலையும் இணைத்துப் பார்க்கும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரியின் தலைமையிலான, ஆனால் மகிந்த அணியின் ஆதரவு பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதை ஒரு தரப்புவிரும்பும்.

அச் சக்தி எதுவென்பதை தேர்தலின் போதும், அது முடிந்த பின்னரும் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஆட்சிமாற்றத்தின் திசையை, தமக்குச் சார்பாக திருப்ப வருகிறாரா மோடி என்கிற பேச்சும் காதில் விழுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:- தமிழ் தேசிய சிந்தனைப்பள்ளி என்ற வலைதளத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது.  www.eelamnews.com கட்டுரையாளர் நண்பர்.இதயச்சந்திரன் அவர்களால் பதிவிடப்பட்டது.

வியாழன், 2 ஏப்ரல், 2015

சீனிச்சர்கரை,ஆளைக்கொல்லும் விசம்-எச்சரிக்கை..

எச்சரிக்கை !!!
  தயவு செய்து இந்தச் சீனிச்சக்கரை விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உன்னாதீர்கள். மன்னிக்கவும்! யாரும் உன்னவேண்டாம் மன்னிக்கவும் .நாய்க்குக் கூட குடுக்கவேண்டாம். sugar disease is a slow poison இதுதான்.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்துத் தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்தச் சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. 

பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1-.கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.This is true so Can we avoid

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம். பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!நண்பர்களே (முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள

பனை கருப்பட்டி,பனை கல்கண்டு,நாட்டுச்சர்கரை, கலப்படம் அற்றதாக பார்த்து வாங்கவும்.மேலும்,கலப்படம் இல்லாத இயற்கை உணவு என்ற பெயரில் மக்களை ஏமாற்ற ஒரு கும்பல் கிளம்பியுள்ளது..எச்சரிக்கை

புதன், 1 ஏப்ரல், 2015

லிங்கமாக அவதாரம் எடுத்த சட்டிச்சித்தர்

சித்தர் என்போர் சித்தில் வல்லவர் என்பது பொதுக் கருத்து. அவர் நீர்மேலும் நெருப்பிலும் நடந்திடுவர். இரும்பைப் பொன்னாக்குவர். ஒரு நேரத்தே பலவிடங்களில் தோன்றிக் காட்சி அளிப்பர். காடு மேடு மலையென அலைந்து உழலுவர் எனச் சொல்லி மாளாது இவர் திறம்.
இவர்கள் கந்தல் ஆடை உடுத்தியும், ஆடை துறந்தும் திரிவதால் மக்கள் சித்தர்களின் பெருமைகளை உணர்ந்தறியாமல் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதே பெரு நிகழ்வு. காலச் செலவில் மக்களுக்கு சித்தர்களின் பெருமைகள் விளங்கலாயிற்று. இவர்கள் கடுமையான தவங்களை இயற்றித்தான் சித்தர் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொண்டுள்ளனர் என்ற உண்மை தெரியவந்துற்றது. சித்தர்கள் புறத் தோற்றத்தில் மிக எளியராகக் காணப்படினும் உள்ளகத்தே மதிப்பறியாத ஒன்பான்மணிகளை (நவரத்தினம்) கொண்டிருந்தனர். அந்த மணிகளை உலகோர் உணரும் பொருட்டு செயலாற்றி வந்துள்ளனர்.
இறைவனின் முழுநிறைவான திருவருள் கிட்டப் பெற்றவர்களே சித்தர் என்று ஆகிட முடியும். இந்தப் புது நாகரிகக் காலத்திலும் இறைப் பேரருளால் சித்தர்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை நடுவண் சிறை அமைந்த புழல் பகுதியின் காவாங்கரையில் சட்டி சித்தர் எனப்பட்ட மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் தோன்றி பல இறும்பூதுகளை (miracles) நிகழ்த்தியுள்ளார். 

சித்தரின் வருகை
மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் தவம் புரிந்த சட்டி சித்தர் இறுதியாக கடலில் மிதந்தபடி திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கயதை பொது மக்கள் பார்த்துள்ளனர்.  இவர் பிறப்பிடம் யாது? பெற்றோர் யாவர்? என்பன அறியக் கிடைக்கவில்லை. முதன்முதலாக திருவொற்றியூர் வந்து சேர்ந்த இவர் ஆடையின்றி அம்மணராக சென்னை நகர் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து விட்டு புழலில் உள்ள காவாங்கரைக்கு வந்தார். அங்கு இவரது கோலம் கண்ட ஒரு அம்மையார் இவரது இடுப்பைச் சுற்றி ஆடை கட்டினார். அது முதல் சித்தர் அங்கேயே தங்கலுற்றார்.
சித்தருக்கு சடைகட்டி மயிர்க் கற்றையாக இருந்ததால் அவ் அம்மையார் ஒரு அன்பரை அமர்த்தி மொட்டை அடிக்க ஏற்பாடு செய்தார். நீள் சடையும் அழுக்கும் கோர்த்திருந்த அவரது நிலையையும் கண்ட அந்த அன்பர் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு மொட்டை அடிக்கத் தொடங்கினார். அதுபோது மிக உயர்ந்த நறுமண வீச்சு அங்கே எழுந்தது. அந்நறுமணம் எங்கிருந்து வருகின்றது என்று நின்றிருந்தோர் திகைப்புற்று நோக்க அது சித்தரின் தலையிலிருந்து தான் வீசுகின்றது என்பதை இறுதியாக அறிந்தனர். அப்போது தான் அவர் மாபெரும் தவப்பெரியார் (மகான்) என்பதை அங்கிருந்தோர் அறிந்து கொண்டார்கள். அது முதல் சித்தர் அவ்விடத்தில் இருந்து கொண்டே பல இறும்பூதுகளை நிகழ்த்தி வந்தார். ஆடை அணிவித்த அம்மையார் வீட்டில் அவர் தங்கி இருந்த போது முன்கூட்டியே அன்பர்களது வருகையை அறிந்து கொள்வார். தன்னை நாடி வரும் அன்பர்கள் தமது குறைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நீங்கியதன் காரணமாக அன்பர்கள் அவரது தீவர பக்தர்கள் ஆயினர். 
சட்டி சித்தர் என்ற பெயர்க் காரணம் 
சித்தர் கன்னிமார் எழுவரை (சப்த மாதர்) தாயாக வரித்து அன்னபூரணியை ஏற்றிப் புகழ்ந்து அட்சய பாத்திரம் ஒன்றை வேண்டிப் பெற்றார். அந்த சட்டியில் இருந்து வேண்டிய அளவு உணவுப் பொருள்கள் குறைவில்லாது வந்து கொண்டே இருந்தன. அதனால் அன்பர்களுக்கு வயிறார உணவிடும் வழக்கத்தை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக சட்டி சித்தர் என்ற பெயர் இவருக்கு உண்டாயிற்று.
ஒரு சமயம் வயலில் வேலை பார்த்து விட்டு களைப்புற்றிருந்த குடியானவர்களை உணவு உண்ண அழைத்தார். அவரது சட்டியில் சிறிதளவே உணவு இருந்தது. அதைக் கண்ணுற்ற அக் குடியானவர்கள் ''இந்த சிறு கவள உணவை எப்படி எங்கள் எல்லோருக்கும் பரிமாறுவீர்'' என்றனர். சித்தர் அனைவரையும் வரிசையாக அமரச் சொல்லி முதல் ஒருமுறை சோறு பரிமாறினார். சட்டியிலோ சோறு அள்ள அள்ளப் பெருகியது. அடுத்து இரண்டாவது முறையும் அந்த உழவர்களுக்கு வயிறாரச் சோறு பரிமாறினார். இந்த விந்தை கண்டு உழவர்கள் வியப்புற்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர்.
சித்தர் தாம் வைத்திருந்த சட்டியிலிருந்து அன்பர்களுக்கு சோறு பரிமாறி வந்ததைக் கண்டு மகிழ்வுற்ற அம்மையாரின் கணவர் இராகவன், "சட்டிச் சோறு கண்ணா" என்று அன்புடன் அழைத்தார். அதுவே கண்ணப்ப சுவாமி என்று வழங்க காரணமாகியது. 
சித்தரின் பரிவு
சித்தர்கள் பேசும்போது  ஏதடா ... எங்கேயடா.. என்று ஒருமையில் பேசுவர். உரிமை கலந்த பாச உணர்வு கொண்ட பேச்சாக அவை இருக்கும். அதே போல் சட்டி சித்தரும் மற்றவர்களிடம் பேசும்போது நைனா .. என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். அறியாமல் செய்யும் பிழைகளை அருள் உள்ளத்தோடு அவர் களைய முற்பட்டார். பொற்கொல்லர் ஒருவர் கொலுசு செய்து தருவதாகக் கூறி ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் வாங்கிய பணத்தைச் செலவு செய்துவிட்டார். எனவே அவரிடம் பொன் வாங்கப் பணம் இல்லை. கொலுசு செய்யச் சொன்னவர் கேட்டபோது நாளை கொலுசு தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். சொன்னபடி நாளை கொலுசு தராவிட்டால் மானம் போய்விடும் என்று வேதனையுற்ற பொற்கொல்லர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக நஞ்சை வாங்கி வைத்திருந்த போது கடைசியாகச் சித்தரைப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. சித்தரைப் பார்க்க வந்த பொற்கொல்லரை அமர வைத்து மூன்று கூழாங்கற்களை எடுத்து பக்கத்தே வைத்தார். அவை பொன்னாக மாறின. அவற்றை கொல்லரிடம் கொடுத்து போய்யா ..  பொழச்சுக்க .. என்று சொல்லி அனுப்பினார்.
சித்தரின் இறும்பூதுகள்
ஒரு போது பிராமணர் ஒருவர் சித்தரைக் காண்பதற்காக வந்தார். உணவு வேளையில் வழக்கம் போல் அன்பர்களை உட்கார வைத்து உணவு பரிமாறினார். அந்நாட் பொழுதில் எல்லோருக்கும் மீன் குழம்பு பரிமாறப்பட்டது. இதனால் பிராமணர் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு சித்தர் கவலைப் படவேண்டாம், "நீ, எதை நினைக்கிறாயோ அது வரும் என்று கூறி பிராமணரை அமர வைத்தார். பிராமணர் எனக்கு கத்தரிக்காய் குழம்பு போதும் என்றார். மீன் குழம்பு கரண்டியை எடுத்து  இலையில் ஊற்றிய போது அது கத்தரிக்காய் குழம்பாக ஊற்றியது. இது கண்டோர் வியப்புற்றனர்.  
ஒரு சமயம் அன்பர்கள் ஆண்டார் குப்பம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் போது சித்தரையும் வருமாறு அழைத்தனர். நீங்கள் முன்னே போங்கள் நான் பின்னே வருகின்றேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அங்கே முருகப் பெருமானுக்கு திருமுழுக்காட்டு நடத்தப்பட்ட போது சித்தருக்கே திருமுழுக்காட்டு  நடப்பது போல் அவர்கள் காட்சி கண்டனர்.  அவரையே தம் நினைவில் கொண்டுள்ளதால் தமக்கு ஏற்படும் மனப்பிறழ்ச்சியே (பிரமை) இது என்று அவர்கள் நினைத்தனர். ஊர் திரும்பிய அவர்கள் நீங்கள் ஏன் வரவில்லை என அவரை வினாவினர். என் மேல் பால் ஊற்றினார்கள் அதை நீங்களும் பார்த்தீர்கள் ஆனால் நான் வரவில்லை என்று சொல்கிறீர்களே என்று கேட்டார். இவ்வகையில் பல தலங்களுக்கு செல்வதை அவர் வழமையாகக் கொண்டிருந்தார்.  
திருப்பதிக்குப் போகப் போவதாக அவர் சொல்வார். அப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அவர் திருப்பதியில் இருந்ததைப் பலர் பார்த்துள்ளனர். திருப்பதியில் பேசிய பேச்சுகளைக் கூட அவர் நினைவுபடுத்துவார். நோய்களை அகற்ற பச்சிலை மூலிகைகளைத் தருவதும் அவரது பணியாக இருந்தது.
சோறு கேட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சித்தர் செல்வது வழக்கம். ஒருபோது அவ்வாறு சோறு கேட்டு ஒரு வீட்டின் முன் நின்றார். அவ்வீட்டார் வறுமையில் தத்தளித்ததால் அவருக்கு சோறு போட முடியவில்லை. அதை அறிந்த அவர் உரூபாய் கட்டு ஒன்றை அங்கு போட்டு விட்டுச் சென்றார். 
பகைவர்களை அடியவராக்கிய நிகழ்வு
சித்தரின் கொள்கைகளுக்கு மாறுபட்ட சிலர் அவருக்கு துன்பங்களையும் தொல்லைகளையும் ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் மீது சித்தர் சிறிதளவேனும் சினந்ததில்லை. ஒரு நிலையில் அவர்கள் சித்தரை கொலை செய்துவிடுவது என்று தீர்மானங் கொண்டதை அறிந்த சித்தர் மண்சட்டியை கையில் ஏந்திக் கொண்டு தன்னந்தனியராக காட்டின் ஊடே நடந்து சொல்லலானார். கொலை நோக்கர் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அப்போது விந்தையிலும் விந்தை ஒன்று நிகழ்ந்தது. சித்தர் தம் தலை சட்டியிலும், பிற உறுப்புகள் எட்டுத் திசையிலும் சிதறி இருக்குமாறு வைத்துவிட்டார். கொல்வதற்குப் பின் தொடர்ந்தோர் நமக்கும் முன்னமேயே நமது நண்பர்கள் வேலையைச் செவ்வையாக முடித்துவிட்டார்கள் என்று மகிழ்ந்தபடித் திரும்பினர். அவர்கள் திகைப்புறமாறு சித்தர் சட்டியை ஏந்தியபடி அவர் எதிரே வந்தார். இதனால் அவர்கள் அஞ்சி நடுக்குற்றனர். இந்த நிகழ்வை இவர்கள் தம் நண்பர்களிடம் தெரிவித்த போது தாமும் அவரைப் அவ்வண்ணம் பார்த்த்தாகச் சொல்லினர். அதே நேரம் வியாசர்பாடி, செங்குன்றம், மூலக்கடை, அயனாவரம், பொன்னேரி, எண்ணூர், மீஞ்சூர், மாதவரம், மணலி ஆகிய இடங்களிலும் சித்தரைக் கண்டதாகக் கூறினார்கள். அவரது வல்லமையையும் பெருமையையும் உணர்ந்து கொண்ட கொலை முயற்சியாளர்கள் நாளாவட்டத்தில் அவரின் அடியவராகிப் போயினர். சித்தரின் நவகண்ட யோக நிலையை பல்வேறு சமயங்களில் கண்டாரும் உண்டு.
சட்டி சித்தர் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி
1961 பிலவ ஆண்டு புரட்டாசித் திங்கள் மகாளய அமாவாசை அன்று அஸ்த நட்சத்திம் கூடிய திங்கட் கிழமை நன்னாளில் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று எண்ணம் மேற்கொண்டவராக அடியவர்களிடம் அந்த நாளின் போது வந்து சேருமாறு பணித்தார். நீ மண்வெட்டி கொண்டு வா, நீ கூடை எடுத்து வா, திருமணத்திற்கு போக வேண்டும் பெரிய மாலை கொண்டு வா என்று சொன்னார்.
நான் சமாதி ஆகிவிட்டால் உடனே புதைத்து விடக் கூடாது. குழியிலேயே 41 நாள்கள் வைத்திருத்துவிட்டு 41 ஆம் நாள் நான் லிங்கமாக  மாறிய பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்யலாம் என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எவருக்கும் அப்போது விளங்கவில்லை.
குறிப்பிட்ட அந்நாளில் எல்லோரும் வந்தாகிவிட்டது. அவர்களை கவனித்த கண்ணப்ப சுவாமிகளாகிய சட்டி சித்தர் ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள் என்றதும் பாட்டு பாடச் சொல்கிறார் என நினைத்த அன்பர்கள் பாடினார்கள். சித்தர் சின்முத்திரையுடன் அமைதி ஆனார். அப்போது தான் அடியவர்களுக்கு உண்மை விளங்கிற்று. உடனே கண்ணப்ப சுவாமிகள் இருக்கும் இடத்தில் குழி தோண்டி அவரை ஆகம முறைப்படி அமர வைத்தார்கள். 41 நாள்கள் குழியை மூடாமல் பலகை கொண்டு மூடி அதன் மேல் விளக்கை ஏற்றினார்கள். 41 ஆம் நாள் பலகையை எடுத்துப் பார்த்த போது சித்தர் லிங்க வடிவாய் ஆகி இருப்பதைக் கண்டனர். சுற்றிலும் மேடை அமைத்து முடித்தனர். அதன் மேல் பின்னாளில் கண்ணப்ப சுவாமிகளின் திருவுருவச் சிலை கிழக்கு நோக்கி பதிக்கப்பட்டது.
இவரது சமாதி கோவிலில் அமாவாசை பௌர்ணமி நாள்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. கோவில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி  அளவும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகின்றது. இன்றும் மக்கள் தம் வேண்டுதல்கள் நிறைவேறவும் குறைகள் தீரவும் சட்டி சித்தர் எனும் கண்ணப் சுவாமிகளை வேண்டிக் கொண்டு அவரது சமாதியில் ஊதுவத்தி ஏற்றுகின்றனர்..

மேற்சொன்ன செய்திகள் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் சமாதி ஆசிரம சங்கத்தாரால் 2011 இல் வெளியிடப்பட்ட 50 ஆம் ஆண்டு குரு பூசை மலரில் இடம் பிடித்துள்ளன