லேபிள்கள்
- அம்மா
- அரசியல்
- அழைப்பிதழ்
- அறிக்கை
- ஆதரவு
- ஆல்பம்
- இந்தியா
- இலங்கை
- ஈழம்
- உள்ளாட்சி
- ஊடகம்
- ஊழல்
- கட்சி
- கடிதம்
- கலை
- கவிதை
- குற்றம்
- கொங்கு
- சந்திப்பு
- சம்பவம்
- சினிமா
- செய்தி
- தமிழ்
- தீரன்
- தேர்தல்.2001
- தேர்தல்.2004
- தேர்தல்.2006
- தேர்தல்.2009
- தேர்தல்.2011
- தேர்தல்.2013
- தேர்தல்.2014
- நிகழ்ச்சி
- பத்திரிக்கை
- புலனாய்வு
- வரலாறு
- விளம்பரம்
- விளையாட்டு
- ஸ்ரீலங்கா
வியாழன், 20 மார்ச், 2014
துண்டறிக்கை -1,2-அம்மா அவர்களை ஆதரித்து பிரச்சாரம்
லேபிள்கள்:
அம்மா,
ஆதரவு,
கொங்கு,
கொங்குநாடு,
தேர்தல்.2014,
நோட்டீஸ்,
a.i.a.t.m.k,
kongu
40-தொகுதிகளிலும் வெற்றி நாளைய பாரதம் அம்மா அவர்களைச்சுற்றி
இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழகத்தை சார்ந்த யாரும் பாரதப்பிரதமராக வரவில்லை
தமிழகத்தில், கடும் மின் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், மத்திய மின் தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரவில்லை.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என கனவிலும் நினைக்கவில்லை.
நெய்வேலி அனல் மின்நிலையம் தமிழக மண்ணில் நிலக்கரி வெட்டி எடுத்து,பத்தாயிரத்துக்கும் மேலான ஒப்பந்தத்தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி,நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,சுமார் 4500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து,ஆண்டுதோரும் ஆயிரம்கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது.
இப்படி நம்முடைய தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் சிறு பகுதியை நமக்கு வழங்கிவிட்டு, 80 விழுக்காட்டுக்கு மேல் கேரளா, கர்நாடகா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
இந்தப்பணிக்காக நம்முடைய விளைநிலங்களில் 200,300 மீட்டர் அகலத்தில் ராட்சசா மின்பாதைகள் அமைக்கப்படுகிறது.இதற்கு தமிழக மக்களிடம் இருந்து ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது.
நெய்வேலி, கூடங்குளம் போன்ற, மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும், மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று கூட,சிதம்பரம் கேட்கவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய, காவிரி நீரைப் பெற்றுத் தரவும், நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் முயற்சிக்கவில்லை.சிதம்பரமும் தமிழகத்தின் உரிமைகளை பெற்றிட சிறு துரும்பையும் கிள்ளிப்போட முன்வரவில்லை.
கர்நாடக, தமிழக விவசாயிகள் உட்கார்ந்து பேசினால் ஒழிய, காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் நாரிமன் புலம்பியுள்ளார். கர்நாடக அரசின் சார்பில் வாதிடுபவர், இந்த நாரிமன்.அவர்பக்கம் காவிரி பிரச்னை குறித்த வலுவான வாதங்கள் இல்லை போலும்.
இதுவரை, இரு மாநில முதல்வர்களும் 30 முறைக்கு மேல் சந்தித்து, காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதித்து விட்டனர்; பலன் பூஜ்யம். காவிரி நடுவர் மன்றம், பலமுறை கூடி ஆலோசித்து, தீர்வு கூறியது; பலன் சூன்யம். காவிரி கண்காணிப்பு ஆணையம், பலமுறை கூடி உத்தரவிட்டு விட்டது; பலன் சைபர். உச்சநீதிமன்றம், பல முறை,இரு தரப்பு விவாதங்களை பல, பெஞ்ச் அமைத்து கேட்டு, தீர்ப்பு கூறிவிட்டது; பலனே இல்லை.
விவசாயிகளும், பலமுறை கூடிப் பேசி விட்டனர். எல்லாமே, செவிடன் காதில் ஊதிய சங்காக, வீணாய் போனது.
கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்கள் நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தரவேண்டிய நியாமான தண்ணீரை தரமறுக்கிறது.இதனால் நம்முடைய விளைநிலங்களில் நெல் மற்றும் இதர உணவுப்பொருள்களின் விளைச்சல் நாளுக்கு நாள் சுருங்கிவருகிறது.வருகிறது.
மேலும் அண்டை மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களின்மீது தொடர்ந்து தடுப்பணைகள் அமைத்து, ஆண்டுதோரும் ஆயிரகணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.அங்கு உற்பத்தி செய்யப்படும் மலைபோன்ற நெல்குவியலை அழிக்கும் சந்தையாக தமிழக மக்களை பயன்படுத்தி பொருளாதாரரீதியில் தம்முடைய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி நமக்கு துரோகம் இழைத்து வருகிறது.
எனவே இவற்றை எல்லாம் மாற்றிட! தமிழகத்தை சார்ந்த ஒருவர் பாரதப்பிரதமராக வரவேண்டும். அதற்கு பன்மொழிகள் பேசும் ஆற்றலும்,துணிவுடன் செயல்படக்கூடிய திறனும் உடைய நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பாரதப்பிரதமராக வ்ரவேண்டும்.
ஏன்? தமிழகத்தை சார்ந்த நம்முடைய முதல்வர் அம்மா அவர்கள் பாரதப்பிரதமராக வரவேண்டும்.
1.ஈழத்தில் கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நியாயம் கிடைத்திடவும்,அதற்கு காரணமான கோத்தபயா ராஜபக்சே சகோதரர்களுக்கு தண்டனை கிடைத்திடவும்,இலங்கையில் தனிஈழம் அமைத்திடவேண்டும்.
3.தமிழகத்தில் செயல்படும்- மத்திய மின்தொகுப்பில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் நம்முடைய மின்தேவையை பூர்த்தி செய்தபிறகே அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
4.மத்திய மின்தொகுப்பில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் எடுத்துச்செல்லப்படுகிறது.இதற்கு நம்முடைய விவசாய விளை நிலங்களின் வழியே மின்பாதைகள் அமைக்கப்படுகிறது.இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும்.
5.அண்டை மாநிலங்கள் நமது தமிழகத்திற்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரை தர மறுத்து சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளது.நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் மீதான உரிமையை பெற்றிட வேண்டும்.
6.இந்திய ஏற்றுமதி ஜவுளி வர்ததகத்தில் கொங்கு தமிழகத்தின் பங்களிப்பு 90-விழுக்காடு உள்ளது.இதன் மூலம் மத்திய அரசுக்கு அந்நியச் செலவானி-உள்ளிட்ட இதர வரிகள் மூலம் வருவாய் ஈட்டித்தருகிறது.ஆனால் மத்திய அரசின் தவறான பொருளாதாரக்கொள்கை,தேவையற்ற வரிவிதிப்புகள்,பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தாது-உள்ளிட்ட காரணிகளால் முடக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவணிகம் சார்ந்த ஜவுளித்தொழிலை காப்பாற்றப்படவேண்டும்.
7.பெட்ரோலியப் பொருள்களின் கடும் விலை உயர்வு காரணமாக மோட்டார் போக்குவரத்து தொழில் சரிந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக அன்றாட, அவசிய நுகர்பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. இதனால் இன்னலுக்கு உள்ளாகிவரும் அப்பாவி மக்களின் வாழ்க்கைத்தரம் காப்பாற்றப்படவேண்டும்.
8.மத்திய அரசு மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வர்த்தகத்திட்டங்களுக்கு-நமது விவசாய விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பறித்து- நமது வயிற்றில் அடிக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும்.
9.வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பகாசூரப் படையெடுப்பை தடுத்து நமது சிறு வணிகர்களை பாதுகாக்க உறுதி செய்திட சுதேசிக்கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
10.ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடவும்,கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் மீன்பிடி தொழிலை காத்திடவேண்டும்.
11.முதல் இந்திய சுதந்திரப்போரை துவக்கி வைத்த தீரன்சின்னமலை,புலித்தேவன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன்,வேலுநாச்சியார்,மருது சகோதரர்கள் உள்ளிட்ட எண்ணற்ற மாவீரர்கள் நமது தமிழகமண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள்.மாவீரர்களின் வீரம் காக்க,நம் மண்ணின் மானம் காக்க நம்மில் ஒருவர் பாரதப்பிரதமராக வரவேண்டும்.
12.அந்த தகுதி வாய்ந்த நம்மில் ஒருவர் யார்?
-ஈரோட்டு மண்ணில் பிறந்து,இருட்டறையில் இருந்த தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, சென்னையிலே உறங்கிக்கொண்டிருக்கும் அய்யா! தந்தை பெரியாரின் அரசியல் வாரிசு,பட்டாடைச் சீமையிலே பிறந்து,வங்கக்கடலோரம் உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தங்கத்தலைவன் அறிஞர்.அண்ணா,நாளை உலகை ஆளவேண்டு,நாடு முழுவது மலரவேண்டும் என புரட்சிப்போர் தொடுத்து- மெரீனா கடலோரம் உறங்கிக்கொண்டிருக்கும் புரட்சிதலைவர்.எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு, பன்மொழிகள் பேசும் திறனும்,
செயல்பாட்டில் துணிவும் உடைய நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
பாரதப்பிரதமராக வரவேண்டும்.
13.தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பாரதப்பிரதமர் என சூளுரை ஏற்று- "40-தொகுதிகளிலும் வெற்றி" "நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" என முழக்கம் இட்டு தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு இரட்டை இலைசின்னத்தில் வாக்களிக்கவேண்டுமாய் பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவன்:-
தெ.கு.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி
தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை
தென் இந்திய சிறுவிசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்
தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்
லேபிள்கள்:
அ.இ.அ.தி.மு.க,
அம்மா,
அறிக்கை,
ஆதரவு,
தேர்தல்.2014,
a.i.a.t.m.k,
kongu
சனி, 1 மார்ச், 2014
தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமிக்கு தமிழக முதல்வர்,கழகப்பொதுச்செயலாளர் அம்மா புரட்சித்தலைவி அவர்கள் கடிதம்.
கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமிக்கு
தமிழக முதல்வர்,கழகப்பொதுச்செயலாளர் அம்மா புரட்சித்தலைவி அவர்கள் கடிதம்.
2014 மக்களவைத்தேர்தலில் அம்மா அவர்களுக்கு,நமது கட்சி ஆதரவு அளித்துள்ளது.அதற்கு நன்றி தெரிவித்தும்,மக்களவைத்தேர்தலில் நமது இயக்கத்தின் சார்பில் களப்பணியாற்ற வேண்டியும் அம்மா அவர்கள் அந்தக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
லேபிள்கள்:
அ.இ.அ.தி.மு.க,
அம்மா,
கடிதம்,
தேர்தல்.2014,
cm,
kongu,
modi
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)