டி.கே.தீரன்சாமி
முதல்வருக்குகடிதம்:-6 24-8-11
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச்செயலகம்,சென்னை-9
அம்மா! அவர்களின் தலைமையிலான நூறுநாள் ஆட்சி போற்றுதலுக்குரியதே! சமூகத்தில் மிகவும் நலிவடைந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ ஆயிரம் உதவித்தொகை,மீனவர்களின் மழைக்கால நிவாரணம் ரூ நான்காயிரம்,பெண்களின் திருமண உதவித்தொகை ரூ 25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்து இருப்பது! மேலும் கூடுதலாக பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம்,என அம்மா அவர்கள் ஆட்சிப்பொருப்பேற்ற முதல் நாளில் அறிவித்தார்கள்.
மூன்றாவது தினத்தில் திருப்பூர் சாயாஆலைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு சவுளித்தொழிலையும்,விளைநிலங்களை யும் பாதுகாக்க குழு அமைத்து தீர்வை எட்டும் வகையில் செயல்பட்டு கொண்டிருப்பது,மேலும் சாயாஆலைகள் சுத்திகரிப்பு பணிக்கு அரசின் சார்பில் ரூ 200கோடி கடனாக வழங்க உறுதி அளித்துள்ளது.
ரூ 232 கோடியில் கறவைமாடு,ஆடு வழங்குவது,ரூ 1250 கோடியில்கிரைண்டர்,மிக்சி,மின் விசிறி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்க இருப்பது,ரூ 912 கோடியில் மாணவ,மாணவியருக்கு லேப்டாப் வழங்குவது,மீண்டும் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்துவது,நில அபகரிப்பு பிரிவை தொடங்கி அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச்செய்திருப்பது.
மீண்டும் கொங்குநாட்டு விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலைக்கு ஓடாநிலையில் ஆடிப்பெறுக்கு விழா நடத்தி-அந்தவிழாவில் கலந்துகொள்ள எட்டு அமைச்சர்களை அனுப்பிவைத்து சிறப்பித்தது.வாழும் மனிதர்களையும்,சார்ந்த உயிர்களையும்,முடமாக்கும் எண்டொசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தமிழகத்தில் தடை விதித்தது.நெடுஞ்சாலைகளில் செல்லும் அரசுபேருந்துகள் தனியார் மோட்டல்களில் நிறுத்தவதால் பயணிகளுக்கு ஏற்படும் அபாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருப்பது.
பட்டா மாறுதலை கிராம நிர்வாக அலுவலக மட்டத்தில் முடித்துக்கொள்ள ஆவண செய்திருப்பது.ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் சுமார் ரூ ஆயிரம்கோடி விரயம் செய்து கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை உலகத்தரம் வாய்ந்த பலதுறை பல்நோக்கு சிறப்பு மருத்துவ மணையாக மாற்றி அறிவித்து இருப்பது.தமிழர்களின் வாழ்விலு ம்,கலாச்சாரத்திலும் வானவியல் மற்றும் பூகோல ரீதியாகவும்,விஞ்ஞான வழியிலும் நமது முன்னோர்களால் தொடர்ந்து அட்டவணைப்படுத்திய தமிழ்புத்தாண்டு சித்திரை 1 என்பதை மீண்டும் தமிழர்களின் தொடக்க தினமாக அறிவித்திருப்பது!
போன்ற அரிதினும்,அரிய சரித்திரச்சிறப்பு வாய்ந்த செயல்பாடுகளை நூறுநாட்களில் செயல்படுத்த முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது! ஒவ்வொரு நாளும் அம்மா அவர்கள் அறிவிக்கும் மதிப்பு மிக்க திட்டங்களை தமிழகமக்கள் மனமகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டிவருகிறார்கள்.
தொடரும் தமிழக முதல்வரின் சாதனைகளுக்கும்,அமைச்சர் பெருமக்களுக்கும்,துறையின் செயலர்களுக்கும்,சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் நன்றியினையும்,வாழ்த்துக்களையு ம் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
இவன்:-
டி.கே.தீரன்சாமி
மாநிலஅமைப்பாளர்.
குறிப்பு:-
எமது கொங்குதமிழர்பேரவை கடந்த 10-ஆண்டுகளில் நடைபெற்ற 4-பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்கு தமிழர் கட்சி எனும் அரசியல் தளமாக மாற்றி! அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து எமது சொந்தச்செலவில் கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.என்பது குறிப்பிடத்தக்கது!
அம்மா அவர்கள் முதல்வர் பொருப்பேற்ற பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை தங்களிடம் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
இவன்:-
டி.கே.தீரன்சாமி
மாநில அமைப்பாளர்
தமிழக முதல்வர்,அனைத்துறையின் அமைச்சர்கள்,அரசுசெயலர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,காவைதுறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம்!