சனி, 2 நவம்பர், 2013

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்-


அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்- என்ற செய்தி தி.தமிழ் ஹிந்து, 4தமிழ்மீடியா போன்ற ஊடகங்களில் வெளியானது. அதற்கு எனது கருத்துரை:-

தெற்குஆசியப் பிராந்தியத்தில்! ஏன்? உலகஅரங்கில் இந்தியத்துணைக்கண்டம் சக்திமிக்க வல்லரசாக வளர்ந்து வருகிறது.இது அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளின் கண்ணை உருத்துகிறது.

இவர்களின் கைத்தடி பாக்கிஸ்தான்.அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கட்டுப்பாட்டில் செயல்படும் சில தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் இறங்கியிருக்கலாம்.

ஏனெனில் தமிழகமுதலவர் அம்மா அவர்கள் எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் அடுத்த பிரதமமந்திரிக்கான பார்வையில் உள்ளவர்.

மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப்போன்று உறுதியான,அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர் நமது முதல்வர் அம்மா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது முதல்வர் அம்மா அவர்கள் இந்தியாவின் தலைமை மந்திரியாக வந்தால்! ஆட்டம்காட்டும் அண்டை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்.

அடுத்த பிரதமர் பட்டியலை சீர்குலைக்கும் ஒருபகுதியாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் -உள்நாட்டு மற்றும் சர்தேச ஊடகங்கள்,வலைதளப்பதிவர்கள்,அரசியல் கட்சிகள் பாரபட்சமில்லாமல் கண்டிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகள் இது போன்ற கேக்கர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

தமிழக காவல் துறையினரும் விரைவில் கேக்கர்களை முடக்குவார்கள் என நம்புவோம்.

தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,
கொங்குதமிழர்கட்சி,
தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை மற்றும் தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்.
http://theeranchinnamalai.blogspot.in  http://kongutamilar.blogspot.in

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி-1சூரனின் வதம், தீபாவளி-2 இராசபக்சேயின் வதம் ?

 தீபாவளியைப்பற்றி இதிகாசங்கள் என்ன சொல்கின்றது.

கிருட்டிண பகவானின் இரண்டாவது மனைவியும்-நிலமகளுமான சத்தியபாமவின் புதல்வன் நரகாசூரன்.தன்னைப்பெற்ற தன் தாயால் மட்டுமே தன் உயிரை எடுக்க முடியும் என்ற வரத்தை பெற்றவன்.தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற இருமாப்பில் மக்களுக்கு எண்ணற்ற அநீதிகளை இழைத்து வந்தான்.அரக்க குணமும்,அகம்பாவம் அவனுடைய இரண்டு கண்களாகும்.

மக்களின் கொடுமைகளை கண்டுணர்ந்த கிருட்டிணபகவான் நீதியை நிலைநாட்ட வேண்டி தனது மனைவி சத்யபாமவுடன் சென்று நரகாசூரனை வதம் செய்கிறார்.மக்களுக்கு நீதியைப்பெற்றுத்தருகிறார்.

நரகாசூரன் உயிர் பிரியும் தருவாயில் அகம்பாவம் ஒழிந்து,அநீதி என்னும் இருள்நீங்கி-நீதி என்னும் பேரொளி பிறந்து மனம் திருந்துகிறான்.அந்தக்கணத்தில் சூரன் "தான் இறக்கப்போகும் இந்த நாளை உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்வுடன் தீபங்கள் ஏற்றி கொண்டாடி எல்லா வளங்களையும் பெற்று நழ்வாழ்வு வாழவேண்டும்" என்று கிருட்டிணணிடம் வேண்டிக்கொண்டான்.இது புரணாங்களின் காலத்துக்கு உட்பட்டது.

நரகாசூரனைவிட கொடியவனாக இலங்கையின் இராசபக்சே இரத்த வெறிபிடித்து ஈழத்தமிழர்களை கொன்று குவித்து,பெண்பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்புகுத்தி சொல்லில் வடிக்கமுடியாத இன்னல்களை ஈழத்தில் இழைத்து வருகிறான்.

கிருட்டிண பகவான்-மீண்டும் மேதகு.பிரபாகரன் அவதாரம் எடுத்து இராசபக்சே என்னும் அரக்கனை வதம் செய்யவேண்டும்.அந்தநாள் நிச்சயம் நடக்கும்.அந்தநாள் ஒட்டுமொத்த உலகத்தமிழர்களால் இரண்டாவது தீபாவளியாகக்கொண்டாடப்படும்.

சரி தீபாவளி- தீபம்+ஒளி= தீபாவளி மொத்தத்தில் தீபம் என்பது மண்ணால் செய்யப்பட்ட விளக்கின் ஊடே-நீர்த்தத்துவமான எண்ணெய்யை ஊற்றி அதில் நெறுப்பு ஏற்றி வெளிவரும் சுடரொளி காற்றில் கலந்து ஆகாய மார்க்கத்தில் பயணிக்கிறது.தீபஒளியின் ஊடுருவல் காந்தசக்தியாக மிளிருகிறது.மக்களுக்கு நலன் பயக்கிறது.

நிலம்,நீர்,நெறுப்பு,காற்று,ஆகாயம்-என்ற பஞ்ச பூதங்களின் கலைவையே நமது உடல் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள உலகம். இது மெய்ஞாணமும்-விஞ்ஞாணமும் ஒப்புக்கொள்ளக்கூடிய செய்தி.தீபஒளித் திருநாளம்- தீபாவளி பஞ்ச பூதங்களின் வழிபாட்டை நமக்கு உணர்த்துகிறது.

இந்த நாளை இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்கள் என்று சாதீ-மதங்களின் பாகுபாடு இன்றி அனைவரும் சிறப்புடன் கொண்டாடிவருகிறார்கள்.

எண்ணெய்தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து,மத்தாப்புக்கொளுத்தி,தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பு நிகழ்வுகளை கண்டுகளித்து, இன்று வெளியாகும் திரைப்படங்களைப்பார்த்து- சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மனமகிழ்வுடன் அனைவரும் சிறப்புடன் தீபாவளியை எடுத்துச்செல்கிறார்கள்.இந்த நாளில்தான் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்) கைநிறையக் கிடைக்கிறது.

உலகத்தமிழர்களுக்கு இன்னொரு செய்தி. இதே நாளில் 1903 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி,பரிதிமாற்கலைஞர் என்று போற்றப்பட்ட வி.கோ.சூரியநாரயண சாஸ்த்திரிகள் இறந்த தினமாகும்.அய்யா! பரிதிமாற்கலைஞரை நெஞ்சில் ஏந்தி தீபத்திருநாளுடன் ஒன்று கலப்போமாக! கூடுதலாக 2007-ஆம் ஆண்டு சிறீலங்காவின் வான்படை தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொருப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் இதே நாளில்தான்.

1577-ஆம் ஆண்டு இதே நாளில் பொற்கோயில் கட்டுமானப்பணிகள் துவங்கியது.சீக்கியர்கள் இந்த நாளை சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.மகாவீரர் நிர்வாணம் அடைந்த இந்த நாளை சமணர்களும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.

எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி
மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

தலையங்கம்-கொங்குதமிழர்பேரவை


எமது கொங்குதமிழர்பேரவையின் சார்பில் காங்கயம்வட்டம்,சிவன்மலையில் அமைந்துள்ள தீரன்சின்னமலையின் பட்டாலிப்போர்ப்பாசறை நினைவாக,தைப்பூசத்தேர்திருவிழா அன்று-2002ம் ஆண்டு முதல்-2009ம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் வெளியிடப்பட்ட நினைவு மலரில் பதிவு செய்யப்பட்ட தலையங்கம் பகுதியை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.இதில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துரைகள் 2008ம் ஆண்டு சூழலுக்கு ஏதுவாக எழுதப்பட்டது.நடப்பு நிலைக்கு அது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் ஆண்டு தீரன்சின்னமலை பட்டாலிப்போர்ப்பாசறை வீரவழிபாட்டு விழாவின் நினைவு மலரில் உங்களை சந்திப்பதில் எமக்கும் எமது கொங்கு தமிழர் பேரவையின் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கதர்சட்டை,ஒரு கருப்புச்சட்டை இந்த மும்மூர்த்திகளால் சமூகநீதி மறுக்கப்பட்டு அநீதிக்கு ஆளான எமைப்போன்ற இளைஞர்களால் இளைத்தவனுக்கு ஒரு நீதி!வலுத்தவனுக்கு ஒரு நீதியா? நீதி என்பது சமமானது! அனைவருக்கும் பொதுவானது! மரணம் ஒருமுறை நீதிக்காக மல்ரட்டும்! என்ற முழகத்துடன் கொங்கு தமிழர் பேரவை புரட்சிப் பயணம் தொடங்கிய ஆண்டு 2001.

இன்றைக்கு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் எமது கொங்குதமிழர் பேரவையின் சாதனைகளை எந்த நிலையிலும் விளம்பரம் செய்து வியாக்கியானம் பாடவில்லை.எந்த ஒரு இயக்கமும் தாம் கடந்த வந்த பாதைகளை வரலாற்றில் பதிவு செய்து பட்டியல் இடவேண்டும் என்ற சான்றோர் பெருமக்களின் அறிவுரையின்பேரில் கொங்குதமிழர்பேரவை கடந்த வந்த பாதைகள் எனும் தலைப்பில் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி நீதியை வென்றெடுத்த சில நிகழ்வுகளை இந்த மலரில் பதிவு செய்து உள்ளோம்.

தீரன்சின்னமலையின் கொங்குபடைக்கு யுத்ததளவாடங்களை உருவாக்கும் பட்டறையாகவும்,போர்வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூடாரமாகத்திகழ்ந்த பட்டாலிப்போர்ப்பாசறை சிவன்மலை அனுமந்தராயர் சுவாமி திருக்கோவிலின் வடபுறம் அமைந்துள்ளது. போர்ப்பாசறையின் நினைவாக தைப்பூசத் தேர்த்திருவிழா அன்று விழா எடுத்து சின்னமலையின் வரலாற்றுச் சுருக்கத்தை மலராக பதிவுசெய்து சமுதாயத்தலைவர்களை அழைத்து வெளியீடு செய்து சிறப்பித்து வருகிறோம்.விழாவில் கிராமப்புறப்பள்ளி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திறன் ஆய்வுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி பரிசுகளையும்,சான்றுகளையும் வழங்கி மாணவச்செல்வங்களை ஊக்குவித்து வருகிறோம்.

கொங்கு சமூகம் எங்கு செல்கிறது? நமக்கு நாமே சுய ஆய்வு செய்து சில கருத்துக்களை பரிமாறி உள்ளோம். இவற்றின் ஊடாக பொதிந்த கருத்துக்களின் கூர்மை சிலரது மனதை புண்படுத்தும்.ஏனெனில் அவர்கள் கொங்கு சமூகத்தை புண்ணாக்கி,புரையோடச்செய்த இழி செயல்களை,நமக்கு,நாமே இழைத்துக்கொண்ட வன்கொடுமைகளை, புரிதலின் பாதையில்,புதிராகச்செல்லும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளோம். சமூகப் போராளி என்ற பெயரில் கபட வேடமிட்டு களவு செய்யும் ஒரு சில கயவர்கள் திருந்த வேண்டும்.இல்லையெனில் வருந்தி விலக வேண்டும்.

சமூகத்தலைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாக, குமுறும் எரிமலையாக, சுழலும் சுனாமியாக,பாயும் புலியாக,வாழும் தீரன்சின்னமலையாக வளம் வரவேண்டும்.பணத்தாலும்,பகட்டான மகிழ் ஊர்திகள்சூல பவனி வருவதால் மட்டும் தலைவர்கள் ஆகிவிடமுடியாது.

தீரன்சின்னமலை,மகாத்மா,நேதாசீ,வீரசவார்கர்,தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,காமராசர்,ராசாசீ,கோவை செழியனார் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் தீர்க்கதரிசனம்,எளிமை,எளியோரிடம் அரிதாரம் பூசாதஉறவு,வறுமை,தியாகம்,கடின உழைப்பு,என எண்ணிலடங்காப் பண்புகளை தன்னகத்தே உயர்த்தி பிடித்தவர்கள்.மேலும் மனிதர்களை கடந்த மகத்தான காந்த ஆற்றல்களையும்,இயற்கையின் நிர்மான சக்திகளையும் தமது ஆழ்மனதில் பிறப்பின் ஊடாக வார்த்து எடுத்தவர்கள்.

மலைக்கவைக்கும் எண்ண ஆற்றல்களையும்,திகைக்கவைக்கும் தியாகங்களையும்,மரணத்தை முத்தமிடும் துணிவைக்கொண்ட களப்போராளிகள் மட்டுமே மனிதன் தோன்றிய காலம்முதல் இன்றுவரை தலைமைப்பொறுப்பில் அமர்ந்துள்ளார்கள்.

இன்று தலைமை என்பது தற்குறிகளின் கூடாரமாகவும்,சமூகத்தை அடகுவைத்து நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் புரட்டுவாதிகளின் புகலிடமாகவும்,வேளீர்சமூகத்தின் வேந்தர்கள் என்றும்,வேங்கைகள் என்றும்,சமூகத்திற்கு வெட்டி முறிப்பவர்கள் என்றும்,மேடைகளில் மார்தட்டி நடிகைகளின் முந்தானையில் முகம் துடைத்து,அயல்நாட்டு மதுபானங்களில் மூழ்கி,சூதாட்டத்தில் சுற்றித்திரிந்து உல்லாசமோகங்களில் சல்லாபக் கூத்தாடும் பொல்லாவிகளே நீங்களா கொங்கு சமூகத்தின் தலைவர்கள்? நமது சமூகத்தின் இளையபாரதம் இளஞ்சிரிப்புடன் ஒருசில தலைமைக் கூத்தாடிகளின் தள்ளாட்டத்தைக்கண்டு வெட்கி தலைகுனிந்து விலகிச்செல்கிறது.

மேற்கண்ட செய்திகள் நமது சமூகத்தின் மேல்தட்டு,நடுதட்டு,கீழ்தட்டு மக்களிடம் ஆய்ந்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்கள்.

விரல்விட்டும் எண்ணும் வகையில் ஒருசிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி உள்ளோம்.யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.அந்த ஒரு சிலரும் திருந்தி சிறப்புடன் செயல்பட்டால் நாம் பாராட்டி,வாழ்த்தி எழுதத்தயாராக இருக்கிறோம்.

சிவன்மலையை சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள்,கொங்கு சூரியன்,சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை எனும் தலைப்புகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 21 ஆயிரம் பிரதிகளை சிறப்பு மலராக தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறோம்.

தலையங்கம்-கொங்குதமிழர்பேரவை


எமது கொங்குதமிழர்பேரவையின் சார்பில் காங்கயம்வட்டம்,சிவன்மலையில் அமைந்துள்ள தீரன்சின்னமலையின் பட்டாலிப்போர்ப்பாசறை நினைவாக,தைப்பூசத்தேர்திருவிழா அன்று-2002ம் ஆண்டு முதல்-2009ம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் வெளியிடப்பட்ட நினைவு மலரில் பதிவு செய்யப்பட்ட தலையங்கம் பகுதியை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.இதில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துரைகள் 2008ம் ஆண்டு சூழலுக்கு ஏதுவாக எழுதப்பட்டது.நடப்பு நிலைக்கு அது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் ஆண்டு தீரன்சின்னமலை பட்டாலிப்போர்ப்பாசறை வீரவழிபாட்டு விழாவின் நினைவு மலரில் உங்களை சந்திப்பதில் எமக்கும் எமது கொங்கு தமிழர் பேரவையின் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கதர்சட்டை,ஒரு கருப்புச்சட்டை இந்த மும்மூர்த்திகளால் சமூகநீதி மறுக்கப்பட்டு அநீதிக்கு ஆளான எமைப்போன்ற இளைஞர்களால் இளைத்தவனுக்கு ஒரு நீதி!வலுத்தவனுக்கு ஒரு நீதியா? நீதி என்பது சமமானது! அனைவருக்கும் பொதுவானது! மரணம் ஒருமுறை நீதிக்காக மல்ரட்டும்! என்ற முழகத்துடன் கொங்கு தமிழர் பேரவை புரட்சிப் பயணம் தொடங்கிய ஆண்டு 2001.

இன்றைக்கு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் எமது கொங்குதமிழர் பேரவையின் சாதனைகளை எந்த நிலையிலும் விளம்பரம் செய்து வியாக்கியானம் பாடவில்லை.எந்த ஒரு இயக்கமும் தாம் கடந்த வந்த பாதைகளை வரலாற்றில் பதிவு செய்து பட்டியல் இடவேண்டும் என்ற சான்றோர் பெருமக்களின் அறிவுரையின்பேரில் கொங்குதமிழர்பேரவை கடந்த வந்த பாதைகள் எனும் தலைப்பில் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி நீதியை வென்றெடுத்த சில நிகழ்வுகளை இந்த மலரில் பதிவு செய்து உள்ளோம்.

தீரன்சின்னமலையின் கொங்குபடைக்கு யுத்ததளவாடங்களை உருவாக்கும் பட்டறையாகவும்,போர்வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூடாரமாகத்திகழ்ந்த பட்டாலிப்போர்ப்பாசறை சிவன்மலை அனுமந்தராயர் சுவாமி திருக்கோவிலின் வடபுறம் அமைந்துள்ளது. போர்ப்பாசறையின் நினைவாக தைப்பூசத் தேர்த்திருவிழா அன்று விழா எடுத்து சின்னமலையின் வரலாற்றுச் சுருக்கத்தை மலராக பதிவுசெய்து சமுதாயத்தலைவர்களை அழைத்து வெளியீடு செய்து சிறப்பித்து வருகிறோம்.விழாவில் கிராமப்புறப்பள்ளி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திறன் ஆய்வுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி பரிசுகளையும்,சான்றுகளையும் வழங்கி மாணவச்செல்வங்களை ஊக்குவித்து வருகிறோம்.

கொங்கு சமூகம் எங்கு செல்கிறது? நமக்கு நாமே சுய ஆய்வு செய்து சில கருத்துக்களை பரிமாறி உள்ளோம். இவற்றின் ஊடாக பொதிந்த கருத்துக்களின் கூர்மை சிலரது மனதை புண்படுத்தும்.ஏனெனில் அவர்கள் கொங்கு சமூகத்தை புண்ணாக்கி,புரையோடச்செய்த இழி செயல்களை,நமக்கு,நாமே இழைத்துக்கொண்ட வன்கொடுமைகளை, புரிதலின் பாதையில்,புதிராகச்செல்லும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளோம். சமூகப் போராளி என்ற பெயரில் கபட வேடமிட்டு களவு செய்யும் ஒரு சில கயவர்கள் திருந்த வேண்டும்.இல்லையெனில் வருந்தி விலக வேண்டும்.

சமூகத்தலைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாக, குமுறும் எரிமலையாக, சுழலும் சுனாமியாக,பாயும் புலியாக,வாழும் தீரன்சின்னமலையாக வளம் வரவேண்டும்.பணத்தாலும்,பகட்டான மகிழ் ஊர்திகள்சூல பவனி வருவதால் மட்டும் தலைவர்கள் ஆகிவிடமுடியாது.

தீரன்சின்னமலை,மகாத்மா,நேதாசீ,வீரசவார்கர்,தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,காமராசர்,ராசாசீ,கோவை செழியனார் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் தீர்க்கதரிசனம்,எளிமை,எளியோரிடம் அரிதாரம் பூசாதஉறவு,வறுமை,தியாகம்,கடின உழைப்பு,என எண்ணிலடங்காப் பண்புகளை தன்னகத்தே உயர்த்தி பிடித்தவர்கள்.மேலும் மனிதர்களை கடந்த மகத்தான காந்த ஆற்றல்களையும்,இயற்கையின் நிர்மான சக்திகளையும் தமது ஆழ்மனதில் பிறப்பின் ஊடாக வார்த்து எடுத்தவர்கள்.

மலைக்கவைக்கும் எண்ண ஆற்றல்களையும்,திகைக்கவைக்கும் தியாகங்களையும்,மரணத்தை முத்தமிடும் துணிவைக்கொண்ட களப்போராளிகள் மட்டுமே மனிதன் தோன்றிய காலம்முதல் இன்றுவரை தலைமைப்பொறுப்பில் அமர்ந்துள்ளார்கள்.

இன்று தலைமை என்பது தற்குறிகளின் கூடாரமாகவும்,சமூகத்தை அடகுவைத்து நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் புரட்டுவாதிகளின் புகலிடமாகவும்,வேளீர்சமூகத்தின் வேந்தர்கள் என்றும்,வேங்கைகள் என்றும்,சமூகத்திற்கு வெட்டி முறிப்பவர்கள் என்றும்,மேடைகளில் மார்தட்டி நடிகைகளின் முந்தானையில் முகம் துடைத்து,அயல்நாட்டு மதுபானங்களில் மூழ்கி,சூதாட்டத்தில் சுற்றித்திரிந்து உல்லாசமோகங்களில் சல்லாபக் கூத்தாடும் பொல்லாவிகளே நீங்களா கொங்கு சமூகத்தின் தலைவர்கள்? நமது சமூகத்தின் இளையபாரதம் இளஞ்சிரிப்புடன் ஒருசில தலைமைக் கூத்தாடிகளின் தள்ளாட்டத்தைக்கண்டு வெட்கி தலைகுனிந்து விலகிச்செல்கிறது.

மேற்கண்ட செய்திகள் நமது சமூகத்தின் மேல்தட்டு,நடுதட்டு,கீழ்தட்டு மக்களிடம் ஆய்ந்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்கள்.

விரல்விட்டும் எண்ணும் வகையில் ஒருசிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி உள்ளோம்.யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.அந்த ஒரு சிலரும் திருந்தி சிறப்புடன் செயல்பட்டால் நாம் பாராட்டி,வாழ்த்தி எழுதத்தயாராக இருக்கிறோம்.

சிவன்மலையை சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள்,கொங்கு சூரியன்,சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை எனும் தலைப்புகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 21 ஆயிரம் பிரதிகளை சிறப்பு மலராக தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறோம்.

வியாழன், 10 அக்டோபர், 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க விற்கு கொங்குதமிழர்கட்சி ஆதரவு-மாநிலத்தலைவர் தெ.கு.தீரன்சாமி-அம்மா அவர்களுக்கு கடிதம்

                                                                                                                                   தேதி:10-10-2013

பொருள்:-
         ஏற்காடு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித்தலைவி      அம்மா அவர்களின் தலைமையை ஆதரிப்பது தொடர்பாக...

மாண்புமிகு தமிழக முதல்வர், கழகப்பொதுச்செயலாளர் மற்றும் 2014ன் பாரதப்பிரதமர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.

இப்பவும் எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழநாடு தீரன்சின்னமலை பாசறையின் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சீரிய தலைமையில் செயல்படும் தமிழக அரசின் பல்துறை சாதனைகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திசம்பர் 4ம் தேதி நடைபெறும் ஏற்காடு சட்டமன்றப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதென எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

எமது ஆதரவு நிலைபாட்டை தங்களிடம் நேரில் தெரிவிக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு:-
               கடந்த 2001 முதல் நடைபெற்ற 5பொதுத்தேர்தல்கள்,உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கடந்த 13 வருடங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 07-04-2013 அன்று அம்மா அவர்களை நேரில் சந்தித்து 2011 சட்டமன்றப் பேரவைத் தேர்தல் ஆதரவினை தெரிவித்தோம்.தொடர்ந்து கொங்கு தமிழகத்தின் 32 சட்டமன்றப் பேரவை தொகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டோம் என்பதை தங்களின் மேலான கவனதிற்கு கொண்டு வருகிறேன்.                                
        
                                                                                                                        இப்படிக்கு
                                                                                                              தெ.கு.தீரன்சாமி,
                                                                                                         மாநிலத்தலைவர்

வியாழன், 26 செப்டம்பர், 2013

மோடியின் இளம்தாமரை-ஜெயிக்குமா?


மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள்! தமிழகத்திற்கு வருகை தந்து இளம் தாமரை மகாநாட்டை தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்...

 முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.இந்தியா என்பது குஜராத் அல்ல! பெரும்பான்மை குஜராத்தி இன மக்களால் கட்டமைக்கப்பட்ட ஆசியத் துணைக்கண்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் குஜராத்.

சுமார் பத்துக்கு மேற்பட்ட மதங்களும்,500 க்கும் மேற்பட்ட சாதீகளும்,30க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும்
பலவகையான இனக்குழுக்களால்,பன்முகத்தன்மையால்
கட்டமைக்கப்பட்டதுதான் இந்தத் துணைக்கண்டம்.

உதாரணத்திற்கு தமிழகத்தின் கலாச்சாரம் வேறு,குஜராத்தின் கலாச்சாரம் வேறு,தமிழகத்தில் கூட கொங்கு நாட்டின் பண்பாடு வேறு,தென் தமிழகம்,வட தமிழகத்தின் பண்பாடுகள் ஒன்றுக்கு மற்றது மாறுபட்டதாக உள்ள்து.

பரந்து விரிந்த இந்தத் துணைகண்டத்திற்கு அகண்ட சிந்தனை கொண்ட ஒருவரால் மட்டுமே தலைமை மந்திரியாக பொருப்பு ஏற்று வழி நடத்த முடியும்.அத்தகைய தகுதி மோடிக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியது.அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கே உள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இந்தியத் தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்மிகை மாநிலமாக சொல்லப்படும் அங்கு பல லட்சக்கணக்கான கிராமங்கள் மின் வசதி இல்லாமல் இருளில்
மூழ்கியுள்ளது.வேளாண்மை தன்னிறைவு பெற்றதாக சொல்லப்படும் அங்கு விவசாயிகளின் தற்கொலை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம்,பீகார்,திரிபுரா போன்ற மாநிலங்கள முன்னோக்கி செல்கின்றன.

தணிக்கைத்துறை கணக்கு இப்படி இருக்கும்பொழுது! மோடியின் 7000 க்கும் மேற்பட்ட சைபர் மீடியா வெப்சைட்கள் குஜராத்தைதூக்கிப்பிடிக்கின்றன.விளம்பரங்களையும்,ஆடம்பரங்களயும் முழுமையாக நம்பி களம் இறங்குவது ஆபத்தானது.

நிர்வாகத்திறமை,வளர்ச்சிப்பாதை என்று பார்த்தால் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமை மந்திரி பதவிக்கு தகுதியானவர் என்று சொன்னால் அது மிகையாகது.

நமது தேசத்தந்தை மகாத்மா எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர்.அந்த மகாஜீவன் அவதரித்த மண்ணின் மைந்தர் மோடி அவர்கள் அதற்கு மாறுபட்டவராக இருக்கக்கூடாது.

நமது தேசமும்,தேசீயமும்,இந்த மண்ணில் வாழும் மக்களும் லஞ்சம்,ஊழல் இல்லாத எளிமையான தலைமையை எதிர்நோக்கி காத்திருப்பதை தலைவர்கள் கவனத்தில் எடுத்துகொண்டு பூர்த்தி செய்தால் வாழ்த்துக்கள்.

திங்கள், 23 செப்டம்பர், 2013

கலிங்கராயனாருக்கு சிலை-முதல்வர் அம்மாஅவர்களுக்கு கொங்குதமிழர்கட்சி மாநிலத்தலைவர் தெ.கு.தீரன்சாமி நன்றி தெரிவித்து கடிதம்


பொருள்:
ஈகை பெருந்தகையார் "காலிங்கராயனார்" அவர்களுக்கு 
சிலை அமைத்திட உத்தரவிட்ட அம்மா அவர்களுக்கு  நன்றி தெரிவிப்பது தொடர்பாக.
மாண்பு மிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.
    1991 முதல் புரட்சித் தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தபோதும் சரி , இல்லாதா போதும் சரி கொங்கு தமிழகத்திற்கும், கொங்கு சமுதாய மக்களுக்கும் எண்ணற்ற ,சொல்லில் வடிக்க முடியாதா செயற்கரிய சாதனைகளை தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளீர்கள் .

    அதன் ஒரு பகுதியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்ணின் வறட்சி  மிக்க ஒரு பகுதியை பொன்விளையும் பூமியாக மாற்றிக்  காட்டவேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையில் சுமார் 100 மைல்கல்  தொலைவிற்கும் மேலாக தனது சொந்த செல்வத்தை கரைத்து, சொந்த மக்களின் உழைப்பை தந்து காலிங்கராயன் வாய்க்கால் அமைத்தார். 

தானும் தனது குடும்பமும் அதன் விளைச்சலில் பயன்படக் கூடாது  என்ற லாப நோக்கமற்ற ஈகைத்தன்மையில் செயலாற்றியவர் தியாகி.காலிங்கராயனார் அவர்கள். அப்படி பட்ட தியாகச் செம்மலுக்கு ஈரோடு மாவட்டம் பவானியில் சிலை அமைத்திட ஆவண  செய்து உத்தரவு பிறப்பித்த மாண்பு மிகு அம்மா அவர்களுக்கு  மக்களின் சார்பிலும், கொங்கு தமிழகத்தின் சார்பிலும் மீண்டும்,மீண்டும் நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன்.
                                                              இவன்:-
                                                      டி.கே.தீரன்சாமி 
                                                 (  மாநிலஅமைப்பாளர்.)
 குறிப்பு:-                                      
கடந்த 13 -ஆண்டுகளில் நடைபெற்ற 5 -பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து எமது சொந்தச்செலவில் கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.என்பது குறிப்பிடத்தக்கது!

அம்மா அவர்கள் முதல்வர் பொருப்பெற்ற பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை தங்களிடம் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

புதன், 11 செப்டம்பர், 2013

தமிழ் தேசியப்போராளியின் விடுதலைக்கனவு..


அம்மா சிங்கம் சீறீடவே..அடிமைத்தலைகளை அறுத்திடவே..

           
நம் தாகம் முழுவதும் தனிந்திடவே..சிதறிய தலைகள் சேர்ந்திடவே..                

சிங்கள மோகம் ஒழிந்திடவே..சிறு நரிக்கூட்டம் தொலைந்திடவே..

நம் தலைகளின் வேசம் கலைந்திடவே..மண்ணின் மானம் காத்திடவே..                                                                                                  

தமிழன் ரோசம் பிறந்திடவே..புலிகளின் இரத்தம் பாய்ச்சிடவே..

வீரம்..வீரம்..வீரம் பொங்கிடவே..வேண்டா விதியை முறித்திடவெ..

வெற்றிக் கோட்டைத் தொட்டிடவே..புயலின் வேகம் சுழன்றிடவே..

புதியபாதை கண்டிடவே..புழுக்களின் கோட்டையை அழித்திடவே..

படைகளின் வேட்டை தொடர்ந்திடவே..பாரில் தனி ஈழம் கண்டிடவே..                                                                                                    

அகண்ட தமிழிகம் உதித்திடவே..பாரெங்கும் புலிக்கொடிகள் பறந்திடவே..பறந்திடவே..பறந்திடவே...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மாநிலதலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் கொங்குதமிழர்கட்சியினர் தீரன்சின்னமலைக்கு வீரவணக்கம்


தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு,கொங்குதமிழர்கட்சி,
தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மாவீரன் பிறந்த காங்கயம் மேலப்பாளையத்தில் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.

தலைப்பைச் சேருங்கள்

காங்கயம்,சிவன்மலையில் உள்ள மாவீரனின் பட்டாலிப் போர்பாசறையில் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை  போன்ற அமைப்புகளின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் இந்திய விடுதலைப் போராட்ட மாவீரன்,கொங்குநாட்டுச் சிங்கம் இரத்தினம் தீரன்சின்னமலையின் 208-வது நினைவு தின வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

முன்னதாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,மேலப்பாளையத்திலும்-மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம்,சங்ககிரி துர்கத்திலும்,மாவீரன் கோட்டை,கொத்தளங்கள் அமைத்து வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்த ஈரோடு மாவட்டம்,அறச்சலூர்-ஓடாநிலையிலும்,ஆயிதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட திருப்பூர் மாவட்டம்,கங்கயம் வட்டம்,சிவன்மலை பட்டாலி போர்ப்பாசறை நுழைவு வாயில் -உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மாவீரன் தீரன்சின்னமலைக்கு மாலை,மரியாதை,வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்சிக்கு நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமை தாங்கினார்.கொங்குதமிழர்கட்சியின் மாநிலப்பொதுச்செயளாலர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.இராசேந்திரன்,மாநில தலைமை நிலையச்செயளாலர் டி.எஸ்.சண்முகம்,துணைப்பொதுச்செயளாலர் பி.கே.பரமசிவம்.பொருளாளர்கள் பி.ஜோதி,பி.என்.பாலு,மாநில தலைமை நிலையச் செயளாலர் டி.எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.நந்தகுமார்,திருப்பூர்மாவட்ட அமைப்பாளர் ஆர்.சண்முகம்,கோவை மாவட்ட அமைப்பாளர் குறுக்கத்தி பாலசுப்பிரமணியம்,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் மாநிலபொதுச்செயளாலர் கே.எஸ்.செல்வராஜ்,மாநில துணைப்பொதுச்செயளாலர் தாராபுரம்,சிபி அரசி தங்கவேல்,அதன் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் கே.கே.திருநாவுக்கரசு,மாவட்ட செயளார் கே.எஸ்.கார்த்திக்,வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பாளர் சு.இரவி,பாரதீய ஜனதாக்கட்சியின் தாராபுரம் ஒன்றியப்பொருப்பாளர் ஜெ.குமாரவேல் மற்றும் பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

ஞாயிறு, 24 மார்ச், 2013

திருகோணமலை அழிக்கப்படும் தமிழர் கலாச்சாரம்.

திருகோணமலை மாவட்டத்தின் முகம் மாறி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் தொடங்கிய போர், முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்ததும், தமிழர் அடையாளத்தை அழித்து வருகின்றது.

விடுதலைப்புலிகளின் இராணுவப் பலம் சிதைக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் கலாசாரமும் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போராட்டம் இலங்கை அரசினால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் பௌத்த அடையாளங்கள் தமிழர் நிலங்களில் முளைக்கத் தொடங்கியுள்ளன.
 
ஈழ வரலாற்றில் திருகோணமலை மண்ணுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோணேசர் ஆலயம், கன்னியா வெந்நீர் ஊற்று, வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம், சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், கங்குவேலி அகத்திய தாபனம் என்பன தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அம்சங்கள். இந்தச் சான்றுகள் திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் வரலாற்றை புராண இதிகாச காலங்களுக்கு இட்டுச் செல்கின்றது.
 
இதன் மூலம் தமிழர்களுக்கும், திருகோணமலைக்கும் உள்ள சிறப்பு வெளிப்பட்டு நிற்கின்றது. நீண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் வாழ்வியலில் போர் முடிவடைந்ததன் பின்னரான கடந்த மூன்று வருடங்களில் வரலாற்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
சைவ மக்களின் புனித தலமான கோணேசர் ஆலயம் இன்று சுற்றுலாத்தலம் போன்று மாற்றம் அடைந்து வருகின்றது. ஆலயத்தின் சூழல் கூட இன்று மாற்றம் பெற்றுள்ளது. ஆலயத்தின் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்துக்குத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதனால் கோயில் சூழலின்  இயற்கை அழகில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோணேசர் ஆலயச் சூழலில் மான் கூட்டங்களும், குரங்குகளின் கூட்டமும் தனி அழகு. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் ஏற்பட்ட போரின்போது, இலங்கை இராணுவம், கோட்டையிலிருந்து சம்பூர் பிரதேசத்தின் மீது பல் குழல் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டதனால் பீரங்கித் சத்த அதிர்வு காரணமாக கோணேசர் ஆலய சூழலில் இருந்த பெருமளவு குரங்குகள் காட்டுப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன.
 
இப்போது கோணேசர் ஆலயச் சூழலில் குரங்குக் கூட்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இதே போன்று தான் கடைகளின் ஆதிக்கம் ஏற்பட்டதன் காரணமாக மான்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது குறைவாக இருப்பதனால், மான் கூட்டங்கள் ஆலய சூழலில் இருந்து இன்று வெளியேறி வருகின்றன. 
 
அவை திருகோணமலை நகரசபை வளாகத்துக்குள்ளும், கடற்கரைப் பகுதிகளிலும் நடமாடித் திரிகின்றன. இதனால் ஆலயச் சூழலின் இயற்கை அழகு மாற்றமடைந்து வருகின்றது. ஆலய சூழலில் மான்களின் எண்ணிக்கை கூட தற்போது குறைவாகவே காணப்படுகின்றது.
 
கோணேசர் ஆலயம், திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. உலகில் வாழும் இந்து மக்களின் அடையாளமாக இந்த ஆலயம் விளங்குகின்றது. எனவே ஆலய பரிபாலன சபையினர் மேற்குறிப்பிட்ட சில விடயங்களில் தமது கவனத்தை திருப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும். 
 
புண்ணிய தலமாக விளங்கும் இந்த ஆலயத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றி வருவதற்கு இடமளிக்கக் கூடாது. இந்த ஆலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அரசுடன் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
 
கன்னியா வெந்நீர் ஊற்று, கோணேசர் ஆலயத்துடன் தொடர்புபட்டது. கன்னியா நீரூற்றைப் பற்றிப் புராணங்கள் கூறும் வரலாற்றின் படி மகாவிஷ்ணு மூர்த்தியே அவற்றை உற்பத்தியாக்கினார் எனக் கூறப்படுகிறது. 
 
கோண நாயகரிடம்தான் பெற்ற இலிங்கத்தைக் கையிலேந்திக் கொண்டு, இலங்கை மன்னன் இராவணன் செல்லும் போது விஷ்ணு மூர்த்தி ஓர் அந்தண வடிவம் தாங்கி தசக்கிரீவனைச் சந்தித்து அவன் தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார். 
 
இலங்கைக் காவலன் அதைக் கேட்டதும் துக்கத்தில் ஆழ்ந்தான். முனிவர் அவனைத் தேற்றிய பின்னர், தனயன் தாய்க்குச் செய்ய வேண்டிய கன்மாதிக் கிரியைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தினார். இந்தப் புண்ணிய தலத்தில் கன்மாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்ச வீட்டை அடைவது திண்ணம் என்று கூறினார். 
 
அந்த அந்தணரே அதைச் செய்து முடிக்க வேண்டுமென்று இராவணன் வேண்டிக் கொண்டதற்குச் சம்மதித்த அந்தணர் அவனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று அந்த இடத்தில் தமது கையிலிருந்த தண்டினால் ஏழு இடத்தில் ஊன்றினார்.
 
அந்தண வடிவங்கொண்ட மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுத் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. இறந்தவர்களுக்கு அந்த இடத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்தால், அந்த ஆன்மாக்கள் முத்தியடையுமென நம்பப்படுகின்றது. 
 
இராவணன் தனது தாயாருக்குரிய கன்மாதிக் கிரியைகள் எல்லாவற்றையும் அங்கு முறைப்படி செய்தான் என வரலாறு கூறுகின்றது. தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. 
 
அத்துடன் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய சூழலில் கூட பாதுகாப்பு பிரிவினர் நிலை கொண்டுள்ளனர். இது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
 
குளக்கோட்ட மன்னனுடன் தொடர்புடைய சம்பூர் பிரதேசம், தமிழரின் கலை, கலாசார விடயத்தில் ஆணிவேராகவும் கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் பின்னர் அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் இன்று வரை  தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 
 
இதனால் தனித்துவமான பாரம்பரியமுடைய கிராமிய கலைகள் கூட அந்த மக்களிடம் இருந்து சிதைவடைந்து வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள காளி கோயில்களில் மிகவும் பழைமையான ஆலயமாக விளங்குவது சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமாகும். 
 
இந்த ஆலயம் கூட வெளியாரால் போரின் போது உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. விலை மதிக்க முடியாத பல விக்கிரகங்கள் கூட எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
கடந்த வருடம் வைகாசி மாதத்தில் மட்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட கடற்படையினர் அனுமதி வழங்கி இருந்தனர். 
 
அதன் பின்னர் ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட கடற்படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சூழல் காணப்படுகின்றது.
 
இந்த நிலையில், உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழரின் வரலாற்றுப் பிரதேசமான சம்பூர் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலையில் தமிழரின் பண்டைய அடையாளங்களை பார்க்கும் போது, முத்தூர் என்பது இன்று மூதூர் என்று அழைக்கப்படும் திருகோணமலையிலுள்ள ஓர் இடமாகும். 
 
தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி முத்தூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. 
 
இன்று கங்குவேலி என்று பெயர் குறுகிவிட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என முத்தூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது.
 
அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. 
 
ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். 
 
தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோணமலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. 
 
திருமங்கலாய்ச் சிவன்கோயில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது. 
 
தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. 

நன்றி:உதயன் ஊடகம்.
 
 
 

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்!கொங்குதமிழர்கட்சி,மாநிலதலைவர்,தெ.கு.தீரன்சாமி கோரிக்கை!


ஈழப்பிரச்சனை... இனப்படுகொலை என்பதை விட….

அதற்கு காரணமான இரத்த வெறிபிடித்த ஓநாய் இராசாபக்சேவை சர்வதேச அரங்கில் நிறுத்தி அணு! அணுவாக சுட்டுக்கொள்ளவேண்டும்!

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி!அங்குள்ள சீனா நிலைகளை விரட்டி அடித்து விட்டு..இலங்கை பகுதிமுழுவதையும் நமது கட்டுக்குள் கொண்டு வந்து....சிங்களர்கள் வாழும் நிலப்பகுதி...தமிழர்கள்வாழும் நிலப்பகுதி என இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக அறிவிக்க வேண்டும்.

இல்லைஎனில் மாணமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஒட்டுமொத்த உலகத்தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு அகண்ட தமிழகம் அமைத்துக்கொள்வதைத்தவிர…தமிழர்களின் பாதுகாப்பிற்கு வேறு வழியே இல்லை……

இவன்-
-
தெ.கு.தீரன்சாமி,மாநிலதலைவர்,கொங்குதமிழர்கட்சி மற்றும்
தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை-
www.facebook/theeran.samy...
http://theeranchinnamalai.blogspot.com,
http://kongutamilar.blogspot.com