வேளாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஏப்ரல், 2014

கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா.


17-04-2014-கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் விடுதலை போராட்ட மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம், மேலப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர்,ஓடாநிலையில் மாலை,மரியாதை செலுத்தப்பட்டது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மாநிலதலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் கொங்குதமிழர்கட்சியினர் தீரன்சின்னமலைக்கு வீரவணக்கம்


தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு,கொங்குதமிழர்கட்சி,
தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மாவீரன் பிறந்த காங்கயம் மேலப்பாளையத்தில் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.

தலைப்பைச் சேருங்கள்

காங்கயம்,சிவன்மலையில் உள்ள மாவீரனின் பட்டாலிப் போர்பாசறையில் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை  போன்ற அமைப்புகளின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் இந்திய விடுதலைப் போராட்ட மாவீரன்,கொங்குநாட்டுச் சிங்கம் இரத்தினம் தீரன்சின்னமலையின் 208-வது நினைவு தின வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

முன்னதாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,மேலப்பாளையத்திலும்-மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம்,சங்ககிரி துர்கத்திலும்,மாவீரன் கோட்டை,கொத்தளங்கள் அமைத்து வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்த ஈரோடு மாவட்டம்,அறச்சலூர்-ஓடாநிலையிலும்,ஆயிதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட திருப்பூர் மாவட்டம்,கங்கயம் வட்டம்,சிவன்மலை பட்டாலி போர்ப்பாசறை நுழைவு வாயில் -உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மாவீரன் தீரன்சின்னமலைக்கு மாலை,மரியாதை,வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்சிக்கு நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமை தாங்கினார்.கொங்குதமிழர்கட்சியின் மாநிலப்பொதுச்செயளாலர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.இராசேந்திரன்,மாநில தலைமை நிலையச்செயளாலர் டி.எஸ்.சண்முகம்,துணைப்பொதுச்செயளாலர் பி.கே.பரமசிவம்.பொருளாளர்கள் பி.ஜோதி,பி.என்.பாலு,மாநில தலைமை நிலையச் செயளாலர் டி.எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.நந்தகுமார்,திருப்பூர்மாவட்ட அமைப்பாளர் ஆர்.சண்முகம்,கோவை மாவட்ட அமைப்பாளர் குறுக்கத்தி பாலசுப்பிரமணியம்,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் மாநிலபொதுச்செயளாலர் கே.எஸ்.செல்வராஜ்,மாநில துணைப்பொதுச்செயளாலர் தாராபுரம்,சிபி அரசி தங்கவேல்,அதன் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் கே.கே.திருநாவுக்கரசு,மாவட்ட செயளார் கே.எஸ்.கார்த்திக்,வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பாளர் சு.இரவி,பாரதீய ஜனதாக்கட்சியின் தாராபுரம் ஒன்றியப்பொருப்பாளர் ஜெ.குமாரவேல் மற்றும் பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்





வெள்ளி, 28 ஜனவரி, 2011

கொங்குநாட்டுக்கண்ணகி வெள்ளையம்மாள்காவியம்


பாகம் - 11

மதுரை பாண்டியமா மன்னனின் நீதி தவறிய தீர்ப்பால் கற்புக்கரசி கண்ணகியின் கணவன் தண்டிக்கப்பட்டார்.பொங்கி எழுந்த கண்ணகி தன் கணவன் குற்றமற்றவன் என பாண்டிய மன்னன் அவையில் நிருபித்தாள்.கற்புநெறி தவறாத கண்ணகியின் சாபத்தால் மதுரைமாநகரம் தீப்பற்றி எரிந்தது.    

கற்புநெறி என்பது தமிழர் நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு தமிழனின் பண்பாட்டு அடையாளாகமாக, ஒழுக்கத்தின் குறியீடாக தொடர்ந்துவருகிறது.சக்தியின் வடிவமான கண்ணகியைப்போன்று கொங்குச்சீமையில் உதித்து! கற்புநெறியைக்காத்து! இன்றும் நம்மோடு காக்கும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளையம்மாள்கவியம் தான் நாம் காணப்போகும் வரலாறு.

இயற்கை வளம் கொழிக்கும் கொங்குநாடு தமிழகத்தின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது.இது 24 உட்பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் முதலாவதுநாடு பூந்துறைநாடு. இது கல்வெட்டுக்களில் பழம்பூந்துறைநாடு என சிறப்பிக்கப்படுகிறது.

காவேரிக்கு கிழக்கே கீழ்கரைபூந்துறைநாடு எனவும் மேற்கே மேல்கரைபூந்துறைநாடு என இரண்டு பிரிவுகளாக காணமுடிகிறது.கீழ்கரைநாட்டில் 32-பழம்பெறும் ஊர்களில் 12-வது ஊராக திகழும் தற்போதைய திருச்சங்கோடுவட்டம்,கருமாபுரம். இயற்கை வளத்தால் செழுமை பெற்று ஆதிகருமாபுரம், நிழலுற்றகருமாபுரம்,திருமருவுகருமாபுரம் என ஊர்தொகைபாடல்கள்,காணிப்பாடல்கள் போற்றுகின்றன.

கருமாபுரத்தில் கொங்குவேளாளரில்-பயிரன் குலத்தினர் முதல்காணிபெற்று சிறப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களில் முதல்வன் கொங்குவேளாள காங்கயமன்றாடியார் என கருமாபுரம் செப்பேடுகூறுகிறது.

பொருள்தந்தகுலத்தின் ஆதியூரானகருமாபுரத்தில் கங்கேயன் குடும்பத்தினர்கள் சீரும்சிறப்புடன் வாழ்ந்து வந்தனர்.ப்சுமை வளம் பொருந்திய கருமாபுரத்தில் பல ஆண்டுகள் மழை பெய்யவில்லை. குளம்,குட்டைகள் வற்றி-மரங்கள் கூடபட்டுவிட்டன. உணவுப்பஞ்சமும் தலைவிரித்தாடியது.கால்நடைகள் மேய்ச்சல் இல்லாமல் மடிந்தன.காங்கயன் மனம் மருங்கினான். கால்நடைகளை காக்க அண்டைநாடு செல்ல திட்டமிட்டான்.

காவேரிக்கு மேற்கே மேல்கரைபூந்துரைநாட்டில் பூமி செழித்து கால் நடைகள் மேய்வதற்கு மேய்ச்சல் நிலம் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான்.மேய்ச்சல் வனத்தில் தம் தேசத்தின் கால்நடைகளையும், உற்றார்-உறவினர்களையும் அழைத்து வந்து தங்குவதற்கு அந்த நாட்டு ம்ன்னன், சேடகுலத்தலைவன்-நட்டூராரிடம் அனுமதி வேண்டினான்.நட்டூராரும் மகிழ்வுடன் அனுமதி அளித்தார்.காங்கயன் கருமாபுரம் சென்று தம் உறவினர்களையும்,கால்நடைகளையும் அழைத்துவந்து நட்டூர் வனத்தில் மேய்த்து சிறப்புடன் வாழ்ந்து வந்தான்.

நட்டூரானுக்கு நான்கு மகன்களும்,வெள்ளையம்மாள் என்ற மகளும் இருந்தனர்.வெள்ளையம்மாள்- வெள்ளை நிறப்பெண்ணாக இருந்த காரணத்தாள் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாம் பிடிக்கவில்லை எனக்கூறிச்சென்றனர்.வயது பல கடந்தும் திருமணம் நடத்தும் வழி தெரியாமல் நட்டூரான் மனம் புழுங்கினான்.இளைய மகள் வெள்ளையம்மாளுக்கு மனம் முடித்த பிறகு மூத்த மகன்கள் நால்வருக்கும் மணம் முடிக்க நட்டூரான் முடிவு செய்திருந்தான்.இந்த நிலையில் ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் நட்டூராரின் குடும்பம் ஆளானது.


இந்த நிலையில் நட்டூரார் அங்கு கால்நடைகள் மேய்த்துவரும் காங்கயனை அழைத்து தம் மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என வினவினார்.தன் பெற்றோர்கள் விரும்பினால் எனக்குச்சம்மதமே என காங்கயன் கூறினான்.

(தொடரும்...)

செவ்வாய், 25 ஜனவரி, 2011


உலகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமை சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் 

இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை.

 நமது பாரததேசம் இருநூறு ஆண்டுகள் தொடர்ந்து மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம்  தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டுக்கு உட்பட்ட 24நாடுகளில் காங்கயம்நாட்டில் மேளப்பாளையம் கொங்குவேளாளர் சாதீ பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதியர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.

 1790க்கும் மேற்பட்டகாலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்து தூக்குமேடையில் நம்நாட்டு விடுதலைக்காக தம் இன்னுயிரை துறந்தவர்தான் தீரன்சின்னமலை.அடிமைதலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைபடுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

 தீரன்சின்னமலையின் கொங்குபடையில் கறுப்புச்சேர்வைதேவர்,கட்டுத்தரிநாடார்,ஆதிதிராவிடர்சுபேதர்வேலப்பன்,அருந்ததியர்சமூகத்தைசார்ந்த செறுப்புத்தைக்கும்தொழிலாளி பொல்லான்,ஆருயிர்நண்பனாக-வழிகாட்டும் தளபதியாக இஸ்லாமிய மாவீரன் கன்னடத்துப்புலி திப்புசுல்தான்,பத்தேமுகமதூசேன்,போர்ப்பயிற்சி அளித்த வெள்ளை இனத்தை சார்ந்த பிரான்சு வீரர்கள்,விருபாச்சிகோபாலநாய்க்கர்,வன்னியர்சமூகவீரர்கள்,என அனைத்துச்சமூகத்தை சார்ந்தவர்களும் சின்னமலையின்போர்படையில் வீரப்போர்புரிந்து நாம் இன்று ருசிக்கும் சுதந்திரத்திற்காக அன்றே மரணத்தை முத்தமிட்டார்கள். 

  மண்ணுரிமைக்காக மகத்தான தியாகம் செய்த மாவீரர்களின் பாதம்தொட்டு சமூக-அரசிய்ல்-சுற்றுச்சூழல்-குற்றவியல்-புலானாய்வு-செய்திகளை-கருத்துகளை இந்த வலைதளம் வாயிலாக உங்களுடன் -நீங்கள் எங்களுடன் உண்மைகளை உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்வோம். டி.கே.தீரன்சாமி...மாவீரன் தீரன்-