வியாழன், 17 ஏப்ரல், 2014

கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா.


17-04-2014-கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் விடுதலை போராட்ட மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம், மேலப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர்,ஓடாநிலையில் மாலை,மரியாதை செலுத்தப்பட்டது.


விழாவிற்கு கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.
கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.இடம்:-காங்கேயம்,மேலப்பாளையம்


கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.இடம்:-அரச்சலூர்,ஓடாநிலை.
மேலும் விழாவில் கட்சியின் மாநில செயலாளர் டி.எஸ்.சண்முகம்,மாநில பொருளாளர் எஸ்.கே.நந்தகுமார்,மாநில தொழிற்சங்கத் தலைவர் பி.என்.பாலு,பொதுச்செயலாளர் கே.எஸ்.செல்வராஜ்,
கோவை மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாலசுப்பிரமணி,ஈரோடு மாவட்டஅமைப்பாளர் ஈ.எஸ்.செல்வக்குமார்,ஈரோடு மாநகர அமைப்பாளர் எஸ்.விக்னேஸ்குமார்,கரூர் மாவட்ட அமைப்பாளர் பி.சி.சண்முகம்,
திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் வி.ஞானசேகர்,நடராசன்,சி.வி.ஆறுமுகம்,எஸ்,கோபால் ஆகியோர் கலந்து கொண்டர்.

கருத்துகள் இல்லை: