வெள்ளி, 16 மே, 2014

37-தொகுதிகளில் வெற்றி-அம்மா அவர்களுக்கு கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி அறிக்கை


  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆழிப்பேரலையாக தனித்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். 40-மக்களவைத்தொகுதிகளிலும் தமது அரசு செய்த மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தும்,காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தமிழகத்துக்கும்,தமிழர்களுக்கும் இழைத்த துரோகத்தை பட்டியளிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகாலத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றப்பட்டன.அதன் விளைவுதான் தற்பொழுது வாக்குகளாகமாறி-37-மக்களவைத் தொகுதிகள் என்ற பெரும் வெற்றிப்பரிசை தமிழக மக்கள் நம்முடைய முதல்வருக்கு அளித்துள்ளார்கள்.

அதேபோல கொங்கு தமிழகம் அ.இ.அ.தி.மு.கவின் இரும்புக்கோட்டை என்பதை இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் நிருபித்துள்ளன.

தமிழக முதல்வர் அம்மா என்ற பெரும் கடலில்,சிறு துளியாக அம்மா அவர்களின் வெற்றிக்கு-"நாற்பது தொகுதிகளிலும் வெற்றி நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" எனபக்தி முழக்கமிட்டு சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள்,அமைப்புகள் அம்மா அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

மேலும் கூடுதலாக அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 37-தொகுதிகள் வென்றதின் மூலம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சக்தியாக உறுவெடுத்துள்ள அம்மா அவர்கள் எதிர்காலத்தில் பாரதப்பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இத்தகைய வெற்றிக்கு வித்திட்ட நம்முடைய தமிழக மக்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,இந்தியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பாரதப்பிரதமராக பதவியில் அமரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த நரேந்திரமோடிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

திங்கள், 12 மே, 2014

தினத்தந்தியின் 17-வது திருப்பூர் பதிப்பு வீறுகொண்டு,வெற்றிநடைபோட கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி வாழ்த்துரை செய்தி;-


12/05/2014 தினத்தந்தியின் 17-வது திருப்பூர் பதிப்பு வீறுகொண்டு, வெற்றிநடைபோட 
கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி வாழ்த்துரை ;-

தமிழர்களின் அறிவிப்பசியை போக்கும் வகையிலும்,படிக்கத் தெரியாத
குக்கிராமத்து மக்களை படிக்கவைக்கும் பாடசாலையாக சி.பா.ஆதித்தனார்
அவர்களால் தொடங்கப்பட்டு,அவர்தம் அருள்செல்வர் சிவந்தி ஆதித்தனாரல்
வளர்தெடுக்கப்பட்டது.

இன்று சென்னை,மதுரை,திருச்சி,கோவை,நெல்லை, வேலூர்,கடலூர்,சேலம்,பெங்களூர்,பாண்டிச்சேரி,ஈரோடு,நாகர்கோவில்,தஞ்சை,திண்டுக்கல்,மும்பை,உள்ளிட்ட நகரங்களில் பதியப்பட்டு 17-லட்சங்களுக்கு மேல் பிரதிகளை
எடுத்துச்செல்லும்ஒப்பற்ற தினத்தந்தியின் நீண்ட பயணத்தில் எமது
கொங்குதமிழகத்தின் திருப்பூர் பதிப்பு தினத்தந்தியின் 16-வது பதிப்பாக
வெளிவருவதை அறிந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை
தொழிற்சங்கப்பேரவை மகிழ்சியுடன் எமது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது.

இவன்:-
தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்

வியாழன், 8 மே, 2014

முல்லைப்பெரியறு அணைப்பிரச்சனையில் முதல் போராளி தமிழக முதல்வர் அம்மா! கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு,தீரன்சாமி புகழாரம்!


08/05/2014  கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்
தெ.கு,தீரன்சாமியின் ஊடகச்செய்தி அறிக்ககை

கேரள மாநிலம் இடுக்கியில் 120 ஆண்டுகளுக்கு முன்பு பென்னிக்குயிக் என்ற
ஆங்கிலேயரின் சீரிய முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை
கட்டப்பட்டது.திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும்-சென்னை மகாண அரசுக்கும்
இடையே 999 ஆண்டுகாலத்துக்கு-152 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி
பயன்படுத்தி கொள்ளலாம்.என ஒப்பந்தம் போடப்பட்டது.

அணையில் விரிசல் ஏற்படுவதாக சொல்லி கேரள அரசு நீர் மட்டத்தை 136 அடியாக
குறைத்தது.இதை எதிர்த்து அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.

அம்மா அவர்களின் கடுமையான சட்டப்போராட்டத்துக்கு பிறகு 2006-பிப்ரவரியில்
136-அடி என்பதை மாற்றி மீண்டும் 142-அடியாக உயர்த்திக்கொள்ளலாம்.என
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அந்தத்தீர்ப்பை
நீர்த்துப்போகச்செய்யும் வகையில் கேரள அரசு சட்டம் இயற்றியது.

அப்பொழுதும் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டுமென அம்மா அவர்களின்
தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது
உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தன் தலைமையிலான 5-நபர்கள் குழுவை அமைத்தது.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு அந்தக்குழு முல்லைப்பெரியாறு அணை
பாதுகாப்பாக உள்ளதாக 2012-ஏப்ரல்-25-ல் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
தாக்கல் செய்தது.பல்வேறு சட்டப்போராட்டங்களை சந்தித்த இந்த
வழக்கில்"முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142-அடியாக
உயர்த்திக்கொள்ளாலம்" என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதற்கு முதல் போராளியாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் நம்முடைய தமிழக
முதல்வர் டாக்டர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.தமிழகத்தின் காவல்
தெய்வமாக,தமிழர்களை காக்கும் ஆதிபராசக்தியாக அம்மா அவர்கள் சக்தியின்
வடிவமாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.இதற்கு எமது கொங்கு தமிழர்
கட்சி,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை மற்றும் கொங்கு தமிழகத்தின்
சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம்.

இவன்
தெ.கு.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்