திங்கள், 17 நவம்பர், 2014

கொடிய வைரஸ் சமூக வலைதளங்கள்தான்- வித்யாபாலன்அதிரடி தாக்குதல்..



டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படத்தின் மூலம் 
ஒட்டுமொத்த இந்தியத்திரையுலகையும்,
உலக சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர்.
ஒருநடிகை எப்படி இருக்ககூடாது
என்பதையும்,செல்லுலாய்டு என்ற கனவுத்தொழிற்சாலையில் 
கால்பதிக்க துடிக்கும்
இளம்பெண்களின் உயிர்நாடியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் 
வாழ்ந்துகாட்டியவர்
வித்யாபாலன்.

அன்றைய நடிகை டி.ஆர்.ராஜ்குமாரியிலிருந்து இன்றைய நடிகைஅஞ்சலி
வரை படும்துன்பங்களை,பாலியல் வன்கொடுமைகளை அப்படமாக நவீன சினிமா
தொழிற்சாலையில் பதியப்பட்டபடம்தான் டர்ட்டி பிக்சர்ஸ்.கிட்டத்தட்ட நமது
தமிழ்த்திரையுலகின் கவர்சிக்கன்னியாக பார்க்கப்பட்ட சில்க்சுமிதாவின் சினிமா
வாழ்வியலை-வித்யாபாலன் டர்ட்டி பிக்சர்ஸ்சில் வாழ்ந்துகாட்டியதாக
சொல்லப்பட்டது.

சமூகவலைதளங்கள்,மீடியக்களுக்கு வித்யா மீது கழுகுப்பார்வை உண்டு.
அவரது செய்திக்கு அதிவேகமான பார்வையாளர்கள் உண்டு.அந்த அடிப்படையில்
இன்றைய தினம் தினத்தந்தி நாளிதழில் சமூக வலைதளங்கள் மீது வித்யாபாலனின்
அதிரடி தாக்குதல்.என்ற தலைப்பில் நேர்காணல் வெளியானது...அது பற்றி...

அதில்..சமூகவலைதளங்கள் தொடர்பான இரண்டு கேள்விகள்..

1.இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நீங்கள் ஏன் எழுதுவதில்லை.?

வித்யா-.. எனக்கு அதில் நாட்டமில்லை,வலைதளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்து
கொள்வதற்காக சில விசயங்கள்தான் இருக்கின்றன.ஆனால் பலரும்
பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் வரைமுறை இல்லாமல் போய்விட்டதை
உணர்ந்துகொள்ளமுடிகிறது.பாத்ரூம் போவதைக்கூட டுவிட்டரில் தெரிவித்து
விட்டுத்தான் போகிறார்கள்.மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் எதையும்
செய்யக்கூடாது என்பது ஒருமனோவியாதியாக மாறிவிட்டது.

2.வலைதளங்களால் மக்களுக்கு நன்மை இல்லை எங்கிறீர்களா..?

வித்யா-..எதையுமே பயன்படுத்தும் விதத்தில்தான் நன்மையும்,தீமையும் விளையும்.
பலருடைய நட்புக்கு வலைதளங்கள் துணையாக இருப்பது உண்மைதான்.எத்தனை
பேருடைய குடும்பவாழ்க்கை இதனால் பறிபோகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவரது குடும்ப வாழ்க்கையின் மிக ரகசியமான விசயங்கள்கூட வலைதளத்தில்
பகிர்ந்து கொள்ளப்படுவது அநாகரிகத்தின் உச்சகட்டம்.இன்று உலகம் முழுவதும்
பரவியிருக்கும் கொடிய வைரஸ் சமூக வலைதங்கள்தான்.இதில் சிக்கி
சின்னாபின்னமான குடும்பங்கள் பல உள்ளன... நன்றி:-தினத்தந்தி

வித்யாபாலனின் கூற்று நூறு சதம் சரியானது அல்ல...ஆனால் அதே நேரத்தில்
சமூக வலைதளப்பதிவர்கள் சிந்திக்கவேண்டிய செய்தி..உலகம் ஒரே குடையின்
கீழ் கொண்டு சேர்த்த பெருமை சமூகவலைதளங்களுக்கே உரித்தானது...
சமூகவலைதளங்களை இதுபோன்று சுதந்திரமாக தொடர்ந்து பயன்படுத்த
வேண்டுமானல் நாம் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்.
சீர்கேடுகளை முன்வைக்கும் தளங்களை புறந்தள்ளவேண்டும்..

கருத்துக்களை பகிரவும்

இவன்:-டி.கே.தீரன்சாமி,கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in,http://kongutamilar.blogspot.in