பாகம் - 11
கற்புநெறி என்பது தமிழர் நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு தமிழனின் பண்பாட்டு அடையாளாகமாக, ஒழுக்கத்தின் குறியீடாக தொடர்ந்துவருகிறது.சக்தியின் வடிவமான கண்ணகியைப்போன்று கொங்குச்சீமையில் உதித்து! கற்புநெறியைக்காத்து! இன்றும் நம்மோடு காக்கும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளையம்மாள்கவியம் தான் நாம் காணப்போகும் வரலாறு.
இயற்கை வளம் கொழிக்கும் கொங்குநாடு தமிழகத்தின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது.இது 24 உட்பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் முதலாவதுநாடு பூந்துறைநாடு. இது கல்வெட்டுக்களில் பழம்பூந்துறைநாடு என சிறப்பிக்கப்படுகிறது.
காவேரிக்கு கிழக்கே கீழ்கரைபூந்துறைநாடு எனவும் மேற்கே மேல்கரைபூந்துறைநாடு என இரண்டு பிரிவுகளாக காணமுடிகிறது.கீழ்கரைநாட்டில் 32-பழம்பெறும் ஊர்களில் 12-வது ஊராக திகழும் தற்போதைய திருச்சங்கோடுவட்டம்,கருமாபுரம். இயற்கை வளத்தால் செழுமை பெற்று ஆதிகருமாபுரம், நிழலுற்றகருமாபுரம்,திருமருவுகருமாபுரம் என ஊர்தொகைபாடல்கள்,காணிப்பாடல்கள் போற்றுகின்றன.
கருமாபுரத்தில் கொங்குவேளாளரில்-பயிரன் குலத்தினர் முதல்காணிபெற்று சிறப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களில் முதல்வன் கொங்குவேளாள காங்கயமன்றாடியார் என கருமாபுரம் செப்பேடுகூறுகிறது.
பொருள்தந்தகுலத்தின் ஆதியூரானகருமாபுரத்தில் கங்கேயன் குடும்பத்தினர்கள் சீரும்சிறப்புடன் வாழ்ந்து வந்தனர்.ப்சுமை வளம் பொருந்திய கருமாபுரத்தில் பல ஆண்டுகள் மழை பெய்யவில்லை. குளம்,குட்டைகள் வற்றி-மரங்கள் கூடபட்டுவிட்டன. உணவுப்பஞ்சமும் தலைவிரித்தாடியது.கால்நடைகள் மேய்ச்சல் இல்லாமல் மடிந்தன.காங்கயன் மனம் மருங்கினான். கால்நடைகளை காக்க அண்டைநாடு செல்ல திட்டமிட்டான்.
காவேரிக்கு மேற்கே மேல்கரைபூந்துரைநாட்டில் பூமி செழித்து கால் நடைகள் மேய்வதற்கு மேய்ச்சல் நிலம் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான்.மேய்ச்சல் வனத்தில் தம் தேசத்தின் கால்நடைகளையும், உற்றார்-உறவினர்களையும் அழைத்து வந்து தங்குவதற்கு அந்த நாட்டு ம்ன்னன், சேடகுலத்தலைவன்-நட்டூராரிடம் அனுமதி வேண்டினான்.நட்டூராரும் மகிழ்வுடன் அனுமதி அளித்தார்.காங்கயன் கருமாபுரம் சென்று தம் உறவினர்களையும்,கால்நடைகளையும் அழைத்துவந்து நட்டூர் வனத்தில் மேய்த்து சிறப்புடன் வாழ்ந்து வந்தான்.
நட்டூரானுக்கு நான்கு மகன்களும்,வெள்ளையம்மாள் என்ற மகளும் இருந்தனர்.வெள்ளையம்மாள்- வெள்ளை நிறப்பெண்ணாக இருந்த காரணத்தாள் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாம் பிடிக்கவில்லை எனக்கூறிச்சென்றனர்.வயது பல கடந்தும் திருமணம் நடத்தும் வழி தெரியாமல் நட்டூரான் மனம் புழுங்கினான்.இளைய மகள் வெள்ளையம்மாளுக்கு மனம் முடித்த பிறகு மூத்த மகன்கள் நால்வருக்கும் மணம் முடிக்க நட்டூரான் முடிவு செய்திருந்தான்.இந்த நிலையில் ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் நட்டூராரின் குடும்பம் ஆளானது.
இந்த நிலையில் நட்டூரார் அங்கு கால்நடைகள் மேய்த்துவரும் காங்கயனை அழைத்து தம் மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என வினவினார்.தன் பெற்றோர்கள் விரும்பினால் எனக்குச்சம்மதமே என காங்கயன் கூறினான்.
(தொடரும்...)