காவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 அக்டோபர், 2011

தீரன்சின்னமலை நினைவு "A"கிரேடு கபாடிப்போட்டி

  வீரத்தின் விளைநிலம்,மண்ணின் மாவீரன் தீரன்சின்னமலை நினைவுக் கோப்பைக்கான செவ்வானம் கபாடிக்குழுவினர் நடத்தும் அகிலம் போற்றும் அற்புதமான 37-ஆம் ஆண்டு அகில இந்திய "A"கிரேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடித்திருவிழா நடைபெற உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம், விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடிப்போட்டி நடைபெற உள்ளது

புரட்சிகர விடுதலை முன்னனி,இயற்கை வாழ்வுரிமை இயக்கம் போன்ற சமூக களங்களின் பாசறையாக திகழும் மே.கு.பொடாரன் தலைமை ஏற்று நடத்த உள்ளார்கள்.உள்ளூர் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.ராமசாமி வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்திரன்,அ.இ.அ.தி.மு.க காங்கயம் நகரச்செயலாளர் ஏ.சி.சி.வெங்கு (எ)மணிமாறன்,தே.மு.தி.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் என்.தினேஸ்குமார்,பா.ஜ.க மாவட்ட தலைவர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முதல்பரிசு ரூபாய் 10010 மற்றும் கோப்பையினை முறையே சித்தம்பலம் என்.பார்த்தீபன் அவர்களும்,ஆனூர்வித்தியாலாய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினரும் வழங்குகின்றனர்.

இராண்டாம் பரிசு அ.இ.அ.தி.மு.க வினரும்,தீரன்சின்னமலை நினைவு கோப்பையினை கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வழங்க உள்ளனர்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம்,ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேல்,ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.(எ)என்.எஸ்.நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மேலும் வருமானவரித்துறை அதிகாரி (ITO),அகில இந்திய அமெச்சூர் கபாடிக் கழக இணைச்செயலாளர் என்.சுப்பிரமணியன்,தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் சோலை எம்.ராஜா,செயலாளர் எ.சபியுல்லா,பொருளாளர் என்.கே.கே.பி.சத்தியன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் பிராமிஸ்.பி.முத்துச்சாமி,துணைத்தலைவர் என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

ஆண்கள பிரிவில் 60,பெண்கள் பிரிவில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.மேலப்பாளையம் கிராமத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட எழுச்சிமிக்க படை ஒன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

வியாழன், 27 ஜனவரி, 2011

சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்

  மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார்.

 சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.

 அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார்.

 காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?  

 1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சி போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.

 அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக்  கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கிறது.

 அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினர்.

 "இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை.

 இதற்கு பழி தீர்க்கும் வகையில் சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.

            தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,
செய்தி ஊடகப்பதிவுக்காக-  டி.கே.தீரன்சாமி