![]() |
| தலைப்பைச் சேருங்கள் |
லேபிள்கள்
- அம்மா
- அரசியல்
- அறிக்கை
- அழைப்பிதழ்
- ஆதரவு
- ஆல்பம்
- இந்தியா
- இலங்கை
- ஈழம்
- உள்ளாட்சி
- ஊடகம்
- ஊழல்
- கடிதம்
- கட்சி
- கலை
- கவிதை
- குற்றம்
- கொங்கு
- சந்திப்பு
- சம்பவம்
- சினிமா
- செய்தி
- தமிழ்
- தீரன்
- தேர்தல்.2001
- தேர்தல்.2004
- தேர்தல்.2006
- தேர்தல்.2009
- தேர்தல்.2011
- தேர்தல்.2013
- தேர்தல்.2014
- நிகழ்ச்சி
- பத்திரிக்கை
- புலனாய்வு
- வரலாறு
- விளம்பரம்
- விளையாட்டு
- ஸ்ரீலங்கா
விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 5 ஆகஸ்ட், 2013
மாநிலதலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் கொங்குதமிழர்கட்சியினர் தீரன்சின்னமலைக்கு வீரவணக்கம்
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
மக்கள்படையை தட்டி எழுப்பட்டும்!கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கருத்துரை!
விகடன் செய்திகள் இணையதளத்தில் அண்ணா கசாரே குழுவின் அணுகுமுறை சரியா? விவாதக்களத்தில் நான் பதிவுசெய்த கருத்துரை:-
அண்ணா கசாரே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.காந்தியவாதி,ஆன்மீகத்தில் விவேகானந்தரை மானசீகமாக் ஏற்றுக்கொண்ட்வர்,ஒரு சாதாரண குடில்போன்ற இல்லத்தில் வசித்து வருபவர்,திருமணம் ஆகாத பிரம்மச்சாரி,சமூகசேவகர்.தனக்கென சுயதேவை எதுவும் இல்லாதவர்.
தமது சித்திக் கிராமத்தில் மழை இருந்தும் விவசாயம் செய்ய நீர் இல்லாத அவலத்தைக்கண்டு அந்தமக்களின் மறுவாழ்வுக்கு தனது ஓய்வுக்காலத்தை அர்பணித்தவர் அண்ணா கசாரே.
சித்திக்கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான பூமிகளை பொன்விளையும் பசுமைச்சோலையாக மாற்றியவர்.லோக்பால் வரைவுக்குழுவில் சிவில்சமூகதிற்கு தலைமை ஏற்றவர்.
அண்ணாவின் சிவில்சமூக இயக்கத்தின்கீழ் துணை நிற்பவர்கள் ஒன்றும் சாதாராண ஆட்கள் அல்ல! என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஓய்வுபெற்ற காவல்துறை தலைவரும்,சமூக சேவகருமான கிரண்பேடி,
உச்சநீதிமன்றத்தின் மூத்தசட்டப் போராளிகள் பூசன் சகோதரர்கள்,
சமூகப்புரட்சியாளர் மேதாபட்கர் உள்ளிட்டவர்கள் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஹசாரேவுடன் இணைந்துள்ளர்கள்.
இவர்களின் ஒத்துழைப்பு,வழிகாட்டுதல் அண்ணாவை சரியான வழியில் இட்டுச்செல்லும்.ஏனெனில் லட்சக்கணக்கில் உயிர்களை பழிகொடுத்து,
பல லட்சம் கோடிரூபாய் மதிப்பில் இயற்கை வளத்தை இழந்து,200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றோம்.
விடுதலைக்கு பிறகு ஊழலின் தொடக்க ஆட்டம் 65 கோடிரூபாயில் ஆரம்பித்ததது.அதன்பிறகு தொடர்ந்து 65 ஆண்டுகள் நமது அரசியல் மட்டையாளர்கள் அதிரடியாக விளையாடி தொடர் சிக்ஸர்களாக அடித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக குவித்து சர்வதேசத்தரத்தில் முதலிடத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஊழல் ஒழிப்பில் அண்ணாஹாசரே குழுவின் அணுகுமுறை சரியானதே!அவர் தலைமையிலான சிவில்சமூகம் தயாரித்த தன்லோக்பாலை மத்திய அரசு ஏற்கத்தான் வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் என்பது பிரதமருக்கும் சாதாரண குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே ஊழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.அதற்கு ஊழல் ஒழிப்பு முன்னனி என்ற மக்கள் கட்டமைப்பு தேவை.
அது அண்ணா ஹாசாரே தலைமையில் பிரசவிக்க தயாராகி வருகிறது.நாமும் அதை நல்ல படியாக வளர்த்தெடுக்க முயல்வோம்.அநீதிகளுக்கு எதிராக ஆர்பரிக்கும் விகடன் குழுமமும் ஊழலுக்கு எதிரான மக்கள் படையை தட்டி எழுப்பட்டும்!
இவன்:டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி
வியாழன், 27 ஜனவரி, 2011
சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்
மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார். சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.
அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார். காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?
1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சி போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.
அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக் கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கிறது.
அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினர்.
"இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை. இதற்கு பழி தீர்க்கும் வகையில் சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.
தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக- டி.கே.தீரன்சாமி
லேபிள்கள்:
அரசியல்,
காவல்,
குற்றம்,
சம்பவங்கள்,
நிகழ்வுகள்,
போராட்டம்,
விடுதலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






