கொங்குநாடு என்பது 24-நாடுகளை உள்ளடக்கியது.அதில் காங்கயம் நாடும் ஒன்று.அங்கு சிவன்மலையில் குடிகொண்டிருக்கும்,சிவன்மலை முருகனின் தலவரலாறும்,சித்தர் சிவவாக்கியரின் சிறப்புகளும்,கொங்கு நாட்டின் சுருக்கமான வரலாறும்,சிவன்மலையின் அரிய புகைப்படங்களும்-சுமார் 55-பக்கங்கள் கொண்ட புத்தகமாக தமிழநாடு இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தப்புத்தகத்தில் சிவன்மலை முருகனின் தெயவத்தளபதி,இந்திய விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலைக்கும்,சிவன்மலைமுருகனுக்கும்,பட்டாலி கிராமத்துக்கும், சிவன்மலைக்கும் உள்ள தொடர்புகளும், அதைச் சுற்றிலும் தீரன்சின்னமலை செய்த அற்புதமான செயல்பாடுகளும்,அது சார்ந்த வரலாற்று பதிவுகளும் விடுபட்டுள்ளது.
வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தப்புத்தகத்தில் சிவன்மலை முருகனின் தெயவத்தளபதி,இந்திய விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலைக்கும்,சிவன்மலைமுருகனுக்கும்,பட்டாலி கிராமத்துக்கும், சிவன்மலைக்கும் உள்ள தொடர்புகளும், அதைச் சுற்றிலும் தீரன்சின்னமலை செய்த அற்புதமான செயல்பாடுகளும்,அது சார்ந்த வரலாற்று பதிவுகளும் விடுபட்டுள்ளது.
இது தொடர்பாக நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கும்,தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல உள்ளோம்.
எமது கொங்கு தமிழர் பேரவை சார்பில் கடந்த காலங்களில் சுமார் எட்டு ஆண்டுகள்-2008 வ்ரை,சிவன்மலையில் தைப்பூசத்தேர்திருவிழா அன்று,எல்லப்பாளையம் காவடி அன்னதான அரங்கில் தீரன்சின்னமலை போர்ப்பாசறை விழா,மற்றும் தமிழர் கலை பண்பாட்டு விழாவினை சிறப்பாக நடத்தினோம்.அதில் சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை, சிவன்மலையைச் சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள் என்று ஆண்டுதோரும் சுமார் அய்யாயிரம் பிரதிகள் இலவசமாக வெளியீடு செய்து சிறப்பித்தோம்.
மேலும்,சிவன்மலை முருகனுக்கும்,தீரன்சின்னமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தில் விரைவில் பதிவுசெய்யப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
சரி இனி இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு செய்த "சிவன்மலை முருகனின் தல வரலாற்றை" படியுங்கள்.தங்கள மேலான கருத்துரைகளை பதிவு செய்யுங்கள்.
மேலும் இந்த புத்தகவடிவத்தின் நகல் சிவன்மலை முருகன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sivanmalaimurugan.tnhrce.in என்ற என்ற முகவரியிலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது.
நன்றி:-சிவன்மலை தேவஸ்தானம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறை