வெள்ளி, 7 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் பிரச்சாரம்&புகைப்படம்


2011 தமிழ்நாடு உள்ளாட்சி
மன்றத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான
அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நமது கொங்கு தமிழர் கட்சியினர் தமிழகம் தழுவிய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவத்தை ஆதரித்து ஈரோடு பேருந்து நிலையம்,நாடார் மேடு,வீரப்பன் சத்திரம்,சூரம்பட்டிவலசு,திருநகர் காலனி,கருகல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்குச்சேகரிபிற்கு கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தலைமை நிலையச்செயலாளர் டி.எஸ்.சண்முகம்,மாநில துணைச்செயலாளர் கே.எஸ்.செல்வராஜா,ஈரோடு மாநகர அமைப்பாளர் பி.அண்ணாதுரை,துணை அமைப்பாளர் எஸ்.செந்தில் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின்போது எடுத்த புகைப்படங்கள்



உள்ளாட்சி தேர்தல் பிரச்சார துண்டறிக்கை!

கொங்குதமிழர்கட்சியின் சார்பில் அம்மா அவர்கள் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் தழுவிய ஆதரவு பிரச்சாரம் 5-10-11 முதல் துவக்கப்பட்டுள்ளது.

50,000 பிரதிகள் அடங்கிய துண்டறிக்கைகள் ஐந்து பிரிவுகளாக பிரிவு ஒன்றுக்கு தலா 10,000 பிரதிகள்வீதம் வாக்குச் சேகரிப்பின் போது பயன்படுத்தப்பட உள்ளது.

தீரன்சின்னமலை நினைவு "A"கிரேடு கபாடிப்போட்டி

  வீரத்தின் விளைநிலம்,மண்ணின் மாவீரன் தீரன்சின்னமலை நினைவுக் கோப்பைக்கான செவ்வானம் கபாடிக்குழுவினர் நடத்தும் அகிலம் போற்றும் அற்புதமான 37-ஆம் ஆண்டு அகில இந்திய "A"கிரேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடித்திருவிழா நடைபெற உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம், விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடிப்போட்டி நடைபெற உள்ளது

புரட்சிகர விடுதலை முன்னனி,இயற்கை வாழ்வுரிமை இயக்கம் போன்ற சமூக களங்களின் பாசறையாக திகழும் மே.கு.பொடாரன் தலைமை ஏற்று நடத்த உள்ளார்கள்.உள்ளூர் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.ராமசாமி வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்திரன்,அ.இ.அ.தி.மு.க காங்கயம் நகரச்செயலாளர் ஏ.சி.சி.வெங்கு (எ)மணிமாறன்,தே.மு.தி.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் என்.தினேஸ்குமார்,பா.ஜ.க மாவட்ட தலைவர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முதல்பரிசு ரூபாய் 10010 மற்றும் கோப்பையினை முறையே சித்தம்பலம் என்.பார்த்தீபன் அவர்களும்,ஆனூர்வித்தியாலாய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினரும் வழங்குகின்றனர்.

இராண்டாம் பரிசு அ.இ.அ.தி.மு.க வினரும்,தீரன்சின்னமலை நினைவு கோப்பையினை கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வழங்க உள்ளனர்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம்,ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேல்,ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.(எ)என்.எஸ்.நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மேலும் வருமானவரித்துறை அதிகாரி (ITO),அகில இந்திய அமெச்சூர் கபாடிக் கழக இணைச்செயலாளர் என்.சுப்பிரமணியன்,தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் சோலை எம்.ராஜா,செயலாளர் எ.சபியுல்லா,பொருளாளர் என்.கே.கே.பி.சத்தியன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் பிராமிஸ்.பி.முத்துச்சாமி,துணைத்தலைவர் என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

ஆண்கள பிரிவில் 60,பெண்கள் பிரிவில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.மேலப்பாளையம் கிராமத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட எழுச்சிமிக்க படை ஒன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

வியாழன், 6 அக்டோபர், 2011

கொங்குதமிழர்கட்சிக்கு-முதல்வர் அம்மா அவர்கள் எழுதிய கடிதம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்! நமது கொங்குதமிழர்கட்சி- 2011 தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தலைமைக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தும்-பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டும் நமக்கு எழுதிய கடிதம்.

உள்ளாட்சி தேர்தல்ஆதரவு! பத்திரிக்கை செய்தி



24-9-11 தினபூமி செய்தி







26-9-11 Drநமது எம்.ஜி.ஆர் செய்தி

15-9-11 அன்று நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்கள்

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தொடரும்!மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி அறிக்கை!

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தொடரும் கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி அறிக்கை:- எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி,நகராட்சி தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் அமுல்படுத்திய தமிழக முதல்வருக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 கடந்த 14-9-11 தேதியில் எமது கட்சியின் செயற்குழு கூடியது.அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் எமது செயல்பாடு அமையும்.அந்த அடிப்படையில் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவது இல்லை என்ற நிலைப்பாடு தொடரும். 2001 முதல் 2010 வரை நடைபெற்ற நான்கு பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்கு தமிழகத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அந்த நேரத்தில் நூற்றுக்கு-நூறு வெற்றி பெருவோம் என்ற வெற்றுக் கோசத்துடன் தி.மு.க-காங்கிரசு,பா.ம.க வின் பொருந்தாக் கூட்டணியில்-கொங்கு மக்களின் மனநிலைக்கு மாறாக கூட்டணி கண்ட கொ.மு.க தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

 அ.இ.அ.தி.மு.க தலைமை புரட்சித்தலைவர் காலம்தொட்டு இன்றைய அம்மா காலம்வரை கட்சியிலும்,ஆட்சியிலும் கொங்கு தமிழகதிற்கு தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் கொங்கு தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி நூறுசதம் வெற்றி பெற்றது.அதற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வழங்கி கொளரவித்தார்கள்.

 தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல-நில அபகரிப்பு பிரிவை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் செயல்படுவது,மாணாக்கர்களின் கல்வி அறிவை மேலும் செலுமைப்படுத்தும் வகையில் மடிகணினிகள் வழங்குவது,கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு,மாடு வழங்குவது,பெண்களின் சிரமத்தை போக்கும் வகையில் மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட இலவசத்திட்டங்கள் விரைவாக தொடங்கப்பட்டுள்ளது.

 திருப்பூர் சாயத்தண்ணீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஆட்சிப்பொருப்பில் அமர்ந்த மூன்றாவது தினத்தில் குழு அமைத்து செயல்பட்டது.மேலும் சுத்திகரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்குவதற்கு ரூ 200 கோடி வட்டியில்லாக் கடன் வழங்க ஆவண செய்து இருப்பது. ஈழத்தமிழர்களின் துயர்போக்கும் வகையிலும்,

ராசீவ் கொலைவழக்கின் குற்றவாளிகள் என்று சொல்லப்படும் மூவரின் உயிர்காக்க சட்டசபையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து,நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி,பிரதமருக்கு கடிதம் எழுதி-அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவு செய்தது. முதியோர் உதவித்தொகை,கற்பிணி பெண்கள் மற்றும் திருமண உதவித்தொகைகளை இரு மடங்காக உயர்த்தி இருப்பது.

மீண்டும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த தி.மு.க ஆட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் விரையம் செய்து கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு,பலதுறை மருத்துவகல்லூரி,மருத்துவமணையாக மாற்றி அறிவித்து இருப்பது. 

மேற்கண்ட சாதனைகளை தாம் ஆட்சிப்பொருப்பில் அமர்ந்த குறுகிய காலத்தில் அதிவிரைவாக செயல்படுத்தி வரும் தமிழகமுதல்வர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில்,எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 12-மாவட்டங்களிலும்,சென்னை மாநகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவது என எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் முடிவு செய்துள்ளோம். 

இவன்:-
டி.கே.தீரன்சாமி
 மாநில அமைப்பாளர்

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு!அம்மா அவர்களுக்கு டி.கே.தீரன்சாமி கடிதம்

மாண்புமிகு தமிழக முதல்வர்-கழகப்பொதுச்செயலாளர் அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம்! எதிர்வரும் திருச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரிப்பது தொடர்பாக:- இப்பவும் எமது கொங்குதமிழர்பேரவை 2001-முதல் 2010வரை நடைபெற்ற நான்கு பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சி என்ற அரசியல் தளமாக தொடங்கி அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம். கடந்த 7-4-2011 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம். அம்மா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை வழங்கி ஆசிபெற்றிட ஆவண செய்திடவேண்டி 3-முறை கடிதங்கள் கொடுத்துள்ளோம். இந்த நிலையில் எதிர்வரும் திருச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என எமது கட்சியின் சார்பில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எமது ஆதரவு நிலையை அம்மா அவர்களிடம் நேரில் தெரிவிக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். நாள்:14-9-2011 இவன்:- இணைப்பு:-7-4-11 அன்று அம்மா அவர்களை நேரில் சந்தித்த புகைப்படம்&பத்திரிக்கை செய்திகள்.பிரச்சார நோட்டீஸ்