வியாழன், 6 அக்டோபர், 2011

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு!அம்மா அவர்களுக்கு டி.கே.தீரன்சாமி கடிதம்

மாண்புமிகு தமிழக முதல்வர்-கழகப்பொதுச்செயலாளர் அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம்! எதிர்வரும் திருச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரிப்பது தொடர்பாக:- இப்பவும் எமது கொங்குதமிழர்பேரவை 2001-முதல் 2010வரை நடைபெற்ற நான்கு பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சி என்ற அரசியல் தளமாக தொடங்கி அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம். கடந்த 7-4-2011 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம். அம்மா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை வழங்கி ஆசிபெற்றிட ஆவண செய்திடவேண்டி 3-முறை கடிதங்கள் கொடுத்துள்ளோம். இந்த நிலையில் எதிர்வரும் திருச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என எமது கட்சியின் சார்பில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எமது ஆதரவு நிலையை அம்மா அவர்களிடம் நேரில் தெரிவிக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். நாள்:14-9-2011 இவன்:- இணைப்பு:-7-4-11 அன்று அம்மா அவர்களை நேரில் சந்தித்த புகைப்படம்&பத்திரிக்கை செய்திகள்.பிரச்சார நோட்டீஸ்

கருத்துகள் இல்லை: