திங்கள், 26 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் ,சட்ட பேரவைத் தேர்தல் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி!! எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி!! கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி சபதம்.

 எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத் தேர்தல் 
அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி 
 எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி!

 உலக தமிழர்களின் உன்னதத்  தலைவி டாக்டர். புரட்சித்  தலைவி அம்மா அவர்களின் ஸ்ரீ ரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.வளர்மதி அவர்கள்  இரட்டை இலை சின்னத்தில் அமோக வெற்றி பெறுவது உறுதி - எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி! இதுவும் உறுதி 

 எனவே மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  வேட்பாளருக்கு எதிராக எதிர்கட்சிகள்  களம் காண்பது கேளிக்கூத்து! 
 
வருகின்ற 02.02.2015 அன்று முதல் ஸ்ரீ ரங்கம் சட்டப் பேரவை தேர்தலில் அம்மா அவர்களின் அ.இ.அ.தி.மு.க.வேட்பாளருக்கு - இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க  அணிவகுக்க உள்ளோம்.

திருப்பூர்,கரூர்,கோவை ,ஈரோடு,சேலம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் 02.02.2015 அன்று வைரமடையில் அணி திரண்டு,ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட கொங்கு தமிழர் கட்சியின் சார்ப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  
 
எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத்  தேர்தலில்  நமது கட்சியினர் அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச்சேகரித்து  - அம்மாவின் இரட்டை இலை சின்னம் அமோக வெற்றி பெறவும் - எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலியாகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இப்படிக்கு 
 டி.கே.தீரன்சாமி 
 தேசிய தலைவர் - அமைப்பாளர் - கொங்கு தமிழர் கட்சி 


கொங்கு தமிழர் கட்சியின் தேசியஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,குடியரசு தின உரை நிகழ்த்தினார்

இனிய குடியரசு தின விழா - 2015


ஜனவரி 2015 -26

டி.எஸ்.சண்முகம்,டி.கே.தீரன்சாமி ,தலைமைஆசிரியர்
    இன்று காலை 9 மணிக்கு காங்கயம் நகராட்சி தொட்டியபட்டி அரசு பள்ளியில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய தலைவர் அமைப்பாளரும் - தொட்டியபட்டி அரசு பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினருமான டி.கே.தீரன்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து - பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி - குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

  
அரசு பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும்
வரவேற்றார்கள் இப்பள்ளியின் PTA தலைவரும் - கல்விக்குழு உறுப்பினருமான டி.கே.சண்முகம் நன்றி கூறினார்.

 

இப்பள்ளிக் குழந்தைகள் நலன் காத்திட பள்ளி வேலை நேரமான காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் அரசு டவுன் பஸ் வசதியை அரசிடம் வேண்டுவது எனவும் இந்த பஸ் வசதி அனைத்து மக்களுக்கும் பயன் தரும் வண்ணம் பஸ் வழி தடம் போக்குவரத்து பனி மனை , ஐயாசாமி நகர் காலனி , போக்குவரத்து நகர் , ராஜீவ் நகர் , தொட்டியபட்டி செம்மடை , வரதப்பம்பாளையம் , நெய்க்காரன் பாளையம் வழித்தடமாக அமைய வேண்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது. நன்றி.



 தகவல் PTA தலைவர் டி.எஸ்.சண்முகம்