வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மக்கள்படையை தட்டி எழுப்பட்டும்!கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கருத்துரை!


விகடன் செய்திகள் இணையதளத்தில் அண்ணா கசாரே குழுவின் அணுகுமுறை சரியா? விவாதக்களத்தில் நான் பதிவுசெய்த கருத்துரை:-

அண்ணா கசாரே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.காந்தியவாதி,ஆன்மீகத்தில் விவேகானந்தரை மானசீகமாக் ஏற்றுக்கொண்ட்வர்,ஒரு சாதாரண குடில்போன்ற இல்லத்தில் வசித்து வருபவர்,திருமணம் ஆகாத பிரம்மச்சாரி,சமூகசேவகர்.தனக்கென சுயதேவை எதுவும் இல்லாதவர்.

தமது சித்திக் கிராமத்தில் மழை இருந்தும் விவசாயம் செய்ய நீர் இல்லாத அவலத்தைக்கண்டு அந்தமக்களின் மறுவாழ்வுக்கு தனது ஓய்வுக்காலத்தை அர்பணித்தவர் அண்ணா கசாரே.

சித்திக்கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான பூமிகளை பொன்விளையும் பசுமைச்சோலையாக மாற்றியவர்.லோக்பால் வரைவுக்குழுவில் சிவில்சமூகதிற்கு தலைமை ஏற்றவர்.

அண்ணாவின் சிவில்சமூக இயக்கத்தின்கீழ் துணை நிற்பவர்கள் ஒன்றும் சாதாராண ஆட்கள் அல்ல! என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஓய்வுபெற்ற காவல்துறை தலைவரும்,சமூக சேவகருமான கிரண்பேடி,
உச்சநீதிமன்றத்தின் மூத்தசட்டப் போராளிகள் பூசன் சகோதரர்கள்,
சமூகப்புரட்சியாளர் மேதாபட்கர் உள்ளிட்டவர்கள் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஹசாரேவுடன் இணைந்துள்ளர்கள்.

இவர்களின் ஒத்துழைப்பு,வழிகாட்டுதல் அண்ணாவை சரியான வழியில் இட்டுச்செல்லும்.ஏனெனில் லட்சக்கணக்கில் உயிர்களை பழிகொடுத்து,
பல லட்சம் கோடிரூபாய் மதிப்பில் இயற்கை வளத்தை இழந்து,200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றோம்.

விடுதலைக்கு பிறகு ஊழலின் தொடக்க ஆட்டம் 65 கோடிரூபாயில் ஆரம்பித்ததது.அதன்பிறகு தொடர்ந்து 65 ஆண்டுகள் நமது அரசியல் மட்டையாளர்கள் அதிரடியாக விளையாடி தொடர் சிக்ஸர்களாக அடித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக குவித்து சர்வதேசத்தரத்தில் முதலிடத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

ஊழல் ஒழிப்பில் அண்ணாஹாசரே குழுவின் அணுகுமுறை சரியானதே!அவர் தலைமையிலான சிவில்சமூகம் தயாரித்த தன்லோக்பாலை மத்திய அரசு ஏற்கத்தான் வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் என்பது பிரதமருக்கும் சாதாரண குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே ஊழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.அதற்கு ஊழல் ஒழிப்பு முன்னனி என்ற மக்கள் கட்டமைப்பு தேவை.

அது அண்ணா ஹாசாரே தலைமையில் பிரசவிக்க தயாராகி வருகிறது.நாமும் அதை நல்ல படியாக வளர்த்தெடுக்க முயல்வோம்.அநீதிகளுக்கு எதிராக ஆர்பரிக்கும் விகடன் குழுமமும் ஊழலுக்கு எதிரான மக்கள் படையை தட்டி எழுப்பட்டும்!

இவன்:டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி

கருத்துகள் இல்லை: