ஆகஸ்ட்டு 15 - பதிப்பு:1
இன்று 65 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து,பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்களை இழந்து , தொடர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி நமது தேசத்தை கொள்ளை அடித்த வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.
ஹசாரே இந்தியராணுவத்தில் இருந்தபோது எடுத்த படம் |
ஆனால் இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைபட்டு உள்ளோம் . ஊழலுக்கு எதிராக இனி ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. லஞ்சம் ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும் ,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற காந்தியவாதியும் சமூக சேவகருமான அன்னா ஹசாராவின் சிவில் சமூகம் லோக்பால் மசோதா கமிட்டியில் இடம் பெற்று இருந்தனர் .ஹசாரே குழுவினர் பிரதமர் , நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வழியுருத்தி வந்தார்கள் .
ஹசாரே குழுவின் இத்தகைய முக்கிய கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு கடந்த வாரத்தில் மத்திய அரசு நாடாளு மன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது .சிவில் சமூகத்தின் முக்கிய கோரிக்கைகளை மசோதாவில் சேர்க்கத் தவறினால் ஆகஸ்ட் 16 முதல் புதுதில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக ஏற்கனவே அன்னாஹசரே அறிவித்து இருந்தார்.
ஆனால் தில்லி காவல்துறை காந்திய வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் 22 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.முதலில் உண்ணாவிரதத்திற்கு இடம் தர மறுத்தது.ஹசாரே குழுவினர் எந்த இடமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்ன பிறகு பெரோஸ்கோ கோட்லா மைதானம் அருகில் உள்ள ஜெயப்பிரகாஸ் நாரயண் பூங்காவில் அனுமதி அளித்தனர்.
தற்பொழுது அனுமதித்துள்ள இடத்தை காவல்துறைதான் பரிந்துறைத்தது.அதற்க்கும் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி 18-ம் தேதி மாலை 5-மணிக்கெல்லாம் முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறது.ஹசாரேவின் சிவில்சமூகம் காலவரையற்ற போராட்டம் தேவை என்கிறது! காவல் துறை அதை கட்டுக்குள் கொண்டு வரமுயல்கிறது.
மேலும் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களை மருத்துவ குழு ஒன்று மூன்று வேலையும் பரிசோதித்து,தேவைப்பட்டால் மருத்துவமணைக்கு எடுத்துச்
சென்று ஊசிமூலம் உணவு செலுத்தப்படும்.போராட்டத்தில் 5,0000 தொண்டர்கள் மற்றும் 50 கார்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை மிரட்டுகிறது.
கூடவே தொண்டர்கள் கத்தி,கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு
வரக்கூடாது என ஹசாரே குழுவின் காந்திய வழியிலான சத்தியாகிரகப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஆயுதங்கள் இருந்தால் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்களாம்.
ஹசாரேவின் சிவில்சமூகம் காவல்துறையின் இத்தகைய கட்டுப்பாடுகளை
ஏற்க மறுக்கிறது.இதனால் போரட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.தடையை மீறி போராட்டம் நடத்தவும்,சிறை நிரப்பவும் ஹசாரேவின் சிவில் சமூகம் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஒய்வுபெற்ற காவல்துறை இயக்குனருமான கிரண்பேடி,உச்சநீதிமன்ற மூத்தவழக்கறிஞர் பிரசாந்த்பூசன்,ஆர்.எஸ்.எஸ்,
கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஹசாரேவின் போராட்டத்தை ஆதரிக்கிறது.
காந்திசமாதிமுன்பு ஹசாரே |
இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று ஹசாரே தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சமாதி முன்பாக அமர்ந்து தியானம் செய்யத்தொடங்கி விட்டார்.இதைப்பார்த்த ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.
இவற்றை எல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மணீஸ்திவாரி,கபில்சிபல் போன்றவர்கள் ஹசாரேவின் தலைமையில் செயல்படும் அறக்கட்டளை ஊழல்புரிந்துள்ளது.ஊழலுக்குஎதிராக போராடும் ஹசாரே ஊழல் பேர்வழி முதலில்அவரது தலைமையில் செயல்படும் அறக்கட்டளையின் முறைகேட்டுக்கு பதில் சொல்லட்டும்.சாவந்த் கமிசனின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கட்டும் என்கிற ரீதியில்ஊழல் எதிர்ப்பு போரட்டத்தை கொச்சைப்படுத்த முயல்வதை கண்கூடாக காணமுடிகிறது.
இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பிரதமர்,சனாதிபதி உள்ளிட்டவர்களுக்கும், சாதாரண சிவில் குடிமக்களுக்கும் பொதுவானதுதானே?அப்படி இருக்கும் பொழுது ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் மட்டும் ஏன் இந்த விதி விலக்கு? இது சமூக ஆர்வாளர்களின் மில்லியன் டாலர் கேள்வி.யார் பதில் சொல்வது?
தற்போதைய சூழலில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில்அன்னாஹசரேவின் செயல்பாடுகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.எனவே எமது கொங்கு தமிழர் கட்சி ம்ற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்தை உறுதியுடன் ஆதரிக்கும்.தமிழ் வலைதளப்பதிவர்கள் இத்தகைய ஊழல் ஒழிப்பு போரட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
இவன்:டி.கே.தீரன்சாமி
நன்றி:புகைப்படம் -திஹிந்து,ஹசாரே வ.தளம்.
ஆகஸ்ட்-16 பதிப்பு:2
நம் தேசத்தின் தலைநகரத்தில் 1975 நினைவூட்டுவதாக அறிவிக்கப்படாத எமர்சென்சி இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.
தில்லியின் பெரோஸ்ஸ கோட்லா மைதானம் அருகே உள்ள ஜெயப்பிரகாஸ் நாராயன் பூங்கா அமைந்துள்ள பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நமது தேசத்தின் 65-வது சுதந்திர தினம் முடிந்த தருவாய்யில் சனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்கும் பிரிட்டிஸ் அரசின் அதே கொடுங்கோல் தன்மையுடன்,அதே காங்கிரஸ் அரசு சொந்த சிவில் சமூகத்தின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.
லோக்பால் மசோதாவில் பிரதமர்,நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களை சேர்க்கவேண்டும்.இதுதான் ஹசாரே தலைமையிலான சிவில் சமூகத்தின் கோரிக்கை!இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்றும் அதற்கு ஆகஸ்ட்-16 தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தார் ஹசாரே!
கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை கையோடு இன்று காலை கிழக்கு தில்லியின் மயூர்விகார் பகுதியில் தனது வீட்டில் இருந்த அன்னாஹசாரே மற்றும் அர்விந்த்கெஸ்வால் ஆகிய இருவரையும் கைது செய்யதனர்.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனரும்,சமூக சேவகருமான கிரண்பேடியும் கைது செய்யப்பட்டார்.காந்திய வழியிலான உண்ணாவிரதத்தை ஒடுக்கும் காங்கிரஸின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.
புதுதில்லியில் ஹசாரேவின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.நாடு முழுவது ஊழலுக்கு எதிரான போர் உத்வேகத்துடன் சீற்றம் கொள்ள தயாராகி வருகிறதும்.ஐ.ஐ.டி மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவாக போராட தயராகி வருகின்றன.
இனியும் ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதாவை புறக்கணிக்கும் உழல் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.தில்லி காவல்துறையின் மிசா செயல்பாடுகள் இன்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.
காங்கிரஸ் அரசின் பிற்போக்குத்தனமான இத்தகைய செயல்பாடுகளை எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
வாருங்கள் லஞ்சம்-ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஹசாரேவின் தலைமையிலான ஊழல் ஒழிப்பு முன்னனியில் பங்கேற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக