சனி, 6 ஆகஸ்ட், 2011

தீரன்சின்னமலை ஆடிபெறுக்கு விழா!தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம்


              கொங்குதமிழர்கட்சி                                                
                          தமிழ்நாடுதீரன்சின்னமலைபசாறை                            
              பழையகோட்டை சாலை,அய்யாசாமிநகர் காலனி,காங்கயம்,திருப்பூர்-638701
                                        அலைபேசி:9865126679,8825264949,
               வலைதளம்:kongutamailarblogspot.com,மின்னஞ்சல்:theeransamy@gmail.com
                            
                        முதல்வருக்கு கடிதம்: 2 (6-8-2011)


டி.கே.தீரன்சாமி 
(மாநிலஅமைப்பாளர்)

பெறுநர்:-

மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள்
தலைமைசெயலகம்,சென்னை

    வீரமிகு அம்மா அவர்களுக்கு வணக்கம்! ஆடி-18 தீரன்சின்னமலையின் 206-வது நினைவுதினத்தை- தீரன்சின்னமலைஆடிப்பெறுக்கு விழாவாக அறிவித்து ஈரோடுமாவட்டம் ஒடாநிலையில் அரசுவிழா நடத்தி-தமிழகத்தின் 7-அமைச்சர் பெருமக்களை கலந்து கொள்ளச்செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  மேலும் மாவீரன் பிறந்த எமது திருப்பூர்மாவட்டம் காங்கயம் மேலப்பாளைதிற்கு 5-அமைச்சர்களையும்,மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டைக்கு 2-அமைச்சர்களையும் அனுப்பி வைத்து சிறப்பித்தமைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

  2001 மற்றும் 2006 சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல்,2004 மற்றும் 2009 மக்களவை பொதுத்தேர்தல்,மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு கூட்டணியை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

  நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சி என்ற அரசியல் தளமாக தொடங்கி கொங்குதமிழத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தி.மு.க மற்றும் கொ.மு.க வின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம். 

  கடந்த 07-04-2011 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம்.

  மேலும் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் எமது சொந்தச்செலவில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே,தங்களை நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்.அது சமயம் நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  குறிப்பு:-தங்களை நேரில் சந்திக்க வேண்டி முன்பே இரண்டு கடிதங்கள் அனுப்பியுள்ளோம்.மீண்டும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்து ஆவண செய்ய வேண்டி இக்கடிதம் அமையும் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன்

                                                                    நாள்:-06-08-2011                                                                                                                                               இவன்:-டி.கே.தீரன்சாமி                                                                                                                                                                                                                
'(மாநிலஅமைப்பாளர்)

கருத்துகள் இல்லை: