செவ்வாய், 25 ஜனவரி, 2011


உலகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமை சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் 

இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை.

 நமது பாரததேசம் இருநூறு ஆண்டுகள் தொடர்ந்து மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம்  தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டுக்கு உட்பட்ட 24நாடுகளில் காங்கயம்நாட்டில் மேளப்பாளையம் கொங்குவேளாளர் சாதீ பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதியர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.

 1790க்கும் மேற்பட்டகாலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்து தூக்குமேடையில் நம்நாட்டு விடுதலைக்காக தம் இன்னுயிரை துறந்தவர்தான் தீரன்சின்னமலை.அடிமைதலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைபடுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

 தீரன்சின்னமலையின் கொங்குபடையில் கறுப்புச்சேர்வைதேவர்,கட்டுத்தரிநாடார்,ஆதிதிராவிடர்சுபேதர்வேலப்பன்,அருந்ததியர்சமூகத்தைசார்ந்த செறுப்புத்தைக்கும்தொழிலாளி பொல்லான்,ஆருயிர்நண்பனாக-வழிகாட்டும் தளபதியாக இஸ்லாமிய மாவீரன் கன்னடத்துப்புலி திப்புசுல்தான்,பத்தேமுகமதூசேன்,போர்ப்பயிற்சி அளித்த வெள்ளை இனத்தை சார்ந்த பிரான்சு வீரர்கள்,விருபாச்சிகோபாலநாய்க்கர்,வன்னியர்சமூகவீரர்கள்,என அனைத்துச்சமூகத்தை சார்ந்தவர்களும் சின்னமலையின்போர்படையில் வீரப்போர்புரிந்து நாம் இன்று ருசிக்கும் சுதந்திரத்திற்காக அன்றே மரணத்தை முத்தமிட்டார்கள். 

  மண்ணுரிமைக்காக மகத்தான தியாகம் செய்த மாவீரர்களின் பாதம்தொட்டு சமூக-அரசிய்ல்-சுற்றுச்சூழல்-குற்றவியல்-புலானாய்வு-செய்திகளை-கருத்துகளை இந்த வலைதளம் வாயிலாக உங்களுடன் -நீங்கள் எங்களுடன் உண்மைகளை உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்வோம். டி.கே.தீரன்சாமி...மாவீரன் தீரன்-

கருத்துகள் இல்லை: