திங்கள், 23 செப்டம்பர், 2013

கலிங்கராயனாருக்கு சிலை-முதல்வர் அம்மாஅவர்களுக்கு கொங்குதமிழர்கட்சி மாநிலத்தலைவர் தெ.கு.தீரன்சாமி நன்றி தெரிவித்து கடிதம்


பொருள்:
ஈகை பெருந்தகையார் "காலிங்கராயனார்" அவர்களுக்கு 
சிலை அமைத்திட உத்தரவிட்ட அம்மா அவர்களுக்கு  நன்றி தெரிவிப்பது தொடர்பாக.
மாண்பு மிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.
    1991 முதல் புரட்சித் தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தபோதும் சரி , இல்லாதா போதும் சரி கொங்கு தமிழகத்திற்கும், கொங்கு சமுதாய மக்களுக்கும் எண்ணற்ற ,சொல்லில் வடிக்க முடியாதா செயற்கரிய சாதனைகளை தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளீர்கள் .

    அதன் ஒரு பகுதியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்ணின் வறட்சி  மிக்க ஒரு பகுதியை பொன்விளையும் பூமியாக மாற்றிக்  காட்டவேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையில் சுமார் 100 மைல்கல்  தொலைவிற்கும் மேலாக தனது சொந்த செல்வத்தை கரைத்து, சொந்த மக்களின் உழைப்பை தந்து காலிங்கராயன் வாய்க்கால் அமைத்தார். 

தானும் தனது குடும்பமும் அதன் விளைச்சலில் பயன்படக் கூடாது  என்ற லாப நோக்கமற்ற ஈகைத்தன்மையில் செயலாற்றியவர் தியாகி.காலிங்கராயனார் அவர்கள். அப்படி பட்ட தியாகச் செம்மலுக்கு ஈரோடு மாவட்டம் பவானியில் சிலை அமைத்திட ஆவண  செய்து உத்தரவு பிறப்பித்த மாண்பு மிகு அம்மா அவர்களுக்கு  மக்களின் சார்பிலும், கொங்கு தமிழகத்தின் சார்பிலும் மீண்டும்,மீண்டும் நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன்.
                                                              இவன்:-
                                                      டி.கே.தீரன்சாமி 
                                                 (  மாநிலஅமைப்பாளர்.)
 குறிப்பு:-                                      
கடந்த 13 -ஆண்டுகளில் நடைபெற்ற 5 -பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து எமது சொந்தச்செலவில் கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.என்பது குறிப்பிடத்தக்கது!

அம்மா அவர்கள் முதல்வர் பொருப்பெற்ற பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை தங்களிடம் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை: