ஞாயிறு, 22 ஜூன், 2014

கொங்குநாட்டு சிவன்மலை முருகனின் தலவரலாறு

கொங்குநாடு என்பது 24-நாடுகளை உள்ளடக்கியது.அதில் காங்கயம் நாடும் ஒன்று.அங்கு சிவன்மலையில் குடிகொண்டிருக்கும்,சிவன்மலை முருகனின் தலவரலாறும்,சித்தர் சிவவாக்கியரின் சிறப்புகளும்,கொங்கு நாட்டின் சுருக்கமான வரலாறும்,சிவன்மலையின் அரிய புகைப்படங்களும்-சுமார் 55-பக்கங்கள் கொண்ட புத்தகமாக தமிழநாடு இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தப்புத்தகத்தில் சிவன்மலை முருகனின் தெயவத்தளபதி,இந்திய விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலைக்கும்,சிவன்மலைமுருகனுக்கும்,பட்டாலி கிராமத்துக்கும், சிவன்மலைக்கும் உள்ள தொடர்புகளும், அதைச் சுற்றிலும் தீரன்சின்னமலை செய்த அற்புதமான செயல்பாடுகளும்,அது சார்ந்த வரலாற்று பதிவுகளும் விடுபட்டுள்ளது.

இது தொடர்பாக நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கும்,தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல உள்ளோம்.

எமது கொங்கு தமிழர் பேரவை சார்பில் கடந்த காலங்களில் சுமார் எட்டு ஆண்டுகள்-2008 வ்ரை,சிவன்மலையில் தைப்பூசத்தேர்திருவிழா அன்று,எல்லப்பாளையம் காவடி அன்னதான அரங்கில் தீரன்சின்னமலை போர்ப்பாசறை விழா,மற்றும் தமிழர் கலை பண்பாட்டு விழாவினை சிறப்பாக  நடத்தினோம்.அதில் சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை, சிவன்மலையைச் சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள் என்று ஆண்டுதோரும் சுமார் அய்யாயிரம் பிரதிகள் இலவசமாக வெளியீடு செய்து சிறப்பித்தோம்.

மேலும்,சிவன்மலை முருகனுக்கும்,தீரன்சின்னமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தில் விரைவில் பதிவுசெய்யப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

சரி இனி இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு செய்த "சிவன்மலை முருகனின் தல வரலாற்றை" படியுங்கள்.தங்கள மேலான கருத்துரைகளை பதிவு செய்யுங்கள். 


மேலும் இந்த புத்தகவடிவத்தின் நகல் சிவன்மலை முருகன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sivanmalaimurugan.tnhrce.in என்ற என்ற முகவரியிலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது.








   

நன்றி:-சிவன்மலை தேவஸ்தானம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறை

குமுதம்.சித்தர்கள் தவமியற்றும் சிவன்மலை

வெள்ளி, 16 மே, 2014

37-தொகுதிகளில் வெற்றி-அம்மா அவர்களுக்கு கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி அறிக்கை


  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆழிப்பேரலையாக தனித்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். 40-மக்களவைத்தொகுதிகளிலும் தமது அரசு செய்த மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தும்,காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தமிழகத்துக்கும்,தமிழர்களுக்கும் இழைத்த துரோகத்தை பட்டியளிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகாலத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றப்பட்டன.அதன் விளைவுதான் தற்பொழுது வாக்குகளாகமாறி-37-மக்களவைத் தொகுதிகள் என்ற பெரும் வெற்றிப்பரிசை தமிழக மக்கள் நம்முடைய முதல்வருக்கு அளித்துள்ளார்கள்.

அதேபோல கொங்கு தமிழகம் அ.இ.அ.தி.மு.கவின் இரும்புக்கோட்டை என்பதை இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் நிருபித்துள்ளன.

தமிழக முதல்வர் அம்மா என்ற பெரும் கடலில்,சிறு துளியாக அம்மா அவர்களின் வெற்றிக்கு-"நாற்பது தொகுதிகளிலும் வெற்றி நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" எனபக்தி முழக்கமிட்டு சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள்,அமைப்புகள் அம்மா அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

மேலும் கூடுதலாக அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 37-தொகுதிகள் வென்றதின் மூலம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சக்தியாக உறுவெடுத்துள்ள அம்மா அவர்கள் எதிர்காலத்தில் பாரதப்பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இத்தகைய வெற்றிக்கு வித்திட்ட நம்முடைய தமிழக மக்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,இந்தியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பாரதப்பிரதமராக பதவியில் அமரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த நரேந்திரமோடிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

திங்கள், 12 மே, 2014

தினத்தந்தியின் 17-வது திருப்பூர் பதிப்பு வீறுகொண்டு,வெற்றிநடைபோட கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி வாழ்த்துரை செய்தி;-


12/05/2014 தினத்தந்தியின் 17-வது திருப்பூர் பதிப்பு வீறுகொண்டு, வெற்றிநடைபோட 
கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி வாழ்த்துரை ;-

தமிழர்களின் அறிவிப்பசியை போக்கும் வகையிலும்,படிக்கத் தெரியாத
குக்கிராமத்து மக்களை படிக்கவைக்கும் பாடசாலையாக சி.பா.ஆதித்தனார்
அவர்களால் தொடங்கப்பட்டு,அவர்தம் அருள்செல்வர் சிவந்தி ஆதித்தனாரல்
வளர்தெடுக்கப்பட்டது.

இன்று சென்னை,மதுரை,திருச்சி,கோவை,நெல்லை, வேலூர்,கடலூர்,சேலம்,பெங்களூர்,பாண்டிச்சேரி,ஈரோடு,நாகர்கோவில்,தஞ்சை,திண்டுக்கல்,மும்பை,உள்ளிட்ட நகரங்களில் பதியப்பட்டு 17-லட்சங்களுக்கு மேல் பிரதிகளை
எடுத்துச்செல்லும்ஒப்பற்ற தினத்தந்தியின் நீண்ட பயணத்தில் எமது
கொங்குதமிழகத்தின் திருப்பூர் பதிப்பு தினத்தந்தியின் 16-வது பதிப்பாக
வெளிவருவதை அறிந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை
தொழிற்சங்கப்பேரவை மகிழ்சியுடன் எமது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது.

இவன்:-
தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்

வியாழன், 8 மே, 2014

முல்லைப்பெரியறு அணைப்பிரச்சனையில் முதல் போராளி தமிழக முதல்வர் அம்மா! கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு,தீரன்சாமி புகழாரம்!


08/05/2014  கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்
தெ.கு,தீரன்சாமியின் ஊடகச்செய்தி அறிக்ககை

கேரள மாநிலம் இடுக்கியில் 120 ஆண்டுகளுக்கு முன்பு பென்னிக்குயிக் என்ற
ஆங்கிலேயரின் சீரிய முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை
கட்டப்பட்டது.திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும்-சென்னை மகாண அரசுக்கும்
இடையே 999 ஆண்டுகாலத்துக்கு-152 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி
பயன்படுத்தி கொள்ளலாம்.என ஒப்பந்தம் போடப்பட்டது.

அணையில் விரிசல் ஏற்படுவதாக சொல்லி கேரள அரசு நீர் மட்டத்தை 136 அடியாக
குறைத்தது.இதை எதிர்த்து அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.

அம்மா அவர்களின் கடுமையான சட்டப்போராட்டத்துக்கு பிறகு 2006-பிப்ரவரியில்
136-அடி என்பதை மாற்றி மீண்டும் 142-அடியாக உயர்த்திக்கொள்ளலாம்.என
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அந்தத்தீர்ப்பை
நீர்த்துப்போகச்செய்யும் வகையில் கேரள அரசு சட்டம் இயற்றியது.

அப்பொழுதும் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டுமென அம்மா அவர்களின்
தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது
உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தன் தலைமையிலான 5-நபர்கள் குழுவை அமைத்தது.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு அந்தக்குழு முல்லைப்பெரியாறு அணை
பாதுகாப்பாக உள்ளதாக 2012-ஏப்ரல்-25-ல் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
தாக்கல் செய்தது.பல்வேறு சட்டப்போராட்டங்களை சந்தித்த இந்த
வழக்கில்"முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142-அடியாக
உயர்த்திக்கொள்ளாலம்" என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதற்கு முதல் போராளியாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் நம்முடைய தமிழக
முதல்வர் டாக்டர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.தமிழகத்தின் காவல்
தெய்வமாக,தமிழர்களை காக்கும் ஆதிபராசக்தியாக அம்மா அவர்கள் சக்தியின்
வடிவமாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.இதற்கு எமது கொங்கு தமிழர்
கட்சி,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை மற்றும் கொங்கு தமிழகத்தின்
சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம்.

இவன்
தெ.கு.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தென்னிந்திய சிறு விசைத்தறியாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி செய்தி அறிக்கை.:-




கொங்கு தமிழர் கட்சி மற்றும் தென்னிந்திய சிறு விசைத்தறியாளர்கள்
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி செய்தி அறிக்கை.:-

கொங்கு தமிழகத்தில் விவசாயம் குறிப்பாக சிறு விவசாயம் பொய்த்துப்போன
பின்பு கிராமப்பொருளாதரத்தைத் தூக்கி நிறுத்தும் சக்தியாக விளங்கியது
சிறு விசைத்தறி தொழில். திருப்பூர்,ஈரோடு,சேலம்,கரூர்,திண்டுக்கல்,கோவை
கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்
டி.கே.தீரன்சாமி
வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டபோது எடுத்த படம்
உள்ளிட்ட கொங்கு தமிழகம் முழுவதும் கடந்த நாற்பது ஆண்டுகளாக வளர்ந்து சிறப்புடன் செயல்பட்டு வந்தது.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் கடந்த பத்து ஆண்டுகாள தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவும்,நிலையற்ற பஞ்சு,மற்றும் நூல் விலை உயர்வின் காரணமாகவும்,மலிவு விலையில்,தரம் குறைந்த சீனா துணிகளை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் காரணமாகவும் சிறுவிசைத்தறித் தொழில் பெறும் பாதிப்புக்கு ஆளானது.

மேலும் சிறு விசைத்தறி துணிகளின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்களும் கடந்த பத்து ஆண்டுகளில் சரிந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மைய அரசு ஜவுளித்தொழிலளை நவீனப்படுத்துவதாக சொல்லி ஏர் லூம்,செட் லூம், வாட்டர் செட் என்று அதி நவீன தறிகளை இறக்குமதி செய்து அமைத்துக்கொள்ள மானியமும்,வங்கியில் கடனும் வழங்கியது.

சொந்தமாக குறைந்தது இருபது இலட்சம் முதலீடு செய்தால் மட்டுமே மேற்படி தானியங்கித் தறிகளை அமைக்க மைய அரசின் மானியமும்,வங்கிகளில் கடனும் பெறமுடியும்.இத்தகைய நவீனமயம் வசதிபடைத்த பெறும் ஜவுளிஉற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதகமாக அமைந்தது.தாமே சொந்தமாக தானியங்கி தறிகளை அமைத்து வருகின்றனர்.இதனால் அவர்களிடம் கூலிக்கு நெசவு செய்து வந்த சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்குறைப்புக்கும்,வேலை இழப்புக்கும் ஆளாகி உள்ளனர்.

இதன் விளைவு சுமார் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள சிறு விசைத்தறிகள்
ரூபாய் பத்தாயிரத்துக்கு.பழைய இரும்புக்கடைகளுக்கு எடைக்கு விற்கப்படும்
அவலத்திற்கு சிறு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கும் குறைவான ஜவுளி உற்பத்தியாளர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்த மையஅரசு,சுமார் இருபது இலட்சம் சிறு விசைத்தறியாளர்களையும்,இலட்சக்கணக்கான தொழிலாளர்களையும் படுகுழியில் தள்ளியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் நம்முடைய இயக்கம் தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பேசியபோது மேற்படி கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

கொங்கு தமிழகத்தின் அவசர சிகிச்சை பிரிவில் ஊசலாடும் சிறுவிசைத்தறித் தொழிலை காப்பாற்ற தமிழக முதல்வர் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யவேண்டும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா.


17-04-2014-கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் விடுதலை போராட்ட மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம், மேலப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர்,ஓடாநிலையில் மாலை,மரியாதை செலுத்தப்பட்டது.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மதுரை ஆதீனம்,கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி பொள்ளாட்சியில் வாக்குச்சேகரிப்பு

11-04-214-பொள்ளாட்சி மக்களவைத்தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் அவர்களை ஆதரித்து-வாக்குச்சேகரிக்கும் பொதுக்கூட்டம் பொள்ளாட்சி நகர திருவள்ளுவர் திடலில் நடைபெற்றதது.

அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு துணை சபாநாயகர்-பொள்ளாட்சி.வி.ஜெயராமன்,தமிழ்நாடு கேபிள் டி.வி சேர்மன்.உடுமலை.ராதகிருசணன்,பொள்ளாட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பணசாமி, கழக நகரச்செயலாளர் கிரி,மயில்சாமி,நகர்மன்றத்தலைவர்,துணை சாபநாயகரின் உதவியாளர் வீராசமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குருமகா சந்நிதானம்-மதுரை ஆதீனம் அவர்கள் சிறப்புரை ஆற்றி வாக்குச்சேகரித்தார்கள்.

மேலும் நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மற்றும் கொங்கு தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.








கொங்கு தமிழர் கட்சியின் கோவை மாவட்ட அமைப்பாளரும்,பொள்ளாட்சி மக்களவைத்தொகுதி பொருப்பாளருமான கே.ஏ.பாலசுப்பிரமணி,தலைமை நிலையச்செயலாளரும்,திருப்பூர் மாவட்ட அமைப்பாருமான டி.எஸ்.சண்முகம்,ஈரோடு மாநகர,மாவட்ட அமைப்பாளர் ஈ.எஸ்.செல்வக்குமார்,கரூர் மாவட்ட அமைப்பாளர் பி.சி.சண்முகம் மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் பொதுச்செயலாளர் கே.எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

வியாழன், 20 மார்ச், 2014

துண்டறிக்கை -1,2-அம்மா அவர்களை ஆதரித்து பிரச்சாரம்

40-தொகுதிகளிலும் வெற்றி நாளைய பாரதம் அம்மா அவர்களைச்சுற்றி


இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழகத்தை சார்ந்த யாரும் பாரதப்பிரதமராக வரவில்லை
 தமிழகத்தில், கடும் மின் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், மத்திய மின் தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரவில்லை.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என கனவிலும் நினைக்கவில்லை.

 நெய்வேலி அனல் மின்நிலையம் தமிழக மண்ணில் நிலக்கரி வெட்டி எடுத்து,பத்தாயிரத்துக்கும் மேலான ஒப்பந்தத்தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி,நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,சுமார் 4500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து,ஆண்டுதோரும் ஆயிரம்கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது.

இப்படி நம்முடைய தமிழகத்தில்  உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் சிறு பகுதியை நமக்கு வழங்கிவிட்டு, 80 விழுக்காட்டுக்கு மேல் கேரளா,  கர்நாடகா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

இந்தப்பணிக்காக நம்முடைய விளைநிலங்களில் 200,300 மீட்டர் அகலத்தில் ராட்சசா மின்பாதைகள் அமைக்கப்படுகிறது.இதற்கு தமிழக மக்களிடம் இருந்து ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது.

நெய்வேலி, கூடங்குளம் போன்ற, மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும், மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று கூட,சிதம்பரம் கேட்கவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய, காவிரி நீரைப் பெற்றுத் தரவும், நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் முயற்சிக்கவில்லை.சிதம்பரமும் தமிழகத்தின் உரிமைகளை பெற்றிட சிறு துரும்பையும் கிள்ளிப்போட முன்வரவில்லை.


கர்நாடக, தமிழக விவசாயிகள் உட்கார்ந்து பேசினால் ஒழிய, காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் நாரிமன் புலம்பியுள்ளார். கர்நாடக அரசின் சார்பில் வாதிடுபவர், இந்த நாரிமன்.அவர்பக்கம் காவிரி பிரச்னை குறித்த வலுவான வாதங்கள் இல்லை போலும்.

இதுவரை, இரு மாநில முதல்வர்களும் 30 முறைக்கு மேல் சந்தித்து, காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதித்து விட்டனர்; பலன் பூஜ்யம். காவிரி நடுவர் மன்றம், பலமுறை கூடி ஆலோசித்து, தீர்வு கூறியது; பலன் சூன்யம். காவிரி கண்காணிப்பு ஆணையம், பலமுறை கூடி உத்தரவிட்டு விட்டது; பலன் சைபர். உச்சநீதிமன்றம், பல முறை,இரு தரப்பு விவாதங்களை பல, பெஞ்ச் அமைத்து கேட்டு, தீர்ப்பு கூறிவிட்டது; பலனே இல்லை.
விவசாயிகளும், பலமுறை கூடிப் பேசி விட்டனர். எல்லாமே, செவிடன் காதில் ஊதிய சங்காக, வீணாய் போனது.

கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்கள் நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தரவேண்டிய நியாமான தண்ணீரை தரமறுக்கிறது.இதனால் நம்முடைய விளைநிலங்களில் நெல் மற்றும் இதர உணவுப்பொருள்களின் விளைச்சல் நாளுக்கு நாள் சுருங்கிவருகிறது.வருகிறது.

மேலும் அண்டை மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களின்மீது தொடர்ந்து தடுப்பணைகள் அமைத்து, ஆண்டுதோரும் ஆயிரகணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.அங்கு உற்பத்தி செய்யப்படும் மலைபோன்ற நெல்குவியலை அழிக்கும் சந்தையாக தமிழக மக்களை பயன்படுத்தி பொருளாதாரரீதியில் தம்முடைய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி நமக்கு துரோகம் இழைத்து வருகிறது.

எனவே இவற்றை எல்லாம் மாற்றிட! தமிழகத்தை சார்ந்த ஒருவர் பாரதப்பிரதமராக வரவேண்டும். அதற்கு பன்மொழிகள் பேசும் ஆற்றலும்,துணிவுடன் செயல்படக்கூடிய திறனும் உடைய நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பாரதப்பிரதமராக வ்ரவேண்டும்.


ஏன்? தமிழகத்தை சார்ந்த நம்முடைய முதல்வர் அம்மா அவர்கள் பாரதப்பிரதமராக வரவேண்டும்.

1.ஈழத்தில் கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நியாயம் கிடைத்திடவும்,அதற்கு காரணமான கோத்தபயா ராஜபக்சே சகோதரர்களுக்கு தண்டனை கிடைத்திடவும்,இலங்கையில் தனிஈழம் அமைத்திடவேண்டும்.

3.தமிழகத்தில் செயல்படும்- மத்திய மின்தொகுப்பில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் நம்முடைய மின்தேவையை பூர்த்தி செய்தபிறகே அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

4.மத்திய மின்தொகுப்பில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் எடுத்துச்செல்லப்படுகிறது.இதற்கு நம்முடைய விவசாய விளை நிலங்களின் வழியே மின்பாதைகள் அமைக்கப்படுகிறது.இதனால் பாதிக்கப்படும்  விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும்.

5.அண்டை மாநிலங்கள் நமது தமிழகத்திற்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரை தர மறுத்து சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளது.நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் மீதான உரிமையை பெற்றிட வேண்டும்.

6.இந்திய ஏற்றுமதி ஜவுளி வர்ததகத்தில் கொங்கு தமிழகத்தின் பங்களிப்பு 90-விழுக்காடு உள்ளது.இதன் மூலம் மத்திய அரசுக்கு அந்நியச் செலவானி-உள்ளிட்ட இதர வரிகள் மூலம் வருவாய் ஈட்டித்தருகிறது.ஆனால் மத்திய அரசின் தவறான பொருளாதாரக்கொள்கை,தேவையற்ற வரிவிதிப்புகள்,பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தாது-உள்ளிட்ட காரணிகளால் முடக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவணிகம் சார்ந்த ஜவுளித்தொழிலை காப்பாற்றப்படவேண்டும்.

7.பெட்ரோலியப் பொருள்களின் கடும் விலை உயர்வு காரணமாக மோட்டார் போக்குவரத்து தொழில் சரிந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக அன்றாட, அவசிய நுகர்பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. இதனால் இன்னலுக்கு உள்ளாகிவரும் அப்பாவி மக்களின் வாழ்க்கைத்தரம் காப்பாற்றப்படவேண்டும்.

8.மத்திய அரசு மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வர்த்தகத்திட்டங்களுக்கு-நமது விவசாய விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பறித்து- நமது வயிற்றில் அடிக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும்.

9.வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பகாசூரப் படையெடுப்பை தடுத்து நமது சிறு வணிகர்களை பாதுகாக்க உறுதி செய்திட  சுதேசிக்கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

10.ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடவும்,கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் மீன்பிடி தொழிலை காத்திடவேண்டும்.

11.முதல் இந்திய சுதந்திரப்போரை துவக்கி வைத்த தீரன்சின்னமலை,புலித்தேவன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன்,வேலுநாச்சியார்,மருது சகோதரர்கள் உள்ளிட்ட எண்ணற்ற மாவீரர்கள் நமது தமிழகமண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள்.மாவீரர்களின் வீரம் காக்க,நம் மண்ணின் மானம் காக்க நம்மில் ஒருவர் பாரதப்பிரதமராக வரவேண்டும்.

12.அந்த தகுதி வாய்ந்த நம்மில் ஒருவர் யார்?

-ஈரோட்டு மண்ணில் பிறந்து,இருட்டறையில் இருந்த தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, சென்னையிலே உறங்கிக்கொண்டிருக்கும் அய்யா! தந்தை பெரியாரின் அரசியல் வாரிசு,பட்டாடைச் சீமையிலே பிறந்து,வங்கக்கடலோரம் உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தங்கத்தலைவன் அறிஞர்.அண்ணா,நாளை உலகை ஆளவேண்டு,நாடு முழுவது மலரவேண்டும் என புரட்சிப்போர் தொடுத்து- மெரீனா கடலோரம் உறங்கிக்கொண்டிருக்கும் புரட்சிதலைவர்.எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு, பன்மொழிகள் பேசும் திறனும்,
செயல்பாட்டில் துணிவும்  உடைய நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
பாரதப்பிரதமராக வரவேண்டும்.

13.தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பாரதப்பிரதமர் என சூளுரை ஏற்று- "40-தொகுதிகளிலும் வெற்றி" "நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" என முழக்கம் இட்டு தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு இரட்டை இலைசின்னத்தில் வாக்களிக்கவேண்டுமாய் பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவன்:-
தெ.கு.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி
தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை
தென் இந்திய சிறுவிசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்
தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்

சனி, 1 மார்ச், 2014

தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமிக்கு தமிழக முதல்வர்,கழகப்பொதுச்செயலாளர் அம்மா புரட்சித்தலைவி அவர்கள் கடிதம்.

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமிக்கு 
தமிழக முதல்வர்,கழகப்பொதுச்செயலாளர் அம்மா புரட்சித்தலைவி அவர்கள் கடிதம். 

2014 மக்களவைத்தேர்தலில் அம்மா அவர்களுக்கு,நமது கட்சி ஆதரவு அளித்துள்ளது.அதற்கு நன்றி தெரிவித்தும்,மக்களவைத்தேர்தலில் நமது இயக்கத்தின் சார்பில் களப்பணியாற்ற வேண்டியும் அம்மா அவர்கள் அந்தக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.