வெள்ளி, 15 மே, 2015

வணக்கம்,

அரசு விளம்பரங்களில் உச்ச நீதிமன்றம் காட்டியிருக்கும் வழிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தும். குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அதை உறுதிபடுத்த 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் அரசு விளம்பரம் தொடர்பான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா போன்ற கூட்டாச்சி தத்துவ அரசு உடைய நாட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மத்தியில் அங்கம் வகித்தாலும் மாநில அளவில் முதல்வரே மக்களால் பெரிதும் அறியப்படுகிறார்.

மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாட்டையும், மாநில உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே மத்தியஅரசின் திட்டங்களிலும், மாநில அரசின் திட்டங்களிலும் பொதுவாக இந்திய அரசின் சின்னமாக நான்முக சிங்க உருவத்தையும், அந்தந்த மாநில அரசு அதன் மாநில சின்னத்தையும் மட்டுமே பயன்படுத்தும் படி அமைந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுதும் பிரச்சினைகளை களைய முடியும். இது குறித்து உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


நன்றி,
தீரன்சாமி,
தலைவர்.

சௌந்தரராஜன் க
செய்தித் தொடர்பாளர்.

கொங்கு தமிழர் கட்சி.

கருத்துகள் இல்லை: