திங்கள், 11 மே, 2015

 
 
பெருமதிப்பிற்குரிய அம்மா அவர்களே, வணக்கம்.
 
தமிழக மக்களின் நலனையே தன் நலம் என்று அர்ப்பணிப்பு உணர்வோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தந்த வெற்றி பேரியக்கமாம் அ.இ.அ .தி.மு.க வை தாயுள்ளத்தோடு வழிநடத்தி வரும் தங்க தாரகை அம்மா அவர்களே,
சதியால் தங்களையும், தங்களின் உயிருக்கும் மேலான இயக்கத்தையும் மக்கள் மன்றத்தில் ஒன்றும் அசைக்க இயலாது, நீதிமன்றத்தின் போர்வையில் நிந்திக்க முயன்ற விரோதிகளின் முயற்சி இன்று நீதிதேவதை மூலமாக தகர்க்கப்பட்டுள்ளது.
எத்தனையோ துயரங்களை கடந்து மகுடம் சூடிய தங்களுக்கு இன்று ஈடில்லா இடத்தை தமிழக மக்கள் தர தயாராக உள்ளனர். தங்களின் தன்னம்பிக்கையும், தன்னிகரில்லா தைரியமும் என்றும் வார்த்தையில் வர்ணிக்க இயலாத வரமே.
மேன்மேலும் எழுந்து தமிழகத்தையும், இந்திய திருநாட்டையும் வழிநடத்த வேண்டுகிறோம். என்றும் தங்களுடன் பயணிப்பதை எங்கள் பாக்கியமாக கருதுகிறோம்.
அண்ணா நாமம், புரட்சித் தலைவர் நாமம் தங்களால் மேம்படும். மீண்டும் முதல்வராக திறம்பட பணியாற்ற வாழ்த்துக்கள்.
நன்றி,
தீரன்சாமி.
தலைவர், கொங்குத் தமிழர் கட்சி.
க.சௌந்தரராஜன்
செய்தித் தொடர்பாளர்.

கருத்துகள் இல்லை: