வெள்ளி, 15 மே, 2015

வணக்கம்,

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ள ஊழல் புகார்களை ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறையில் உள்ளது போன்றே அனைத்து துறைகளிலும் எழுந்துள்ள புகார்களின் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுசெயலாளர் அம்மா அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விழைகிறோம்.நன்றி,

தீரன்சாமி,
தலைவர்.

சௌந்தரராஜன்
செய்தித் தொடர்பாளர்

கொங்குத் தமிழர் கட்சி.

கருத்துகள் இல்லை: