புதன், 29 அக்டோபர், 2014

சிங்களபேரினவாதி அநாகரிகதர்மபாலவுக்கு-இந்தியப்பேரரசு தபால் தலை-கொங்கு தமிழர் கட்சி கண்டனம்..!




சிங்களப்பேரினவாதத்தின் பிதாமகன் அநாகரிகதர்மபாலாவின் 150-வது
பிறந்த
வருடத்தை முன்னிட்டு நமது மைய அரசு  அவருக்கு தபால்தலை
வெளியிட்டுள்ளது.அநாகரிகதர்மபாலா ஒரு சிங்கள இனவெறியர் . ஹிட்லரின்
வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்'
என்றார்.

தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட
வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு
முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து
பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர்.

இலங்கையில் சிங்களம்தான்
ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்
என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக
தர்மபாலாவும் ஒரு முன்னோடி.

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான
தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம்
கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இதை மேற்கொண்டுவரும் சிங்கள
இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள்
முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள்.

"இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க
வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக
தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்
வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில்
தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்‌சே
போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள்
முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப்
பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன்
தபால் தலை வெளியிட வேண்டும்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுந்துள்ளது,

ஏற்கனவே சுப்பிரமணியன்சுவாமி இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு பாரதரத்னா
விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.

மைய அரசின் இத்தகைய செயல்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி கண்டனத்தை
பதிவு செய்கிறது.

இவன்"-
டி,கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி

கருத்துகள் இல்லை: