முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது
கடும் விமர்சனங்களை தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் இன்று விலைவாசி
உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஊழல் புரிந்தார்....என்ற கருத்தெல்லாம் 2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைத்த போது தெரியாதா...?
இத்தனை
நாளாய் தூங்கிவிட்டு இப்போது எல்லாம் குறை என்று விமர்சிக்கும்
விஜயகாந்த், தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி மூலம் என்ன நன்மையை இதுவரை
மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தார்..?
எங்கே
காவேரி நடுவர் மன்றத்தை அமைக்காவிடில் கூட்டணியில் இருப்பதை பரிசீலிக்க
வேண்டும் என்று ஒரு கருத்தை விஜயகாந்த் அவர்கள் கூறமுடியுமா...?
மீனவர் பிரச்சினை குறித்து இதுவரை ஒரு அறிக்கையை விடுத்துள்ளாரா..?
அம்மையார் ஜெயலலிதா சட்டப்பேரவை வருவது இருக்கட்டும்....இதுவரை என் நீங்கள் வரவில்லை...? எதிர்க்கட்சி பணி ஆற்றவில்லை...?
Thanks,
Soundar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக