சனி, 9 ஏப்ரல், 2011

அம்மாஅவர்களுடன்-கொங்குதமிழர்கட்சியின் மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி சந்திப்பு


அம்மாவுடன்-கொங்குதமிழர்கட்சியின்
மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி
 லஞ்சம்-ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலை இவற்றின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தையும்,தமிழக மக்களையும்,ஈழத்தமிழர்களையும் மீட்டெடுக்கும் மாற்றுசக்தியாக திகழும் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணியை நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் ஆதரித்து கொங்குதமிழகம் முழுவதும் தீவிரதேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

 7-4-2011 அன்று கோவைமாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில்சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம்.அப்பொழுது 10அம்ச கோரிக்கைகளை அம்மா அவர்களிடம் நேரில் வழியுறுத்தினோம்.


 அவற்றில் ஈழத்தமிழர்களை காக்க இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்ற சரித்திர சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார்.சாயத்தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்கவும்,சட்டம் ஒழுங்கை காக்கவும் விரைந்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.இதுபோன்றமக்கள் நலம்காக்கும் செயல்பாடுகளை எமது பேரவையின் சார்பில் வரவேற்கிறோம்.
கோபிதொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில்பிரச்சாரம் மேற்கொண்டபோது எடுத்த காட்சி.உடன் கட்சியின் பொதுச்செயலாளர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன்,கோபி அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் மனோகரன்,நடிகர் எம்.ஜி.ஆர்.சிவா. தமிழகமுதல்வர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பணி சிறக்கவும் லஞ்சம்-ஊழல் ஒழித்திடவும் வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை: