வெள்ளி, 7 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் பிரச்சாரம்&புகைப்படம்


2011 தமிழ்நாடு உள்ளாட்சி
மன்றத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான
அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நமது கொங்கு தமிழர் கட்சியினர் தமிழகம் தழுவிய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவத்தை ஆதரித்து ஈரோடு பேருந்து நிலையம்,நாடார் மேடு,வீரப்பன் சத்திரம்,சூரம்பட்டிவலசு,திருநகர் காலனி,கருகல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்குச்சேகரிபிற்கு கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தலைமை நிலையச்செயலாளர் டி.எஸ்.சண்முகம்,மாநில துணைச்செயலாளர் கே.எஸ்.செல்வராஜா,ஈரோடு மாநகர அமைப்பாளர் பி.அண்ணாதுரை,துணை அமைப்பாளர் எஸ்.செந்தில் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின்போது எடுத்த புகைப்படங்கள்



உள்ளாட்சி தேர்தல் பிரச்சார துண்டறிக்கை!

கொங்குதமிழர்கட்சியின் சார்பில் அம்மா அவர்கள் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் தழுவிய ஆதரவு பிரச்சாரம் 5-10-11 முதல் துவக்கப்பட்டுள்ளது.

50,000 பிரதிகள் அடங்கிய துண்டறிக்கைகள் ஐந்து பிரிவுகளாக பிரிவு ஒன்றுக்கு தலா 10,000 பிரதிகள்வீதம் வாக்குச் சேகரிப்பின் போது பயன்படுத்தப்பட உள்ளது.

தீரன்சின்னமலை நினைவு "A"கிரேடு கபாடிப்போட்டி

  வீரத்தின் விளைநிலம்,மண்ணின் மாவீரன் தீரன்சின்னமலை நினைவுக் கோப்பைக்கான செவ்வானம் கபாடிக்குழுவினர் நடத்தும் அகிலம் போற்றும் அற்புதமான 37-ஆம் ஆண்டு அகில இந்திய "A"கிரேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடித்திருவிழா நடைபெற உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம், விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடிப்போட்டி நடைபெற உள்ளது

புரட்சிகர விடுதலை முன்னனி,இயற்கை வாழ்வுரிமை இயக்கம் போன்ற சமூக களங்களின் பாசறையாக திகழும் மே.கு.பொடாரன் தலைமை ஏற்று நடத்த உள்ளார்கள்.உள்ளூர் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.ராமசாமி வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்திரன்,அ.இ.அ.தி.மு.க காங்கயம் நகரச்செயலாளர் ஏ.சி.சி.வெங்கு (எ)மணிமாறன்,தே.மு.தி.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் என்.தினேஸ்குமார்,பா.ஜ.க மாவட்ட தலைவர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முதல்பரிசு ரூபாய் 10010 மற்றும் கோப்பையினை முறையே சித்தம்பலம் என்.பார்த்தீபன் அவர்களும்,ஆனூர்வித்தியாலாய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினரும் வழங்குகின்றனர்.

இராண்டாம் பரிசு அ.இ.அ.தி.மு.க வினரும்,தீரன்சின்னமலை நினைவு கோப்பையினை கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வழங்க உள்ளனர்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம்,ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேல்,ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.(எ)என்.எஸ்.நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மேலும் வருமானவரித்துறை அதிகாரி (ITO),அகில இந்திய அமெச்சூர் கபாடிக் கழக இணைச்செயலாளர் என்.சுப்பிரமணியன்,தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் சோலை எம்.ராஜா,செயலாளர் எ.சபியுல்லா,பொருளாளர் என்.கே.கே.பி.சத்தியன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் பிராமிஸ்.பி.முத்துச்சாமி,துணைத்தலைவர் என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

ஆண்கள பிரிவில் 60,பெண்கள் பிரிவில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.மேலப்பாளையம் கிராமத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட எழுச்சிமிக்க படை ஒன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

வியாழன், 6 அக்டோபர், 2011

கொங்குதமிழர்கட்சிக்கு-முதல்வர் அம்மா அவர்கள் எழுதிய கடிதம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்! நமது கொங்குதமிழர்கட்சி- 2011 தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தலைமைக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தும்-பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டும் நமக்கு எழுதிய கடிதம்.

உள்ளாட்சி தேர்தல்ஆதரவு! பத்திரிக்கை செய்தி



24-9-11 தினபூமி செய்தி







26-9-11 Drநமது எம்.ஜி.ஆர் செய்தி

15-9-11 அன்று நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்கள்

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தொடரும்!மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி அறிக்கை!

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தொடரும் கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி அறிக்கை:- எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி,நகராட்சி தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் அமுல்படுத்திய தமிழக முதல்வருக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 கடந்த 14-9-11 தேதியில் எமது கட்சியின் செயற்குழு கூடியது.அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் எமது செயல்பாடு அமையும்.அந்த அடிப்படையில் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவது இல்லை என்ற நிலைப்பாடு தொடரும். 2001 முதல் 2010 வரை நடைபெற்ற நான்கு பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்கு தமிழகத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அந்த நேரத்தில் நூற்றுக்கு-நூறு வெற்றி பெருவோம் என்ற வெற்றுக் கோசத்துடன் தி.மு.க-காங்கிரசு,பா.ம.க வின் பொருந்தாக் கூட்டணியில்-கொங்கு மக்களின் மனநிலைக்கு மாறாக கூட்டணி கண்ட கொ.மு.க தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

 அ.இ.அ.தி.மு.க தலைமை புரட்சித்தலைவர் காலம்தொட்டு இன்றைய அம்மா காலம்வரை கட்சியிலும்,ஆட்சியிலும் கொங்கு தமிழகதிற்கு தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் கொங்கு தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி நூறுசதம் வெற்றி பெற்றது.அதற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வழங்கி கொளரவித்தார்கள்.

 தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல-நில அபகரிப்பு பிரிவை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் செயல்படுவது,மாணாக்கர்களின் கல்வி அறிவை மேலும் செலுமைப்படுத்தும் வகையில் மடிகணினிகள் வழங்குவது,கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு,மாடு வழங்குவது,பெண்களின் சிரமத்தை போக்கும் வகையில் மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட இலவசத்திட்டங்கள் விரைவாக தொடங்கப்பட்டுள்ளது.

 திருப்பூர் சாயத்தண்ணீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஆட்சிப்பொருப்பில் அமர்ந்த மூன்றாவது தினத்தில் குழு அமைத்து செயல்பட்டது.மேலும் சுத்திகரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்குவதற்கு ரூ 200 கோடி வட்டியில்லாக் கடன் வழங்க ஆவண செய்து இருப்பது. ஈழத்தமிழர்களின் துயர்போக்கும் வகையிலும்,

ராசீவ் கொலைவழக்கின் குற்றவாளிகள் என்று சொல்லப்படும் மூவரின் உயிர்காக்க சட்டசபையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து,நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி,பிரதமருக்கு கடிதம் எழுதி-அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவு செய்தது. முதியோர் உதவித்தொகை,கற்பிணி பெண்கள் மற்றும் திருமண உதவித்தொகைகளை இரு மடங்காக உயர்த்தி இருப்பது.

மீண்டும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த தி.மு.க ஆட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் விரையம் செய்து கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு,பலதுறை மருத்துவகல்லூரி,மருத்துவமணையாக மாற்றி அறிவித்து இருப்பது. 

மேற்கண்ட சாதனைகளை தாம் ஆட்சிப்பொருப்பில் அமர்ந்த குறுகிய காலத்தில் அதிவிரைவாக செயல்படுத்தி வரும் தமிழகமுதல்வர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில்,எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 12-மாவட்டங்களிலும்,சென்னை மாநகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவது என எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் முடிவு செய்துள்ளோம். 

இவன்:-
டி.கே.தீரன்சாமி
 மாநில அமைப்பாளர்

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு!அம்மா அவர்களுக்கு டி.கே.தீரன்சாமி கடிதம்

மாண்புமிகு தமிழக முதல்வர்-கழகப்பொதுச்செயலாளர் அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம்! எதிர்வரும் திருச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரிப்பது தொடர்பாக:- இப்பவும் எமது கொங்குதமிழர்பேரவை 2001-முதல் 2010வரை நடைபெற்ற நான்கு பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சி என்ற அரசியல் தளமாக தொடங்கி அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம். கடந்த 7-4-2011 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம். அம்மா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை வழங்கி ஆசிபெற்றிட ஆவண செய்திடவேண்டி 3-முறை கடிதங்கள் கொடுத்துள்ளோம். இந்த நிலையில் எதிர்வரும் திருச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என எமது கட்சியின் சார்பில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எமது ஆதரவு நிலையை அம்மா அவர்களிடம் நேரில் தெரிவிக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். நாள்:14-9-2011 இவன்:- இணைப்பு:-7-4-11 அன்று அம்மா அவர்களை நேரில் சந்தித்த புகைப்படம்&பத்திரிக்கை செய்திகள்.பிரச்சார நோட்டீஸ்

புதன், 24 ஆகஸ்ட், 2011

100-வதுநாள்-சிறப்புடன் செயல்படும் முதல்வருக்கு மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி பாராட்டு கடிதம்!




டி.கே.தீரன்சாமி
(மாநில அமைப்பாளர்)
                   
                      முதல்வருக்குகடிதம்:-6                         24-8-11

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்

தலைமைச்செயலகம்,சென்னை-9           

  அம்மா! அவர்களின் தலைமையிலான நூறுநாள் ஆட்சி போற்றுதலுக்குரியதே! சமூகத்தில் மிகவும் நலிவடைந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ ஆயிரம் உதவித்தொகை,மீனவர்களின் மழைக்கால நிவாரணம் ரூ நான்காயிரம்,பெண்களின் திருமண உதவித்தொகை ரூ 25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்து இருப்பது! மேலும் கூடுதலாக பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம்,என அம்மா அவர்கள் ஆட்சிப்பொருப்பேற்ற முதல் நாளில் அறிவித்தார்கள்.

மூன்றாவது தினத்தில் திருப்பூர் சாயாஆலைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு சவுளித்தொழிலையும்,விளைநிலங்களையும் பாதுகாக்க குழு அமைத்து தீர்வை எட்டும் வகையில் செயல்பட்டு கொண்டிருப்பது,மேலும் சாயாஆலைகள் சுத்திகரிப்பு பணிக்கு அரசின் சார்பில் ரூ 200கோடி கடனாக வழங்க உறுதி அளித்துள்ளது.

ரூ 232 கோடியில் கறவைமாடு,ஆடு வழங்குவது,ரூ 1250 கோடியில்கிரைண்டர்,மிக்சி,மின்விசிறி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்க இருப்பது,ரூ 912 கோடியில் மாணவ,மாணவியருக்கு லேப்டாப் வழங்குவது,மீண்டும் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்துவது,நில அபகரிப்பு பிரிவை தொடங்கி அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச்செய்திருப்பது.

மீண்டும் கொங்குநாட்டு விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலைக்கு ஓடாநிலையில் ஆடிப்பெறுக்கு விழா நடத்தி-அந்தவிழாவில் கலந்துகொள்ள எட்டு அமைச்சர்களை அனுப்பிவைத்து சிறப்பித்தது.வாழும் மனிதர்களையும்,சார்ந்த உயிர்களையும்,முடமாக்கும் எண்டொசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தமிழகத்தில் தடை விதித்தது.நெடுஞ்சாலைகளில் செல்லும் அரசுபேருந்துகள் தனியார் மோட்டல்களில் நிறுத்தவதால் பயணிகளுக்கு ஏற்படும் அபாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருப்பது.

பட்டா மாறுதலை கிராம நிர்வாக அலுவலக மட்டத்தில் முடித்துக்கொள்ள ஆவண செய்திருப்பது.ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் சுமார் ரூ ஆயிரம்கோடி விரயம் செய்து கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை உலகத்தரம் வாய்ந்த பலதுறை பல்நோக்கு சிறப்பு மருத்துவ மணையாக மாற்றி அறிவித்து இருப்பது.தமிழர்களின்  வாழ்விலும்,கலாச்சாரத்திலும் வானவியல் மற்றும் பூகோல ரீதியாகவும்,விஞ்ஞான வழியிலும் நமது முன்னோர்களால் தொடர்ந்து அட்டவணைப்படுத்திய தமிழ்புத்தாண்டு சித்திரை 1 என்பதை மீண்டும் தமிழர்களின் தொடக்க தினமாக அறிவித்திருப்பது!

 போன்ற அரிதினும்,அரிய சரித்திரச்சிறப்பு வாய்ந்த செயல்பாடுகளை நூறுநாட்களில் செயல்படுத்த முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது! ஒவ்வொரு நாளும் அம்மா அவர்கள் அறிவிக்கும் மதிப்பு மிக்க திட்டங்களை தமிழகமக்கள்  மனமகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டிவருகிறார்கள்.

தொடரும் தமிழக முதல்வரின் சாதனைகளுக்கும்,அமைச்சர் பெருமக்களுக்கும்,துறையின் செயலர்களுக்கும்,சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் நன்றியினையும்,வாழ்த்துக்களையும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

                                 
                                                                     இவன்:-
                                                                     டி.கே.தீரன்சாமி 
                                                                     மாநிலஅமைப்பாளர்.


 குறிப்பு:-
எமது கொங்குதமிழர்பேரவை கடந்த 10-ஆண்டுகளில் நடைபெற்ற 4-பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்கு தமிழர் கட்சி எனும் அரசியல் தளமாக மாற்றி! அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து எமது சொந்தச்செலவில் கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.என்பது குறிப்பிடத்தக்கது!

ம்மா அவர்கள் முதல்வர் பொருப்பேற்ற பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை தங்களிடம் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
                                                       
                                  இவன்:-
                           டி.கே.தீரன்சாமி 
                         மாநில அமைப்பாளர்


தமிழக முதல்வர்,அனைத்துறையின் அமைச்சர்கள்,அரசுசெயலர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,காவைதுறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம்!

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

1-மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கல்விகடனுக்கு லோன்மேலா நடத்த வேண்டும்! முதல்வருக்கு கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கோரிக்கை!2- புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக அறிவித்திருப்பதற்கு முதல்வருக்கு நன்றி!

                                       முதல்வருக்கு கடிதம்:- 5 (20-8-2011)

டி.கே.தீரன்சாமி
(மாநில அமைப்பாளர்)

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைசெயலகம்,சென்னை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!

பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கடன் வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரியின் கதவுகள்
திறந்துள்ளன.கலவிக்கடன் வழங்குவதில் வங்கிகள் தற்பொழுது முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது.

 2007ல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயச்சந்திரன் கல்விக்கடன் லோன் மேலா என்ற பெயரில் மாவட்டத்தின் அனைத்து வங்கி மேலாளர்களையும்
தமது ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து-மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று அப்பொழுதே பரிசீலிக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியிலும் நாமக்கல்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கடந்த சில தினங்களில் கல்விக்கடன்
லோன் மேலா நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.

 இதனால் பயனடையும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் காலம்,அவமானம்,அலைகழிப்பு,மிச்சமாகும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கல்விக்கடனுக்கு   லோன்மேலா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவு இடவேண்டும்! மேலும்  இதுவரை கொடுத்துள்ள கல்விக்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசை வழியுறுத்திஆவண செய்யவேண்டுமாய் எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில்பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.


குறிப்பு:-
எமது கொங்குதமிழர்பேரவை 2001 முதல் கடந்த 10-ஆண்டுகளில் நடைபெற்ற 4-பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சியாக தொடங்கி அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

எனவே,எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை நேரில் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

இவன்:-டி.கே.தீரன்சாமி,
மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி மற்றும்
தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
                                          முதல்வருக்கு கடிதம்:-4 (20-8-11)
டி.கே.தீரன்சாமி(மாநில அமைப்பாளர்)

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைசெயலகம்,சென்னை.


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்! எமது கொங்குதமிழர்பேரவை 2001-முதல் 
கடந்த 10-ஆண்டுகளில் நடைபெற்ற 4-பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.எனவே,எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை நேரில் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்.
  
சுமார் 1000 கோடிரூபாய் விரயத்தில்புதிதாக கட்டப்பட்ட தலைமைசெயலகத்தில் மருத்துவக்கல்லூரியும்,
அனைத்து வசதிகளும் அடங்கிய தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு இணையான தரத்தில் சூப்பர் 
ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாங்கள் 
அறிவித்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வறியவர்களின் கல்விக்கும்,உயரிய மருத்துவ வசதிக்கும் ஆவண செய்திருப்பது காலச்சுவடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.
அம்மா அவர்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்! 

இவன்:டி.கே.தீரன்சாமி, 
மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி,மற்றும் 
தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை
20-8-2011







வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மக்கள்படையை தட்டி எழுப்பட்டும்!கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கருத்துரை!


விகடன் செய்திகள் இணையதளத்தில் அண்ணா கசாரே குழுவின் அணுகுமுறை சரியா? விவாதக்களத்தில் நான் பதிவுசெய்த கருத்துரை:-

அண்ணா கசாரே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.காந்தியவாதி,ஆன்மீகத்தில் விவேகானந்தரை மானசீகமாக் ஏற்றுக்கொண்ட்வர்,ஒரு சாதாரண குடில்போன்ற இல்லத்தில் வசித்து வருபவர்,திருமணம் ஆகாத பிரம்மச்சாரி,சமூகசேவகர்.தனக்கென சுயதேவை எதுவும் இல்லாதவர்.

தமது சித்திக் கிராமத்தில் மழை இருந்தும் விவசாயம் செய்ய நீர் இல்லாத அவலத்தைக்கண்டு அந்தமக்களின் மறுவாழ்வுக்கு தனது ஓய்வுக்காலத்தை அர்பணித்தவர் அண்ணா கசாரே.

சித்திக்கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான பூமிகளை பொன்விளையும் பசுமைச்சோலையாக மாற்றியவர்.லோக்பால் வரைவுக்குழுவில் சிவில்சமூகதிற்கு தலைமை ஏற்றவர்.

அண்ணாவின் சிவில்சமூக இயக்கத்தின்கீழ் துணை நிற்பவர்கள் ஒன்றும் சாதாராண ஆட்கள் அல்ல! என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஓய்வுபெற்ற காவல்துறை தலைவரும்,சமூக சேவகருமான கிரண்பேடி,
உச்சநீதிமன்றத்தின் மூத்தசட்டப் போராளிகள் பூசன் சகோதரர்கள்,
சமூகப்புரட்சியாளர் மேதாபட்கர் உள்ளிட்டவர்கள் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஹசாரேவுடன் இணைந்துள்ளர்கள்.

இவர்களின் ஒத்துழைப்பு,வழிகாட்டுதல் அண்ணாவை சரியான வழியில் இட்டுச்செல்லும்.ஏனெனில் லட்சக்கணக்கில் உயிர்களை பழிகொடுத்து,
பல லட்சம் கோடிரூபாய் மதிப்பில் இயற்கை வளத்தை இழந்து,200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றோம்.

விடுதலைக்கு பிறகு ஊழலின் தொடக்க ஆட்டம் 65 கோடிரூபாயில் ஆரம்பித்ததது.அதன்பிறகு தொடர்ந்து 65 ஆண்டுகள் நமது அரசியல் மட்டையாளர்கள் அதிரடியாக விளையாடி தொடர் சிக்ஸர்களாக அடித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக குவித்து சர்வதேசத்தரத்தில் முதலிடத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

ஊழல் ஒழிப்பில் அண்ணாஹாசரே குழுவின் அணுகுமுறை சரியானதே!அவர் தலைமையிலான சிவில்சமூகம் தயாரித்த தன்லோக்பாலை மத்திய அரசு ஏற்கத்தான் வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் என்பது பிரதமருக்கும் சாதாரண குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே ஊழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.அதற்கு ஊழல் ஒழிப்பு முன்னனி என்ற மக்கள் கட்டமைப்பு தேவை.

அது அண்ணா ஹாசாரே தலைமையில் பிரசவிக்க தயாராகி வருகிறது.நாமும் அதை நல்ல படியாக வளர்த்தெடுக்க முயல்வோம்.அநீதிகளுக்கு எதிராக ஆர்பரிக்கும் விகடன் குழுமமும் ஊழலுக்கு எதிரான மக்கள் படையை தட்டி எழுப்பட்டும்!

இவன்:டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி

புதன், 17 ஆகஸ்ட், 2011

இலங்கையில் ஆனந்தவிகடன் கட்டுரைக்கு தடை!கொங்குதமிழர்கட்சி கண்டனம்!


 சிங்கள அரசின் தொடரும் ஊடகஒழிப்பு!

நமது விகடன் செய்திக்குழுமம் உலகத்தமிழ் மக்களின் நாடித்துடிப்பு!ஆனந்த விகடனின் வயது இரண்டு தலைமுறைகளை தொட்டு விட்டது.அனைத்துப் பாலினர்களையும் தன்னகத்தே வசியம் செய்து வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.விகடன் குழுமத்தின் இரண்டாவது வாரிசு ஜீனியர் விகடன் அரசியல் புலனாய்வுச்செய்திகளில் முந்திச்செல்கிறது.

விகடன் குழுமம் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலாக முழங்கி வருகிறது.அந்த வகையில்ஆனந்த விகடன் வார இதழில்  'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர்,  இந்திய பொதுவுடமைக் கட்சியின்  தமிழ் மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது.

 சி.மகேந்திரன் என்றால் சிங்களப்பேரின வாதத்துக்கு கிலிபிடிக்கும்.தோழருடன்,

ஆனந்தவிகடன் கைகோர்த்து உள்ளது.இதைக்கண்டு அச்சம் அடைந்த இலங்கை அரசு ஆனந்த விகடன் இதழின் "வீழ்வேனென நினைத்தாயோ" பகுதியின் 30லிருந்து 34 பக்கங்கள் உள்ளிட்ட 5 பக்கங்களை நீக்கி வெளியிட்டு உள்ளது.

இதன் முதல் பகுதி 12.08.2011- இதழில் வெளியாகியது. இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சிங்கள அடக்கு முறையாளர்கள் அங்கு தொட்டு! இங்கு தொட்டு தமிழக ஊடகங்களின் மீது தடை விதித்து ஒடுக்க நினைக்கிறது.மத்திய அரசு தொடர்ந்து சீனாவைக்கண்டு அஞ்சி நடுங்கிவருகிறது.இத்தகைய பிற்போக்குத்தனமான செயல்களை எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன் சின்னமலை பாசறை வன்மையாக கண்டிக்கிறது.


சிங்கள ஓநாய்களை குலைநடுங்கச்செய்யும்-தடைசெய்யப்பட்டபகுதி கீலே தரப்படுகின்றது.
உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?

இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!

இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.

புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள். கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.

நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு. வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.
ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.

போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?

வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது.  அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.

பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம். 'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.

உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.

வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.

கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.

ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!

ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது.  அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.

எதை மறைப்பது?

யாரை மன்னிப்பது?

தோழர் சி.மகேந்திரன் எழுதிய கட்டுரை இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
நன்றி:மனிதன் செய்தி ஊடகம்,ஆனந்தவிகடன் இதழ் 
சிங்கள அடக்கு முறையாளர்கள் அங்கு தொட்டு! இங்கு தொட்டு தமிழக ஊடகங்களின் மீது தடை விதித்து ஒடுக்க நினைக்கிறது.மத்திய அரசு தொடர்ந்து சீனாவைக்கண்டு அஞ்சி நடுங்கிவருகிறது.இத்தகைய பிற்போக்குத்தனமான செயல்களை எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன் சின்னமலை பாசறை வன்மையாக கண்டிக்கிறது. 
இவன்:டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஹசாரே,கிரண்பேடி கைது!மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கண்டனம்!


 ஆகஸ்ட்டு 15 - பதிப்பு:1

இன்று 65 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து,பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்களை இழந்து , தொடர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி நமது தேசத்தை கொள்ளை அடித்த வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.
 ஹசாரே இந்தியராணுவத்தில்
இருந்தபோது எடுத்த படம்

ஆனால் இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைபட்டு உள்ளோம் . ஊழலுக்கு எதிராக இனி ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. லஞ்சம் ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும் ,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற காந்தியவாதியும் சமூக சேவகருமான அன்னா ஹசாராவின் சிவில் சமூகம் லோக்பால் மசோதா கமிட்டியில் இடம் பெற்று இருந்தனர் .ஹசாரே குழுவினர் பிரதமர் , நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வழியுருத்தி வந்தார்கள் .

ஹசாரே குழுவின் இத்தகைய முக்கிய கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு கடந்த வாரத்தில் மத்திய அரசு நாடாளு மன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது .சிவில் சமூகத்தின் முக்கிய கோரிக்கைகளை மசோதாவில் சேர்க்கத் தவறினால் ஆகஸ்ட் 16 முதல் புதுதில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக ஏற்கனவே அன்னாஹசரே அறிவித்து இருந்தார்.

ஆனால் தில்லி காவல்துறை காந்திய வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் 22 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.முதலில் உண்ணாவிரதத்திற்கு இடம் தர மறுத்தது.ஹசாரே குழுவினர் எந்த இடமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்ன பிறகு பெரோஸ்கோ கோட்லா மைதானம் அருகில் உள்ள ஜெயப்பிரகாஸ் நாரயண் பூங்காவில் அனுமதி அளித்தனர்.

தற்பொழுது அனுமதித்துள்ள இடத்தை காவல்துறைதான் பரிந்துறைத்தது.அதற்க்கும் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி 18-ம் தேதி மாலை 5-மணிக்கெல்லாம் முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறது.ஹசாரேவின் சிவில்சமூகம் காலவரையற்ற போராட்டம் தேவை என்கிறது! காவல் துறை அதை கட்டுக்குள் கொண்டு வரமுயல்கிறது.

மேலும் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களை மருத்துவ குழு ஒன்று மூன்று வேலையும் பரிசோதித்து,தேவைப்பட்டால் மருத்துவமணைக்கு எடுத்துச்
சென்று ஊசிமூலம் உணவு செலுத்தப்படும்.போராட்டத்தில் 5,0000 தொண்டர்கள் மற்றும் 50 கார்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை மிரட்டுகிறது.

கூடவே தொண்டர்கள் கத்தி,கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு
வரக்கூடாது என ஹசாரே குழுவின் காந்திய வழியிலான சத்தியாகிரகப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஆயுதங்கள் இருந்தால் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்களாம்.

ஹசாரேவின் சிவில்சமூகம் காவல்துறையின் இத்தகைய கட்டுப்பாடுகளை
ஏற்க மறுக்கிறது.இதனால் போரட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.தடையை மீறி போராட்டம் நடத்தவும்,சிறை நிரப்பவும் ஹசாரேவின் சிவில் சமூகம் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஒய்வுபெற்ற காவல்துறை இயக்குனருமான கிரண்பேடி,உச்சநீதிமன்ற மூத்தவழக்கறிஞர் பிரசாந்த்பூசன்,ஆர்.எஸ்.எஸ்,
கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஹசாரேவின் போராட்டத்தை ஆதரிக்கிறது.
Social activist Anna Hazare during his visit to Rajghat on Monday on the eve of his hunger strike for a stronger Lokpal Bill. Photo: Sushil Kumar Verma
காந்திசமாதிமுன்பு
ஹசாரே

இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று ஹசாரே தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சமாதி முன்பாக அமர்ந்து தியானம் செய்யத்தொடங்கி விட்டார்.இதைப்பார்த்த ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

இவற்றை எல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மணீஸ்திவாரி,கபில்சிபல் போன்றவர்கள் ஹசாரேவின் தலைமையில் செயல்படும் அறக்கட்டளை ஊழல்புரிந்துள்ளது.ஊழலுக்குஎதிராக போராடும் ஹசாரே ஊழல் பேர்வழி முதலில்அவரது தலைமையில் செயல்படும் அறக்கட்டளையின் முறைகேட்டுக்கு பதில் சொல்லட்டும்.சாவந்த் கமிசனின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கட்டும் என்கிற ரீதியில்ஊழல் எதிர்ப்பு போரட்டத்தை கொச்சைப்படுத்த முயல்வதை கண்கூடாக காணமுடிகிறது.

மோசடி செய்ததாக சாவந்த் கமிசன் ஹசாரேவின் மீது குற்றம் சாட்டினால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? யார் தடுத்தது? மத்திய அரசுக்கு ஏன் இந்தக் குழப்பம்? காமன்வெல்த்,2ஜி என்று பலலட்சம் கோடிரூபாய்களை முறைகேடு செய்துள்ளார்கள்.எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்கள் காங்கிரஸ் தலைகள்.அதனால்தான் ஹசாரேவின் போராட்டத்தைக்கண்டு அச்சப்படுகிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பிரதமர்,சனாதிபதி உள்ளிட்டவர்களுக்கும், சாதாரண சிவில் குடிமக்களுக்கும் பொதுவானதுதானே?அப்படி இருக்கும் பொழுது ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் மட்டும் ஏன் இந்த விதி விலக்கு? இது சமூக ஆர்வாளர்களின் மில்லியன் டாலர் கேள்வி.யார் பதில் சொல்வது?

தற்போதைய சூழலில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில்அன்னாஹசரேவின் செயல்பாடுகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.எனவே எமது கொங்கு தமிழர் கட்சி ம்ற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்தை உறுதியுடன் ஆதரிக்கும்.தமிழ் வலைதளப்பதிவர்கள் இத்தகைய ஊழல் ஒழிப்பு போரட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
                                           
இவன்:டி.கே.தீரன்சாமி
நன்றி:புகைப்படம் -திஹிந்து,ஹசாரே வ.தளம்.

ஆகஸ்ட்-16 பதிப்பு:2

நம் தேசத்தின் தலைநகரத்தில் 1975 நினைவூட்டுவதாக அறிவிக்கப்படாத எமர்சென்சி இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

தில்லியின் பெரோஸ்ஸ கோட்லா மைதானம் அருகே உள்ள ஜெயப்பிரகாஸ் நாராயன் பூங்கா அமைந்துள்ள பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நமது தேசத்தின் 65-வது சுதந்திர தினம் முடிந்த தருவாய்யில் சனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்கும் பிரிட்டிஸ் அரசின் அதே கொடுங்கோல் தன்மையுடன்,அதே காங்கிரஸ் அரசு சொந்த சிவில் சமூகத்தின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.

லோக்பால் மசோதாவில் பிரதமர்,நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களை சேர்க்கவேண்டும்.இதுதான் ஹசாரே தலைமையிலான சிவில் சமூகத்தின் கோரிக்கை!இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்றும் அதற்கு ஆகஸ்ட்-16 தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தார் ஹசாரே!

கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை கையோடு இன்று காலை கிழக்கு தில்லியின் மயூர்விகார் பகுதியில் தனது வீட்டில் இருந்த அன்னாஹசாரே மற்றும் அர்விந்த்கெஸ்வால் ஆகிய இருவரையும் கைது செய்யதனர்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனரும்,சமூக சேவகருமான கிரண்பேடியும் கைது செய்யப்பட்டார்.காந்திய வழியிலான உண்ணாவிரதத்தை ஒடுக்கும் காங்கிரஸின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.

புதுதில்லியில் ஹசாரேவின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.நாடு முழுவது ஊழலுக்கு எதிரான போர் உத்வேகத்துடன் சீற்றம் கொள்ள தயாராகி வருகிறதும்.ஐ.ஐ.டி மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவாக போராட தயராகி வருகின்றன.

இனியும் ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதாவை புறக்கணிக்கும் உழல் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.தில்லி காவல்துறையின் மிசா செயல்பாடுகள் இன்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

காங்கிரஸ் அரசின் பிற்போக்குத்தனமான இத்தகைய செயல்பாடுகளை எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

வாருங்கள் லஞ்சம்-ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஹசாரேவின் தலைமையிலான ஊழல் ஒழிப்பு முன்னனியில் பங்கேற்போம்.


வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சீனாத்தயாரிப்புகளை புறக்கணிப்போம்!ஈழத்தமிழர்களை மீட்போம்!கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வேண்டுகோள்!


இலங்கையில் நிலவும் எதார்த்தங்களை உணராமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்.உண்மையிலேயே இலங்கைத் தமிழர்மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதிக்கு வந்துமீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்.என்று கடந்த இரு தினங்களுக்குமுன் இலங்கை அதிபர் மகிந்தாவின் சகோதரரும்,அந்நாட்டின் பாதுகாப்புச்செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே தமிழக முதல்வர் அவர்களை விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பிறகு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிகிளிண்டன் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.அச்சந்திப்பின்போது முதல்வர் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி ஹிலாரியிடம் கவலை தெரிவித்துள்ளார்.

பிறகு அமெரிக்காவின் வெளிவிவாகாரத்துறையும்,இந்தியா வெளியுறவு துறையும் போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்,ஈழத்தமிழர்களின் புனரமைப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வற்புறுத்தியது.

பிறகு ஹெட்லைன் டுடே,பிரிட்டனின் சேனல் 4,போன்ற ஊடங்கள் ஈழத்தில் நடைபெற்ற ராஜபக்சே சகோதரர்களின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இலங்கையில் ஊடகவியலார்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா,
சபையின் விசராணக்குழு பல முறை இலங்கை செல்ல முயன்றும் மகிந்தா அரசால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உலவு விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் பறந்து சென்றது.

இது போன்ற சர்வதேச தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசாங்கம் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை எனக் காட்டிக்கொள்ளவும்,கோத்தயா மற்றும் பசில் ராஜபக்சே சகோதரர்களிடையே பிரதமர் பதவிக்கான அதிகாரப்போட்டியில் கோத்தபயா தன் மீது அதிபர் மகிந்தா மற்றும் அரசு கூட்டமைப்பின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.

இந்திய தேசியத்தின் இறையாண்மை என்பது மாநில முதல்வர்களை உள்ளடக்கியே உள்ளது.மைய அரசு தான் மட்டும் என்ன நினைத்தாலும் அதைச்செய்து விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.தமிழக அரசு மற்றவர்களீன் தயவில் சிறுபான்மை அரசாக செயல்படவில்லை.மாறாக சட்டமன்றத்தில் மிகப்பெறுபான்மையுள்ள மக்கள் அரசாங்காமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை இலங்கை சீனாவின் பக்கம் நெருங்கி  விடக்கூடாது என ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கைக்கு உதவி வருகிறது..இருப்பினும் இலங்கையும் சீனாவும் மிக நெருக்கத்தில் பிணைந்துள்ளது.கடந்த காலங்களில் ஆறு பில்லியன் அமரிக்கா டாலர்களை இலங்கையின் புனரமைப்புக்கு சீனா கொடுத்துள்ளது.ஏராளமான நவீன ஆயுதங்களை மகிந்தா அரசுக்கு சீனா வழங்கியுள்ளது.

தற்போது எழுந்துள்ள சர்வதேச நெறுக்கடிகளுக்கு பயந்து ம்கிந்தா ராஜபக்சே சீனாவின் உதவியை நாடிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே மைய அரசு இனியும் யோசிக்காமல் சர்வதேச ஆதரவைத்திரட்டி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி முழ்வேலியில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களை மீட்டு அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை அமைத்துத் தரவேண்டும்

மகிந்தாவின் இலங்கை அரசுக்கு சீனா தொடர்ந்து உதவி வருகிறது. சீனாவின் தாயாரிப்புகளை விற்பனை செய்யும் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக இந்திய உள்ளது.சீனாவின் தயாரிப்புகளை வாங்க நாம் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் ஈழத்தமிழர்களின் ரத்தத்தை குடிக்க உதவுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.காந்தியக் கோட்பாட்டின் வழியில் சீனாவின் அந்நியப்பொருள்களை ஒவ்வொரு தமிழனும் விற்கவோ வாங்கவோ கூடாது என முடிவு எடுப்போம்.
                                           
                                           இவன் 
டி.கே.தீரன்சாமி
மாநில அமைப்பாளர்
கொங்குதமிழர்கட்சி

சனி, 6 ஆகஸ்ட், 2011

முதல்வருக்கு கடிதம்!தீரன்சின்னமலையின் நிலங்கள் மீட்கபடவேண்டும்!

                                              முதல்வருக்கு கடிதம்:-3 (28-7-11)
முதல்வருக்கு கடிதம்:-3 (28-7-11)

தீரன்சின்னமலை ஆடிபெறுக்கு விழா!தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம்


              கொங்குதமிழர்கட்சி                                                
                          தமிழ்நாடுதீரன்சின்னமலைபசாறை                            
              பழையகோட்டை சாலை,அய்யாசாமிநகர் காலனி,காங்கயம்,திருப்பூர்-638701
                                        அலைபேசி:9865126679,8825264949,
               வலைதளம்:kongutamailarblogspot.com,மின்னஞ்சல்:theeransamy@gmail.com
                            
                        முதல்வருக்கு கடிதம்: 2 (6-8-2011)


டி.கே.தீரன்சாமி 
(மாநிலஅமைப்பாளர்)

பெறுநர்:-

மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள்
தலைமைசெயலகம்,சென்னை

    வீரமிகு அம்மா அவர்களுக்கு வணக்கம்! ஆடி-18 தீரன்சின்னமலையின் 206-வது நினைவுதினத்தை- தீரன்சின்னமலைஆடிப்பெறுக்கு விழாவாக அறிவித்து ஈரோடுமாவட்டம் ஒடாநிலையில் அரசுவிழா நடத்தி-தமிழகத்தின் 7-அமைச்சர் பெருமக்களை கலந்து கொள்ளச்செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  மேலும் மாவீரன் பிறந்த எமது திருப்பூர்மாவட்டம் காங்கயம் மேலப்பாளைதிற்கு 5-அமைச்சர்களையும்,மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டைக்கு 2-அமைச்சர்களையும் அனுப்பி வைத்து சிறப்பித்தமைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

  2001 மற்றும் 2006 சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல்,2004 மற்றும் 2009 மக்களவை பொதுத்தேர்தல்,மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு கூட்டணியை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

  நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சி என்ற அரசியல் தளமாக தொடங்கி கொங்குதமிழத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தி.மு.க மற்றும் கொ.மு.க வின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம். 

  கடந்த 07-04-2011 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம்.

  மேலும் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் எமது சொந்தச்செலவில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே,தங்களை நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்.அது சமயம் நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  குறிப்பு:-தங்களை நேரில் சந்திக்க வேண்டி முன்பே இரண்டு கடிதங்கள் அனுப்பியுள்ளோம்.மீண்டும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்து ஆவண செய்ய வேண்டி இக்கடிதம் அமையும் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன்

                                                                    நாள்:-06-08-2011                                                                                                                                               இவன்:-டி.கே.தீரன்சாமி                                                                                                                                                                                                                
'(மாநிலஅமைப்பாளர்)

கொங்குதமிழர்கட்சியினர் தீரன்சின்னமலைக்கு வீரவணக்கம்


ஆடி-18 (03-08-2011) இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலை தூக்கிலிடப்பட்ட 206-வது நினைவுதினம் பல்வேரு இயக்கங்களின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவீரன் தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையில் 
கொங்குதமிழர்கட்சியின்
 மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி
தலைமையில் மாவீரனுக்கு வீரவணக்கம்
காலை 8-30 மணிக்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி,சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினாரகள்.அவர்களுடன் எமது கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 மதியம் 12-மணிக்கு ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் எமது கொங்குதமிழர்கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.தீரன்சின்னமலை ஆடிப்பெறுக்கு விழா தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் 7-அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

   மேலும் நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள்,சி.கே.மணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர்,பாரதிய ஜனதா கட்சியினர்,காங்கிரஸ் கட்சியினர்,உ.தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர்,ஈஸ்வரன்,பெஸ்ட் தலைமையிலான கொ.மு.க,வழக்கறிஞர்-செ.நல்லுசாமி தலைமையிலான தமிழ்நாடு கள் இயக்கதினர் உள்ளிட்ட பல்வேரு கட்சியினரும், பொதுமக்களும் மாவீரனின் மணிமண்டபத்தில் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

பிற்பகல் 2-மணிக்கு எமது கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் காங்கயம் மேலப்பளைத்தில் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.மேலப்பாளையம் ஊர்பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்கள்.

 இந்நிகழ்ச்சியில் கொங்குதமிழர்கட்சியின் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன்,துணைத்தலைவர் முனைவர் மு.தம்பித்துரை,துணைச்செயலாளர் கே.பரமசிவம்,பொருளாளர் பி.ஜோதி,துணைப்பொருளாளர் எஸ்.கே.நந்தகுமார்,தலைமை நிலையச்செயலாளர் டி.எஸ்.சண்முகம், மாவட்ட அமைப்பாளர்கள் திருப்பூர் கே.எஸ்.திருநாவுகரசு,ஈரோடு எஸ்.அண்ணாதுரை,நாமக்கல் பி.ராஜ,சேலம் பி.பிங்கிள்,கரூர் சி.டி.மூர்த்தி,கோவை எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீரன்சின்னமலையின் 206-வது வீரவணக்கம்-கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் வீரவணக்கம் நிகழ்ச்சியின் புகைப்படம்




ஓடாநிலையில் கொங்குதமிழர்கட்சியின்
மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி
தலைமையில் மலர் தூவி மரியாதை



 

காங்கயம் மேலப்பாலையத்தில் கொங்குதமிழர்கட்சியினர்


படம்-1,3 மேலப்பாளையத்தில் மாவீரனால் நிருவப்பட்ட
மிகப்பெரிய வீரவிநாயகர் சிலை,
படம்-2 ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள சிலை
ஓடாநிலை மணிமண்டபம் முன்பு
வந்துசெல்லும் பொதுமக்கள்



ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஆடி-18 மாவீரனுக்கு வீரவணக்கம்!தமிழ்தேசியப் போராளியின் விடுதலைக்கனவு

                                  முதல்வருக்கு கடிதம்:-1 (1-8-11)
அனுப்புதல்:-டி.கே.தீரன்சாமி,மாநிலஅமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை,
பழையகோட்டைசாலை,காங்கயம்,திருப்பூ மாவட்டம்-638701

பெறுநர்கள்:-மாண்புமிகு தமிழகமுதல்வர்,
மாண்புமிகு தமிழகஅமைச்சர்கள்,உயர்திரு அரசுத்துறை செயலாளர்கள்,
அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்,
உயர்திரு தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்,மக்களவைஉறுப்பினர்கள்,
மாண்புமிகு மத்திய அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,
மாவட்ட காவல்துறை அதிகாரிகள்,அனத்து வார-நாளிதழ்கள்,
செய்தி ஊடகங்கள்,சமுதாயத்தலைவர்கள்.


தீரன்சின்னமலையின் வரலாற்று சுருக்கம்!
ஓடாநிலையில் அமைந்துள்ள
நினைவு மணிமண்டபம்
லகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமைச்சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை ஆகும்.அத்தகைய அடிமைத்தனத்திற்கு எதிராக தனி மனிதர்களின் தலைமையில் போராளிக்குழுக்கள் தோன்றுவதும், வீழ்வதும் ஒரு கட்டத்தில் வெற்றிபெறுவதும் வரலாற்று நிகழ்வுகள்.

 நமது பாரததேசம் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டில் இருந்து நமதுதாய்த் திருநாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்டவன் இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலை

 கொங்கு 24நாடுகளில் இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் நாட்டில் மேளப்பாளையம்-கிராமத்தில் வாழ்ந்த கொங்குவேளாளர்சாதீ- பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதிகளுக்கு 17-4-1756 அன்று இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.
தனது இளைமைப்பருவத்தில் சிலம்பாட்டம்,வில்வித்தை,கிணறு தாண்டுதல்,குதிரை ஏற்றம்,வேட்டையாடுதல் போன்ற வீரவிளையாட்டுகளில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்.கொங்குநாடு அப்பொழுது மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி திவான் மூலமாக மைசூராருக்கு சென்றது.

வடக்கே சென்னிமலை,தெற்கே சிவன்மலை,கிழக்கே அரச்சலூர் தலவுமலை இதன் மத்தியில் அடர்ந்த வனப்பகுதி.இங்கு தீரன்சின்னமலை தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வேட்டைக்குச் செல்வது வழக்கம்.அப்படி ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்பொழுது தாராபுரம் வேலாயுதக்கவுண்டரிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு சங்ககிரியை நோக்கி சென்ற இரண்டு குதிரை வீரர்களிடம் இருந்து வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்தார் சின்னமலை.

அப்பொழுது சிவன்மலைக்கும்-சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டதாக உமது திவானிடம் போய்ச்சொல் என்று தீரன்சின்னமலை முழங்கினார்.அதன் பிறகுதான் தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் தீரன்சின்னமலையாக மாறியது. இந்த நிகழ்வை சங்ககிரி திவான்-மைசூர் மன்னரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.கோபம் கொண்ட மைசூர்மன்னர் ஹைதர்அலி குதிரைப்படை ஒன்றை அனுப்பி சின்னமலையை கைது செய்து இழுத்துவர பணித்தார்.ஆனால் திவானின் குதிரைப்படையை சின்னமலையின் தடிக்காரப்படை அடித்துநொறுக்கி விரட்டி அடித்தது.

.
7-12-1782-இல் ஹைதர்அலியின் மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் அரசர் ஆனார்.மைசூராரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை கிழக்கிந்தியக்கம்பெனி கபலீகரம் செய்ய திப்புவிற்கு எதிராக கடும்போர் நடத்தி வந்தனர்.இத்தகைய அவசர காலத்தில் கொங்குநாட்டு வரிவசூலுக்கு எதிராக சின்னமலை வீரத்துடன் தடுத்து நிறுத்தி போரிடுவது திப்புவை வெகுவாக கவர்ந்தது.சின்னமலையிடம் சண்டையிட்டு உள்நாட்டு போரில் கவனம் செலுத்துவதைவிட-நம்மோடு இணைத்துக்கொண்டு நமது மண்ணின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டியடிக்க திப்பு விவேகமாக உறுதிபூண்டு சின்னமலைக்கு தூது அனுப்பினார்.

மண்ணின் பொது எதிரியை வீழ்த்தும் திப்புவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சின்னமலை ஆயிரம் இளைஞர்கள் கொண்ட கொங்குபடையை மைசூருக்கு அழத்துச்சென்றார்.அங்கு திப்புவின் தளபதிகள் மற்றும் பிரஞ்ச் படைவீரர்கள் கொண்டகுழு கொங்குபடைக்கு முறைப்படி போர்ப்பயிற்சி அளித்தனர். கொங்குபடை மழவல்லி,சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.குறிப்பாக மழவல்லிப் போரில் 40,000 வீரர்கள் கொண்ட வெள்ளைப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நடிகர் சிவகுமாரால்
வரையப்பட்ட ஓவியம்
மாவீரன் நெப்போலியனிடம் உதவி வேண்டி திப்பு அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வை தேவர் இடம் பெற்றிருந்தார்.

4-5-1799-இல் நான்காம் மைசூர்போரில் கன்னட நாட்டின்போர்வாள் திப்பு கொல்லப்பட்டார்.திப்புவின் வாரிசுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சின்னமலையின் உற்ற நண்பன் வேலப்பன் வெள்ளையப்படையினரால் கைது செய்யப்பட்டார்.அதன் பிறகு சின்னமலை கொங்குநாடு திரும்பினார்.அரச்சலூர் ஓடாநிலையில் கோட்டை-கொத்தளங்கள் அமைத்து தம்மை கொங்குநாட்டின் பாளைக்காரனாக அறிவித்துக்கொண்டார்

.பிற பாளையக்காரர்களுக்கும் தூது அனுப்பி வெள்ளையர்களை விரட்டி அடிக்கவேண்டும்,அதற்கு நமது ஒற்றுமை அவசியம் என்பதை வழியுறுத்தினார்.சின்னமலையின் வெள்ளை எதிர்ப்புக் கூட்டமைப்பில் வேளாளர்,நாயக்கர்,வேட்டுவர்,ஆதிதிராவிடர்,தாழ்த்தப்பட்டோர்,தேவர்,நாடார்,
வன்னியர்,இஸ்லாமியர் என்று பலர் இருந்தனர்.

அவர்களில் கருப்பசேர்வை,ஓமலூர்சேமைலைப்படையாட்சி,
சென்னிமலைநாடார்,முட்டுக்கட்டைபெருமாத்தேவன்,பத்தேமுகமதுஉசேன்,
விருப்பாட்சிகோபாலநாயக்கர்,சுபேதர்வேலப்பன்,செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முந்தைய காலகட்டத்தில் (18-4-1792-இல்) அனுமந்தராயர் என்ற வேட்டுவக்கவுண்டரிடம் காங்கயம்-சிவன்மலை பட்டாலிகிராமத்தில் தமது பெயரில் விலைக்கு வாங்கிய இடத்தில் போர்ப்பாசறை அமைத்து ஆயுதங்கள் தாயாரித்து-வீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார்.பிரஞ்சு வீரர்களின் துணையுடன் சிறுரக பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டது.

 திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாகின் திட்டப்படி சில பாளையக்காரர்களின் துணையுடன் கோவைக்கோட்டையை தகர்த்து லெப்டினன்ட் கர்னல் க்ஸிஸ்டரின் தலைமையிலான 5-ஆம் கம்பெனியின் பட்டாளத்தை அழிக்க சின்னமலை திட்டமிட்டார்.ஒருநாள் முன்னதாகவே போராளிகள் அறிவிப்பின்றி செயல்பட்ட காரணத்தால் கோவைப்புரட்சி தோழ்வியில் முடிந்தது.

வெள்ளையர்களுக்கு எதிரான போரில் 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,1802-இல் ஓடாநிலையிலும்,1804-இல் அறச்சலூர் போரிலும் தீரன்சின்னமலையின் படை பெறும் வெற்றி பெற்றது.ஓடாநிலைப்போரில் வெள்ளைத்தளபதி கர்னல் மேக்ஸ்வெல்லின் தலையைக் கொய்து கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடப்பட்டது.சின்னமலையின் ஓடாநிலைக்கோட்டையை கடந்துதான் கேரளத்தின் மலபார் பகுதிகளுக்கு வெள்ளையர்கள் செல்லவேண்டும்.அதற்கு சின்னமலையின் காவிரிக்கரைப்படை பெறும் தடையாக இருந்தது.

போரில் வெற்றி பெறமுடியாத வெள்ளையர்கள் கொங்குநாட்டின் ஆட்சிப்பொறுப்பை விட்டுத்தருவதாகவும்-வரிவசூலின் மூன்று பகுதியை எடுத்துக்கொள்ளவும் வேண்டி சின்னமலைக்கு சமரசம் செய்து கொள்ள தூது அனுப்பினார்கள்.அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சின்னமலை-தொடர்ந்து போராட தனது படையை பலப்படுத்தினார்.

சென்னை கிண்டியில்
உள்ள சிலை
இந்த நிலையில் பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமக்கு எதிராக-தடுக்க முடியாத கடல் அலையாக வளர்ந்து வரும் தீரன்சின்னமலையை ஒழித்தே தீரவேண்டும் என முடிவுசெய்தது.கொல்கத்தா தலைமையகத்தில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கைகள் கொண்ட பெறும் பீடங்கிப்படை ஒன்று ஓடாநிலைக்கோட்டையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.

சின்னமலையின் போர்ப்படைத் தளபதியும்-உற்ற நண்பனுமான சுபேதார்வேலப்பன் வெள்ளைப்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டு வெள்ளைப்படையில் சுபேதராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.ஆங்கிலேய அதிகாரிகளிடம் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை வளர்த்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஓலையின் வாயிலாக வெள்ளைப்படையின் நடவடிக்கைகளை ரகசியமாக சின்னமலைக்கு அனுப்பி வந்தார்.

அதன்படி செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் மூலமாக செருப்பின் உள்ளே வைத்து தைக்கப்பட்ட ஓலை சின்னமலைக்கு வந்து சேர்ந்தது.அந்த ஓலையில் அதிநவீன பெறும் பீரங்கிப்படை ஓன்று ஓடாநிலையை நோக்கி வருவதாகவும்-அத்தகைய படையின் முன்பு நமது மண்கோட்டையும்,போர்ப்படையும் தக்குப்பிடிக்க இயலாது என்றும்-உடனடியாக தாங்கள் தப்பிச்செல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்ளபட்டிருந்தது.தனது கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டையை காலி செய்து கொண்டு பழநிக்கு அருகில் உள்ள கருமலைக்குத் தப்பிச்சென்றார்.

ஓடாநிலைக்கோட்டையை அடைந்த ஆங்கிலேயப் பீராங்கிப்படையின் தளபதி சின்னமலையால் தம் படைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.கோட்டையை சோதனையிட உத்தரவு இட்டார்.சோதனையில் பீரங்கிப்படையின் வருகை குறித்து சுபேதார்வேலப்பன்-தீரன்சின்னமலைக்கு எழுதிய ஓலை கிடைக்கப்பெற்றது.அந்த இடத்திலேயே சுபேதார் வேலப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஓடாநிலைக்கோட்டை பீரங்கிப்படையால் மண்ணோடு மண்ணாக தகர்க்கப்பட்டது.

போரில் வெல்லமுடியாத சின்னமலை சகோதரர்களை சூழ்ச்சியின் மூலமாக சொந்த இனத்தவர்களே காட்டிக்கொடுதார்கள்.கைது செய்யப்பட்ட சின்னமலை சகோதரர்கள்,கருப்புசேர்வையுடன் ஆடி-18 (31-7-1805) இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.இறந்துபோன மாவீரர்களின் உடல்களை கழுகளுக்கு இறையாக்கினார்கள்.

கொங்குதமிழகத்தின் சுதந்திரதீபம் அணைந்தது..சிவன்மலையை சுற்றி இன்றும் தீரன்சின்னமலையின் நினைவுகள் சுழன்றுவருவதாக நான் நம்புகிறேன்.அடிமைத்தலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைப்படுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

இத்தகைய மாவீரர்கள் எந்த விசாரணைகளும் இல்லாமல் வெள்ளை அரசாங்காத்தால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.அவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார்கள். ஆம் மாவீரர்கள் மீண்டும்,மீண்டும் பிறந்தார்கள்.140-ஆண்டுகளுக்கு பிறகு பாரதத்தாயின் விடுதலை மலர்ந்தது.தீரன்சின்னமலையைப் போன்ற மாவீரர்களின் கனவு பலித்தது.உலகில் மனிதஉரிமைகள் நசுக்கப்படும்பொழுது மாவீரர்கள் மீண்டும் பிறப்பார்கள்.

இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18 (3-8-11) அன்று மாவீரனின் 206- வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.

மையஅரசால் 
வெளியிடப்பட்ட 
தபால்தலை
ஈழத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிங்களவர்களின்அடிமைச்சாசனத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த சோகம் இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் என்று சொன்னால்அது மிகையாகது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஈழவிடுதலை போராளிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இந்த ஆண்டின் துவக்கம்வரை போராடி வீழ்ந்துள்ளார்கள்.
தீரன்சின்னமலையின் நினைவு தினமான இன்று ஈழத்தில் மீண்டும்போராளிகள் எழுவார்கள்!ஈழத்தமிழர்களின் விடுதலைக்கனவு பலிக்கும்.நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையில் தனிஈழம் ஒன்று அமைத்தே தீருவேன் என்று முழங்கினார்கள்.நிச்சயம் ஈழத்தில் தனி ஈழம் ஒன்று மலர்ந்தே தீரும் என்று நம்புவோம்.
                   தீரன்சின்னமலைக்கு அரசு அளித்த மரியாதை
முன்பு தீரன்சின்னமலை நினைவாக திருச்சியை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்துக்கழகமும், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமும் இருந்தது.சென்னை கிண்டியில் சிலை எடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தீரன்சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது.இந்திய அரசின் தபால் தந்தித்துறை 31-7-2005 இல் தபால் தலை வெளியிட்டது.
அம்மா அவர்களுடன் வலைதள ஆசிரியர்-
 கொங்குதமிழர்கட்சியின்
மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி
இடம்:கோவைமாவட்டம் காளப்பட்டி,நாள்:7-4-11

மாவீரனின் தேசப்பற்றை போற்றும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாவீரனின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசுவிழாவாக தொடர்ந்து நடத்தப்படும் என்று அன்றைய முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தார்.அத்துடன் ஓடாநிலையில் மவீரனுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18(3-8-11) அன்று மாவீரனின் 206-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.இந்த நினைவு தினத்தை நமது தமிழக முதல்வர் மீண்டும் அரசு நிகழ்ச்சியாக ஆவண செய்துள்ளார்!மேலும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்!கட்சத்தீவை மீட்கவேண்டும்!ராஜபக்சேவை போர்குற்றவாளியாக நிறுத்த வேண்டும்! உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றி சிறப்புடன் செயலாற்றிவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

200-ஆண்டுகளுக்கும் மேலாக போராடி லட்சக்கணக்கில் உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலின் கோரவிருச்சம் தலை விரித்து ஆடுகிறது.லஞ்சம்-உழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.

தீரன்சின்னமலையின் வரலாற்று பதிவு அல்லது சுருக்கம் நமது தமிழ் வலைதளப்பதிவுகளில் கிடைக்கப்பெறவில்லை.எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடக வலைதளப்பதிவு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.முதல் பதிவாக இந்திய விடுதலைப்புலி தீரன்சின்னமலை என்ற தலைப்பில் மூன்று பாராவில் சிறிதாக வெளியிட்டு இருந்தேன்.அது தெளிவானதாக தெரியவில்லை.இந்தப்பதிவு அந்தக்குறையை போக்கும் என்று நம்புகிறேன்.

இதில் காணப்படும் பிழைகளை எமது கருத்துரை பகுதியில் சேர்க்கவும்.இந்தப்பதிவை குறைந்தது பத்தாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.இந்தப்பதிவினைப் படிப்பவர்கள் தங்கள் நண்பர்களுக்கு தமது பதிவாகஅனுப்பி வைக்கவும்.இந்தப்பதிவிற்கு நான் காப்புரிமை வைத்துக்கொள்ளப் போவதில்லை.யார் வேண்டுமானாலும் எடுத்து வெளியிடலாம்.

இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநிலஅமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை