வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சீனாத்தயாரிப்புகளை புறக்கணிப்போம்!ஈழத்தமிழர்களை மீட்போம்!கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வேண்டுகோள்!


இலங்கையில் நிலவும் எதார்த்தங்களை உணராமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்.உண்மையிலேயே இலங்கைத் தமிழர்மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதிக்கு வந்துமீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்.என்று கடந்த இரு தினங்களுக்குமுன் இலங்கை அதிபர் மகிந்தாவின் சகோதரரும்,அந்நாட்டின் பாதுகாப்புச்செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே தமிழக முதல்வர் அவர்களை விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பிறகு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிகிளிண்டன் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.அச்சந்திப்பின்போது முதல்வர் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி ஹிலாரியிடம் கவலை தெரிவித்துள்ளார்.

பிறகு அமெரிக்காவின் வெளிவிவாகாரத்துறையும்,இந்தியா வெளியுறவு துறையும் போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்,ஈழத்தமிழர்களின் புனரமைப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வற்புறுத்தியது.

பிறகு ஹெட்லைன் டுடே,பிரிட்டனின் சேனல் 4,போன்ற ஊடங்கள் ஈழத்தில் நடைபெற்ற ராஜபக்சே சகோதரர்களின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இலங்கையில் ஊடகவியலார்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா,
சபையின் விசராணக்குழு பல முறை இலங்கை செல்ல முயன்றும் மகிந்தா அரசால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உலவு விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் பறந்து சென்றது.

இது போன்ற சர்வதேச தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசாங்கம் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை எனக் காட்டிக்கொள்ளவும்,கோத்தயா மற்றும் பசில் ராஜபக்சே சகோதரர்களிடையே பிரதமர் பதவிக்கான அதிகாரப்போட்டியில் கோத்தபயா தன் மீது அதிபர் மகிந்தா மற்றும் அரசு கூட்டமைப்பின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.

இந்திய தேசியத்தின் இறையாண்மை என்பது மாநில முதல்வர்களை உள்ளடக்கியே உள்ளது.மைய அரசு தான் மட்டும் என்ன நினைத்தாலும் அதைச்செய்து விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.தமிழக அரசு மற்றவர்களீன் தயவில் சிறுபான்மை அரசாக செயல்படவில்லை.மாறாக சட்டமன்றத்தில் மிகப்பெறுபான்மையுள்ள மக்கள் அரசாங்காமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை இலங்கை சீனாவின் பக்கம் நெருங்கி  விடக்கூடாது என ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கைக்கு உதவி வருகிறது..இருப்பினும் இலங்கையும் சீனாவும் மிக நெருக்கத்தில் பிணைந்துள்ளது.கடந்த காலங்களில் ஆறு பில்லியன் அமரிக்கா டாலர்களை இலங்கையின் புனரமைப்புக்கு சீனா கொடுத்துள்ளது.ஏராளமான நவீன ஆயுதங்களை மகிந்தா அரசுக்கு சீனா வழங்கியுள்ளது.

தற்போது எழுந்துள்ள சர்வதேச நெறுக்கடிகளுக்கு பயந்து ம்கிந்தா ராஜபக்சே சீனாவின் உதவியை நாடிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே மைய அரசு இனியும் யோசிக்காமல் சர்வதேச ஆதரவைத்திரட்டி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி முழ்வேலியில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களை மீட்டு அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை அமைத்துத் தரவேண்டும்

மகிந்தாவின் இலங்கை அரசுக்கு சீனா தொடர்ந்து உதவி வருகிறது. சீனாவின் தாயாரிப்புகளை விற்பனை செய்யும் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக இந்திய உள்ளது.சீனாவின் தயாரிப்புகளை வாங்க நாம் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் ஈழத்தமிழர்களின் ரத்தத்தை குடிக்க உதவுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.காந்தியக் கோட்பாட்டின் வழியில் சீனாவின் அந்நியப்பொருள்களை ஒவ்வொரு தமிழனும் விற்கவோ வாங்கவோ கூடாது என முடிவு எடுப்போம்.
                                           
                                           இவன் 
டி.கே.தீரன்சாமி
மாநில அமைப்பாளர்
கொங்குதமிழர்கட்சி

கருத்துகள் இல்லை: