வெள்ளி, 22 மே, 2015

அன்புள்ள அம்மா...!
தமிழகத்தின் நலனுக்கே என
தடைகள் பலவற்றை தான் தகர்த்து,
தமிழ் தேசம் மீண்டும் ஆள வரும்
தங்க முகமே, தமிழர் திறமே....!
உன் மக்கள் துணையில்
நீ துயரம் மறந்து,
உயர் சிகரம் அமைத்து அதில்
தமிழ் குடியை நிறுத்து..!
திட்டங்கள் தந்து வறுமையைப் போக்கு,
மதுவெனும் சூரனை கொன்று முழுவதும் போக்கு....!
தாயே.....!
எங்கள் புரட்சித் தலைவி..!
தமிழக முதலைமச்சராக பதவியேற்க உள்ள மாண்புமிகு
 
மக்களின் சக்தியே...!
உங்கள் நலம் வாழ இறைவன் துணை....!
 
எம் தமிழ் இனம் வாழ நீயே துணை...!
என்றும் அன்பு வாழ்த்துக்களுடன்....
கொங்குத் தமிழர் கட்சி.
தீரன்சாமி, தலைவர்.
கவிஞர் சௌந்தரராஜன், செய்தித் தொடர்பாளர்.

வெள்ளி, 15 மே, 2015

வணக்கம்,

அரசு விளம்பரங்களில் உச்ச நீதிமன்றம் காட்டியிருக்கும் வழிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தும். குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அதை உறுதிபடுத்த 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் அரசு விளம்பரம் தொடர்பான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா போன்ற கூட்டாச்சி தத்துவ அரசு உடைய நாட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மத்தியில் அங்கம் வகித்தாலும் மாநில அளவில் முதல்வரே மக்களால் பெரிதும் அறியப்படுகிறார்.

மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாட்டையும், மாநில உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே மத்தியஅரசின் திட்டங்களிலும், மாநில அரசின் திட்டங்களிலும் பொதுவாக இந்திய அரசின் சின்னமாக நான்முக சிங்க உருவத்தையும், அந்தந்த மாநில அரசு அதன் மாநில சின்னத்தையும் மட்டுமே பயன்படுத்தும் படி அமைந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுதும் பிரச்சினைகளை களைய முடியும். இது குறித்து உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


நன்றி,
தீரன்சாமி,
தலைவர்.

சௌந்தரராஜன் க
செய்தித் தொடர்பாளர்.

கொங்கு தமிழர் கட்சி.
வணக்கம்,

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ள ஊழல் புகார்களை ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறையில் உள்ளது போன்றே அனைத்து துறைகளிலும் எழுந்துள்ள புகார்களின் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுசெயலாளர் அம்மா அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விழைகிறோம்.



நன்றி,

தீரன்சாமி,
தலைவர்.

சௌந்தரராஜன்
செய்தித் தொடர்பாளர்

கொங்குத் தமிழர் கட்சி.

திங்கள், 11 மே, 2015

 
 
பெருமதிப்பிற்குரிய அம்மா அவர்களே, வணக்கம்.
 
தமிழக மக்களின் நலனையே தன் நலம் என்று அர்ப்பணிப்பு உணர்வோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தந்த வெற்றி பேரியக்கமாம் அ.இ.அ .தி.மு.க வை தாயுள்ளத்தோடு வழிநடத்தி வரும் தங்க தாரகை அம்மா அவர்களே,
சதியால் தங்களையும், தங்களின் உயிருக்கும் மேலான இயக்கத்தையும் மக்கள் மன்றத்தில் ஒன்றும் அசைக்க இயலாது, நீதிமன்றத்தின் போர்வையில் நிந்திக்க முயன்ற விரோதிகளின் முயற்சி இன்று நீதிதேவதை மூலமாக தகர்க்கப்பட்டுள்ளது.
எத்தனையோ துயரங்களை கடந்து மகுடம் சூடிய தங்களுக்கு இன்று ஈடில்லா இடத்தை தமிழக மக்கள் தர தயாராக உள்ளனர். தங்களின் தன்னம்பிக்கையும், தன்னிகரில்லா தைரியமும் என்றும் வார்த்தையில் வர்ணிக்க இயலாத வரமே.
மேன்மேலும் எழுந்து தமிழகத்தையும், இந்திய திருநாட்டையும் வழிநடத்த வேண்டுகிறோம். என்றும் தங்களுடன் பயணிப்பதை எங்கள் பாக்கியமாக கருதுகிறோம்.
அண்ணா நாமம், புரட்சித் தலைவர் நாமம் தங்களால் மேம்படும். மீண்டும் முதல்வராக திறம்பட பணியாற்ற வாழ்த்துக்கள்.
நன்றி,
தீரன்சாமி.
தலைவர், கொங்குத் தமிழர் கட்சி.
க.சௌந்தரராஜன்
செய்தித் தொடர்பாளர்.

வியாழன், 7 மே, 2015

+2-தேர்வு முடிவு முத்ல் மூன்று இடங்களில் கொங்கு தமிழகம்...

+2-தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.அதில் திருப்பூர் பவித்ரா,கோவை மாணவி நிவேதா 1192 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

விக்னேஸ்வரன்,பிரவீன்,சரண்ராம்,வித்யாவர்சினி,ஆகிய நால்வரும் 1190 -மதிப்பெண்கள் பெற்று 2-.இடத்தையும்,பாரதி என்ற மாணவி-1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடதையும் வென்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் கொங்கு தமிழகத்தின் சிங்கங்கள் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு நமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும்,மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.