திங்கள், 17 நவம்பர், 2014

கொடிய வைரஸ் சமூக வலைதளங்கள்தான்- வித்யாபாலன்அதிரடி தாக்குதல்..



டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படத்தின் மூலம் 
ஒட்டுமொத்த இந்தியத்திரையுலகையும்,
உலக சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர்.
ஒருநடிகை எப்படி இருக்ககூடாது
என்பதையும்,செல்லுலாய்டு என்ற கனவுத்தொழிற்சாலையில் 
கால்பதிக்க துடிக்கும்
இளம்பெண்களின் உயிர்நாடியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் 
வாழ்ந்துகாட்டியவர்
வித்யாபாலன்.

அன்றைய நடிகை டி.ஆர்.ராஜ்குமாரியிலிருந்து இன்றைய நடிகைஅஞ்சலி
வரை படும்துன்பங்களை,பாலியல் வன்கொடுமைகளை அப்படமாக நவீன சினிமா
தொழிற்சாலையில் பதியப்பட்டபடம்தான் டர்ட்டி பிக்சர்ஸ்.கிட்டத்தட்ட நமது
தமிழ்த்திரையுலகின் கவர்சிக்கன்னியாக பார்க்கப்பட்ட சில்க்சுமிதாவின் சினிமா
வாழ்வியலை-வித்யாபாலன் டர்ட்டி பிக்சர்ஸ்சில் வாழ்ந்துகாட்டியதாக
சொல்லப்பட்டது.

சமூகவலைதளங்கள்,மீடியக்களுக்கு வித்யா மீது கழுகுப்பார்வை உண்டு.
அவரது செய்திக்கு அதிவேகமான பார்வையாளர்கள் உண்டு.அந்த அடிப்படையில்
இன்றைய தினம் தினத்தந்தி நாளிதழில் சமூக வலைதளங்கள் மீது வித்யாபாலனின்
அதிரடி தாக்குதல்.என்ற தலைப்பில் நேர்காணல் வெளியானது...அது பற்றி...

அதில்..சமூகவலைதளங்கள் தொடர்பான இரண்டு கேள்விகள்..

1.இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நீங்கள் ஏன் எழுதுவதில்லை.?

வித்யா-.. எனக்கு அதில் நாட்டமில்லை,வலைதளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்து
கொள்வதற்காக சில விசயங்கள்தான் இருக்கின்றன.ஆனால் பலரும்
பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் வரைமுறை இல்லாமல் போய்விட்டதை
உணர்ந்துகொள்ளமுடிகிறது.பாத்ரூம் போவதைக்கூட டுவிட்டரில் தெரிவித்து
விட்டுத்தான் போகிறார்கள்.மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் எதையும்
செய்யக்கூடாது என்பது ஒருமனோவியாதியாக மாறிவிட்டது.

2.வலைதளங்களால் மக்களுக்கு நன்மை இல்லை எங்கிறீர்களா..?

வித்யா-..எதையுமே பயன்படுத்தும் விதத்தில்தான் நன்மையும்,தீமையும் விளையும்.
பலருடைய நட்புக்கு வலைதளங்கள் துணையாக இருப்பது உண்மைதான்.எத்தனை
பேருடைய குடும்பவாழ்க்கை இதனால் பறிபோகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவரது குடும்ப வாழ்க்கையின் மிக ரகசியமான விசயங்கள்கூட வலைதளத்தில்
பகிர்ந்து கொள்ளப்படுவது அநாகரிகத்தின் உச்சகட்டம்.இன்று உலகம் முழுவதும்
பரவியிருக்கும் கொடிய வைரஸ் சமூக வலைதங்கள்தான்.இதில் சிக்கி
சின்னாபின்னமான குடும்பங்கள் பல உள்ளன... நன்றி:-தினத்தந்தி

வித்யாபாலனின் கூற்று நூறு சதம் சரியானது அல்ல...ஆனால் அதே நேரத்தில்
சமூக வலைதளப்பதிவர்கள் சிந்திக்கவேண்டிய செய்தி..உலகம் ஒரே குடையின்
கீழ் கொண்டு சேர்த்த பெருமை சமூகவலைதளங்களுக்கே உரித்தானது...
சமூகவலைதளங்களை இதுபோன்று சுதந்திரமாக தொடர்ந்து பயன்படுத்த
வேண்டுமானல் நாம் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்.
சீர்கேடுகளை முன்வைக்கும் தளங்களை புறந்தள்ளவேண்டும்..

கருத்துக்களை பகிரவும்

இவன்:-டி.கே.தீரன்சாமி,கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in,http://kongutamilar.blogspot.in

புதன், 29 அக்டோபர், 2014

சிங்களபேரினவாதி அநாகரிகதர்மபாலவுக்கு-இந்தியப்பேரரசு தபால் தலை-கொங்கு தமிழர் கட்சி கண்டனம்..!




சிங்களப்பேரினவாதத்தின் பிதாமகன் அநாகரிகதர்மபாலாவின் 150-வது
பிறந்த
வருடத்தை முன்னிட்டு நமது மைய அரசு  அவருக்கு தபால்தலை
வெளியிட்டுள்ளது.அநாகரிகதர்மபாலா ஒரு சிங்கள இனவெறியர் . ஹிட்லரின்
வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்'
என்றார்.

தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட
வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு
முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து
பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர்.

இலங்கையில் சிங்களம்தான்
ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்
என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக
தர்மபாலாவும் ஒரு முன்னோடி.

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான
தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம்
கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இதை மேற்கொண்டுவரும் சிங்கள
இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள்
முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள்.

"இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க
வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக
தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்
வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில்
தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்‌சே
போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள்
முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப்
பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன்
தபால் தலை வெளியிட வேண்டும்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுந்துள்ளது,

ஏற்கனவே சுப்பிரமணியன்சுவாமி இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு பாரதரத்னா
விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.

மைய அரசின் இத்தகைய செயல்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி கண்டனத்தை
பதிவு செய்கிறது.

இவன்"-
டி,கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி

செவ்வாய், 28 அக்டோபர், 2014

விஜயகாந்த் மக்களுக்கு என்ன செய்தார்..?கொங்கு தமிழர் கட்சி கேள்வி...?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கடும் விமர்சனங்களை தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா ஊழல் புரிந்தார்....என்ற கருத்தெல்லாம் 2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைத்த போது தெரியாதா...?
 
இத்தனை நாளாய் தூங்கிவிட்டு இப்போது எல்லாம் குறை என்று விமர்சிக்கும் விஜயகாந்த், தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி மூலம் என்ன நன்மையை இதுவரை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தார்..?
 
எங்கே காவேரி நடுவர் மன்றத்தை அமைக்காவிடில் கூட்டணியில் இருப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு கருத்தை விஜயகாந்த் அவர்கள் கூறமுடியுமா...?
 
மீனவர் பிரச்சினை குறித்து இதுவரை ஒரு அறிக்கையை விடுத்துள்ளாரா..?
 
அம்மையார் ஜெயலலிதா சட்டப்பேரவை வருவது இருக்கட்டும்....இதுவரை என் நீங்கள் வரவில்லை...? எதிர்க்கட்சி பணி ஆற்றவில்லை...?
 
Thanks,
Soundar

திங்கள், 27 அக்டோபர், 2014

விஜயின் கத்தியில் "தன்னூத்து"-நிஜத்தில் திருச்சி "சூரியூர்"கிராமம்

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு கடந்த 24-10-2014 அன்று எமது கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது...எமது செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் தினமலர்,தினமணி நாளிதழ்களில் வெளிவந்தது.  ஏரளாமான விஜய் ரசிகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் செய்தி நிருபர்களான தினமணி-ராமன்பிள்ளை,தினமலர் பெரியசாமி ஆகியோர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

இன்னொரு தரப்பில் நடிகருக்கு ஏன் ஆதரவு...லைக்கா..சுபாஸ்கரன் அல்லிராச,கோத்தபயெ ராசபக்சே என்ற அடிப்படையில் எமது கொங்கு தமிழர் கட்சியின் ஆதரவுக்கு மேற்படி கேள்விகள் எழுந்தன...அதற்கு விஜயின் கத்தி படத்தில்-தண்ணீரின் முக்கியத்துவத்தை,விவசாயிகளின் வாழ்வாதரத்தை பற்றி விஜய் பேசும் வசனங்களை எடுத்துக்காட்டி...விளக்கம் அளித்தோம்.

கூடுதலாக கத்தி படத்தில் தண்ணீர் கொள்ளையர்களின் கோரப்பிடியில் தன்னூத்து என்ற கிராமம் காட்டப்படுகிறது.அதுபோல திருச்சியில் சூரியூர் கிராமம் பெப்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது...தண்ணீர் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கீழ்கண்ட உண்மை நிகழ்வைப்படியுங்கள்....கருதுக்கூறுங்கள்,,,பகிர்வு செய்யுங்கள்...

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்
-------"கத்தி" படமும் "சூரியூர்" கிராமமும்-------
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.
 
இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
 
சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.
 
இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர். அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையி ன் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.
 
பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.
 
இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு “ உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.
 
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.
 
தற்போது வெளிவந்துள்ள “கத்தி” திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் “தண்ணீரின் அவசியமும், உரிமையும்” தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.
 
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்
Join With Us:
https://facebook.com/thanneer3
https://facebook.com/vinothraj.se shan
தண்ணீர் இயக்கம்
www.thanneer.org வினோத்ராஜ் சேஷன்: 9500189319 ivfvinothraj@gmail.com
இதை அனைவரும் பகிருங்கள்(Share). ஏனெனில் பத்திரிகை., ஊடகங்களை விட சமூக வலைதளங்களுக்கு சக்தியும் அதிகம். பொறுப்புகளும் அதிகம்

நன்றி:-மேற்படி செய்தி,தண்ணீர் இயக்கம் வினோத்ராஜ்சேசன்,மற்றும் வெங்கட்ராமன் முகநூலில் இருந்து எடுத்தாளப்பட்டது..

தண்ணீர் இயக்கத்தின் சூரியூர் கிராமம் மீட்பு போராட்டத்தை... எமது கொங்கு தமிழர் கட்சி ஆதரிக்கும்...
.

இவன்:-டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி

வெள்ளி, 24 அக்டோபர், 2014

விஜயின் கத்தி-விவசாயிகளின் உரிமைக்குரல்

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு,கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது ஏன்,,? என்று என்னிடம் பலர் கேள்வி எழுப்பினார்கள் அதற்கான பதில்...கீழே...

விவசாயின் உரிமைக்குரலாக,உழவர்சங்களின் கோரிக்கையாக,கொங்கு தமிழகத்தின் எழுச்சிமிக்க,உணர்ச்சிக்குரலாய்.....அழிந்துவரும் வேளாண் இனத்தின் இடி முழக்கமாய்...கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய உணர்ச்சிமிக்க வசனங்கள்...கீழே கொடுத்துள்ளேன்...படியுங்கள்...எமது ஆதரவு நிலைப்பாடு சரியானது என்று ஆதரிப்பீர்கள்

 ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் “தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல. 

3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு. 

தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா. 

20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது. 

அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க. 

இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது. 

5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒரு விவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா. 

இதயெல்லா கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேர இல்ல, இத சொல்ல தா டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷ இல்ல. 

இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரே யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா...
 
(சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்)
யோவ்.... சாதாரண தண்ணியா...
 
2ஜினா என்னய்யா..
அலைக்கட்றை.. காத்து..
வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம்...... தண்ணி அத்யாவட்சியம்... 

கத்தி திரைப்படத்தை எமது கொங்கு தமிழர் கட்சி தொடர்ந்து ஆதரிக்கும்.....

இவன்:-தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மராட்டிய மண்ணில் வீறுகொண்டு எழுந்த முதல் தமிழ் எம்.எல்.ஏ கேப்டன்.ஆர்.தமிழ்செல்வனுக்கு-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்.டி.கே.தீரன்சாமி வாழ்த்து

Tamil Selvanமராட்டிய கவர்னரால்.வீரத்தமிழன் என்ற விருதுபெற்று-மும்பை தமிழர்களால் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும்-கேப்டன் ரா,தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம்,கரம்பக்குடி தாலுகா,பிலவிடுதி கிராமத்தில் ராமையா ,தங்கம் தம்பதிகளுக்கு 1958-ம் ஆண்டு மகனாகப்பிறந்தார்.

கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பை சென்று கூலித்தொழிளாலியாக தன்னுடைய வாழ்வைத்தொடங்கி-ஏஜன்சி ஆரம்பிது கடின உழைப்பால் உயர்ந்தவர்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் மும்பைத்தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.இதன் காரணமாக மும்பைத்தமிழர்கள் இவரை கேப்டன் என அன்புடன் அழைக்கத்தொடங்கினார்கள்.சாயன்கோலிவாடா தொகுதியின் சட்டமன்றத்தொகுதி தலைவராகவும்-168-வது வார்டு கவுன்சிலராகவும்,மும்பை மாநகராட்சி பணிக்குழு தலைவராகவும்,ப.ஜ.க மும்பை பிரதேச செயலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சாயன் கோலிவாடா சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.தன்னை பின்தொடர்ந்த சிவசேன வேட்பாளரைவிட 3,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும் இந்தத்தொகுதியில் 66 ஆயிரம் மாராட்டிய இன வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நிய தேசத்தில் அதுவும் சிவசேனா ஆதிக்கம் கொண்ட மராட்டிய மண்ணில் அதன் வேட்பாளரை தோற்கடித்து வீறுகொண்டு எழுந்த கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ அவர்களின் பணி சிறக்க எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்-டி.கே.தீரன்சாமி மும்பை.எம்.எல்.ஏ.கேப்டன்,ரா.தமிழ்ச்செல்வன் அவர்களை அலைபேசியில் தொடர்பு வாழ்த்து தெரிவித்தார்.

சனி, 18 அக்டோபர், 2014

அம்மா அவர்களின் தமிழக வருகை-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் அறிக்கை:-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in
http://kongutamilar.blogspot.in
9865126679

பெறுநர்:-உயர்திரு-செய்தி ஆசிரியர்&நிருபர் அவர்கள்
தமிழ்நாடு,அனைத்து செய்தி ஊடகங்கள்.

அம்மா அவர்களின் தமிழக வருகை-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் அறிக்கை:-

ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் பிராத்தனை-மக்கள் முதல்வர் அம்மா,சின்னம்மா
உள்ளிட்ட நால்வரின் விடுதலை-

அம்மா அவர்களின் தமிழகவருகை-தீபாவளி திருநாள் மூன்று நாட்கள் உள்ள
நிலையில்-தீபாவளிக்கொண்டாட்டம்-உற்சாகம் அம்மா அவர்களின் வருகையின்போது
நேற்றே தொடங்கிவிட்டது.

கொங்கு தமிழகமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தீபாவளி திருநாளை தொடங்கிவிட்டார்கள்.;-

இவன்:-டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in
http://kongutamilar.blogspot.in

புதன், 8 அக்டோபர், 2014

மக்கள் முதல்வர் அம்மா-சின்னம்மா சசிகலா விடுதலை பெற-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்து வேண்டுதல்

கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்தபோது எடுத்த படம்






முதல்வர் அம்மா கைதிசெய்யப்பட்ட 27-ம் தேதி மாலை நான்கு மணி முதல் கரூரிலிருந்து புறப்பட்டு கொடுமுடி வழியாக ஈரோடு சென்று அங்கு அ.தி.மு.கவினர் நடத்திய கண்டன் ஊர்வலத்தில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் கலந்து கொண்டோம்.ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட சில செய்தி ஊடங்களுக்கு எமது கண்டனத்தை பதிவு செய்தோம்.

மாலை 7-மணிக்கு கொடுமுடி மகுடேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து அம்மா மற்றும் சின்னம்மா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற சிறப்பு அர்சனைகள் செய்து வழிபட்டோம்.

29-ம் தேதி எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய நிர்வாகிகளின் அவசரக்கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் வாயிலாக கடும் கண்டனத்தை பதிவு செய்தோம்.

4-10-2014 அன்று கரூரில் நடைபெற்ற மனிதச்சங்குலிப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.

05-10-2014 ஞாயிற்றுக்கிழைமை அன்று பழநி சென்று கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே,தீரன்சாமி மொட்டை அடித்து மக்கள் முதல்வர் அம்மா மற்றும் சின்னம்மா சசிகலா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற பழநி முருகனிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது.

அம்மா ஜெயலலிதா மற்றும் சின்னம்மா சசிகலா அவர்களுக்காக தோழமைக் கட்சியின் தலைவரான - எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி ஒருவர் மட்டுமே மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

06-10-2014அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் எமது காங்கயம் பகுதியில் கலந்து கொண்டோம்.

செய்தி;-பி.செளந்திரராஜன்,மாநில செய்தித்தொடர்பாளர்-


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானது. கொங்கு தமிழர் கட்சி தீர்மானம்


செப் 30:
             காங்கயத்தில் கொங்கு தமிழர் கட்சியின் மாநில தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தேசிய அமைப்பாளர் டி .கே.தீரன்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதானமாக புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பு மற்றும் தண்டனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                                 கடந்த 50 ஆண்டுகளாகவே கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் ஒரே தேசிய  குடையின் கீழ் இருந்தாலும் கன்னடர்,     தமிழர் என்ற பிரிவினையை கர்நாடகா தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றது.
அதற்கு  காவிரிப் பிரச்னை ,கர்நாடகா வாழ்தமிழர்கள் மீது தாக்குதல் ,அரசியல் பழிவாங்குதல் என பல உதாரணங்களை முன் வைக்கலாம்.அப்படி  இருக்கும் போது தமிழர்களுக்கு எந்த வகையிலும் கர்நாடகத்தில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை-என்ற நிலையிலும் நீதியை மதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் டாக்டர் .புரட்சி தலைவி அம்மா மீதான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்பினோம்.ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு.
இதுவே  ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து. இதே கருத்தை வலியுறுத்தி கொங்கு தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

/அமைப்பின் சார்பில் / செய்தி வழங்குதல்
டி.எஸ்.சண்முகம்
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்                                                          
/அமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் /                                           உயர்திரு.டி .கே.தீரன்சாமி அவர்கள்                                                               தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் .                                                                    நாள் : 30.09.2014

சனி, 27 செப்டம்பர், 2014

திட்டமிட்ட சதியும், நீதிமன்றத் தீர்ப்பும்கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி கண்டனம்.


 திட்டமிட்ட சதியும்,  நீதிமன்றத் தீர்ப்பும்....திட்டமிட்ட சதியும்,  நீதிமன்றத் தீர்ப்பும் கொங்கு தமிழர் கட்சியின்  தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி  கண்டனம்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66.64 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாண்புமிகு தமிழக முதல்வர் மீதான பொய் வழக்கில், பலதரப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு பிறகு முதல்வருக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதாக வழங்கப்பட்டதா..?இல்லை, அநீதிக்கு ஆதரவாக அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. முதல்வரின் வளர்ச்சி, தமிழகத்தின் உரிமைகளுக்கு போராடுவதை தன் கடமையாக கொண்ட அவரை இனியும் விடுவது தமிழகத்தில் தன்னலம் கொண்டவர்களுக்கும், அவரின் போராட்ட குணத்திலே  பெற்ற நியாயத்தால் தொலைந்து போன தேச துரோகிகளின் அனைத்து திட்டங்களுக்கும் தோல்வியைத் தந்ததால் பொது எதிரியாக முதல்வரை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

நீதியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவரும், சத்திய வழியில் அதிமுகவை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழித் தோன்றல் தான் நமது இதய தெய்வம் புரட்சித்தலைவி அவர்கள். அரசியல் வாழ்வில் இவர் சந்த்தித்த இன்னல்கள் ஒன்று இரண்டல்ல. புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை முடக்க நினைத்தவர்களை தனது திறமையினாலும், மக்களின் அன்பு மற்றும் ஆதரவினாலும் தகர்த்தெறிந்தவர் புரட்சித்தலைவி.

மக்கள் பணிக்காகவே தன்னை அரசியலில் தியாகம் செய்த புரட்சித்தலைவி அவர்களுக்கு நேற்றைய தீர்ப்பின் மூலமாக ஒரு தடையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். 
சில மாதங்களுக்கு முன்பாக கருத்து கூறிய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, "தன்னுடைய பதவிக் காலத்தில் பல நீதிமன்ற நியமனங்களுக்கு சில அரசியல் கட்சிகளால், குறிப்பாக தமிழகத்தில் கடந்த காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த  கட்சியின் தலையீடு இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்." இதிலிருந்தே எதிர்க்கட்சியான திமுகவின்  நீதித்துறை தலையீடுகள் புரிகிறது.

அவரது  அரசியல் பயணத்திலிருந்தே அவர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் தன்னை குற்றமற்றவர் என்று  நிரூபித்தவர் புரட்சித்தலைவி.
நீதித்துறையின் செயல்பாடுகளுக்கும் முழுஒத்துழைப்பை நல்கியே அவர் வென்றிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு, முல்லை பெரியாறு, இலங்கைத்தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கெயில் எரிவாயு குழாய் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம் போன்ற வாழ்வாதர பிரச்சினைகளில் கடந்த மற்றும் தற்போதைய மத்திய அரசுகளுக்கு எந்த பாரபட்சமும் பாராமல்  நீதிக்கு போராடி நெருக்கடியைத் தந்த, தரப்போகும் தலைவர் இவர் மட்டும் தான்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்தவரையில், கேரளாவில் அரசியல் ஆதாயம் இல்லை என்பதால் மத்தியில் ஆளும் கட்சி முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசியல் ஆதாயத்தை அடையவும், தமிழகத்தில் காலூன்றவும் ஒரே தடையாக இருக்கும் சக்தியான புரட்சித்தலைவியை பழிக்கு ஆளாக்கியுள்ளனர்.

கட்ச்த்தீவு பிரச்சினையை மறைக்க, தமிழகத்தில் இனி அரசியல் செய்ய புரட்சித்தலைவி தான் அவர்களுக்கெல்லாம் பொது எதிரி. மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் அவருக்கு தேர்தல் மூலமாக வெற்றியை மட்டுமே வழங்கியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குன் சக்தியான புரட்சித்தலைவிக்கு அரசியலில் நிரந்தர ஓய்வு கிடைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அனைவருக்கும் நினைவில் நிற்க வேண்டியது, இது போன்ற பல சதிகளில் இருந்து நெருப்பாற்றில் நீந்தியவர் புரட்சித்தலைவி.

செய்தியாளர்கள் பேட்டியில் சுப்ரமணிய சுவாமி, தமிழகத்தில் அதிமுக இயக்கத்தின் மூலமாக நக்சலைட்டுகள்,ஐ.எஸ்.ஐ இயக்கம், விடுதலைப்புலிகள் உள்ளிட்டவற்றை இணைத்தும் ஒரு சர்ச்சையை பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.

மீண்டும் வருவார் தங்கத்தாரகை...தமிழகத்தின் நிகரில்லா தலைவி புரட்சித்தலைவி....!

க.சௌந்தரராஜன்.

ஞாயிறு, 22 ஜூன், 2014

கொங்குநாட்டு சிவன்மலை முருகனின் தலவரலாறு

கொங்குநாடு என்பது 24-நாடுகளை உள்ளடக்கியது.அதில் காங்கயம் நாடும் ஒன்று.அங்கு சிவன்மலையில் குடிகொண்டிருக்கும்,சிவன்மலை முருகனின் தலவரலாறும்,சித்தர் சிவவாக்கியரின் சிறப்புகளும்,கொங்கு நாட்டின் சுருக்கமான வரலாறும்,சிவன்மலையின் அரிய புகைப்படங்களும்-சுமார் 55-பக்கங்கள் கொண்ட புத்தகமாக தமிழநாடு இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தப்புத்தகத்தில் சிவன்மலை முருகனின் தெயவத்தளபதி,இந்திய விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலைக்கும்,சிவன்மலைமுருகனுக்கும்,பட்டாலி கிராமத்துக்கும், சிவன்மலைக்கும் உள்ள தொடர்புகளும், அதைச் சுற்றிலும் தீரன்சின்னமலை செய்த அற்புதமான செயல்பாடுகளும்,அது சார்ந்த வரலாற்று பதிவுகளும் விடுபட்டுள்ளது.

இது தொடர்பாக நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கும்,தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல உள்ளோம்.

எமது கொங்கு தமிழர் பேரவை சார்பில் கடந்த காலங்களில் சுமார் எட்டு ஆண்டுகள்-2008 வ்ரை,சிவன்மலையில் தைப்பூசத்தேர்திருவிழா அன்று,எல்லப்பாளையம் காவடி அன்னதான அரங்கில் தீரன்சின்னமலை போர்ப்பாசறை விழா,மற்றும் தமிழர் கலை பண்பாட்டு விழாவினை சிறப்பாக  நடத்தினோம்.அதில் சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை, சிவன்மலையைச் சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள் என்று ஆண்டுதோரும் சுமார் அய்யாயிரம் பிரதிகள் இலவசமாக வெளியீடு செய்து சிறப்பித்தோம்.

மேலும்,சிவன்மலை முருகனுக்கும்,தீரன்சின்னமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தில் விரைவில் பதிவுசெய்யப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

சரி இனி இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு செய்த "சிவன்மலை முருகனின் தல வரலாற்றை" படியுங்கள்.தங்கள மேலான கருத்துரைகளை பதிவு செய்யுங்கள். 


மேலும் இந்த புத்தகவடிவத்தின் நகல் சிவன்மலை முருகன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sivanmalaimurugan.tnhrce.in என்ற என்ற முகவரியிலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது.








   

நன்றி:-சிவன்மலை தேவஸ்தானம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறை