வியாழன், 26 செப்டம்பர், 2013

மோடியின் இளம்தாமரை-ஜெயிக்குமா?


மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள்! தமிழகத்திற்கு வருகை தந்து இளம் தாமரை மகாநாட்டை தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்...

 முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.இந்தியா என்பது குஜராத் அல்ல! பெரும்பான்மை குஜராத்தி இன மக்களால் கட்டமைக்கப்பட்ட ஆசியத் துணைக்கண்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் குஜராத்.

சுமார் பத்துக்கு மேற்பட்ட மதங்களும்,500 க்கும் மேற்பட்ட சாதீகளும்,30க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும்
பலவகையான இனக்குழுக்களால்,பன்முகத்தன்மையால்
கட்டமைக்கப்பட்டதுதான் இந்தத் துணைக்கண்டம்.

உதாரணத்திற்கு தமிழகத்தின் கலாச்சாரம் வேறு,குஜராத்தின் கலாச்சாரம் வேறு,தமிழகத்தில் கூட கொங்கு நாட்டின் பண்பாடு வேறு,தென் தமிழகம்,வட தமிழகத்தின் பண்பாடுகள் ஒன்றுக்கு மற்றது மாறுபட்டதாக உள்ள்து.

பரந்து விரிந்த இந்தத் துணைகண்டத்திற்கு அகண்ட சிந்தனை கொண்ட ஒருவரால் மட்டுமே தலைமை மந்திரியாக பொருப்பு ஏற்று வழி நடத்த முடியும்.அத்தகைய தகுதி மோடிக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியது.அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கே உள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இந்தியத் தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்மிகை மாநிலமாக சொல்லப்படும் அங்கு பல லட்சக்கணக்கான கிராமங்கள் மின் வசதி இல்லாமல் இருளில்
மூழ்கியுள்ளது.வேளாண்மை தன்னிறைவு பெற்றதாக சொல்லப்படும் அங்கு விவசாயிகளின் தற்கொலை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம்,பீகார்,திரிபுரா போன்ற மாநிலங்கள முன்னோக்கி செல்கின்றன.

தணிக்கைத்துறை கணக்கு இப்படி இருக்கும்பொழுது! மோடியின் 7000 க்கும் மேற்பட்ட சைபர் மீடியா வெப்சைட்கள் குஜராத்தைதூக்கிப்பிடிக்கின்றன.விளம்பரங்களையும்,ஆடம்பரங்களயும் முழுமையாக நம்பி களம் இறங்குவது ஆபத்தானது.

நிர்வாகத்திறமை,வளர்ச்சிப்பாதை என்று பார்த்தால் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமை மந்திரி பதவிக்கு தகுதியானவர் என்று சொன்னால் அது மிகையாகது.

நமது தேசத்தந்தை மகாத்மா எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர்.அந்த மகாஜீவன் அவதரித்த மண்ணின் மைந்தர் மோடி அவர்கள் அதற்கு மாறுபட்டவராக இருக்கக்கூடாது.

நமது தேசமும்,தேசீயமும்,இந்த மண்ணில் வாழும் மக்களும் லஞ்சம்,ஊழல் இல்லாத எளிமையான தலைமையை எதிர்நோக்கி காத்திருப்பதை தலைவர்கள் கவனத்தில் எடுத்துகொண்டு பூர்த்தி செய்தால் வாழ்த்துக்கள்.

திங்கள், 23 செப்டம்பர், 2013

கலிங்கராயனாருக்கு சிலை-முதல்வர் அம்மாஅவர்களுக்கு கொங்குதமிழர்கட்சி மாநிலத்தலைவர் தெ.கு.தீரன்சாமி நன்றி தெரிவித்து கடிதம்


பொருள்:
ஈகை பெருந்தகையார் "காலிங்கராயனார்" அவர்களுக்கு 
சிலை அமைத்திட உத்தரவிட்ட அம்மா அவர்களுக்கு  நன்றி தெரிவிப்பது தொடர்பாக.
மாண்பு மிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.
    1991 முதல் புரட்சித் தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தபோதும் சரி , இல்லாதா போதும் சரி கொங்கு தமிழகத்திற்கும், கொங்கு சமுதாய மக்களுக்கும் எண்ணற்ற ,சொல்லில் வடிக்க முடியாதா செயற்கரிய சாதனைகளை தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளீர்கள் .

    அதன் ஒரு பகுதியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்ணின் வறட்சி  மிக்க ஒரு பகுதியை பொன்விளையும் பூமியாக மாற்றிக்  காட்டவேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையில் சுமார் 100 மைல்கல்  தொலைவிற்கும் மேலாக தனது சொந்த செல்வத்தை கரைத்து, சொந்த மக்களின் உழைப்பை தந்து காலிங்கராயன் வாய்க்கால் அமைத்தார். 

தானும் தனது குடும்பமும் அதன் விளைச்சலில் பயன்படக் கூடாது  என்ற லாப நோக்கமற்ற ஈகைத்தன்மையில் செயலாற்றியவர் தியாகி.காலிங்கராயனார் அவர்கள். அப்படி பட்ட தியாகச் செம்மலுக்கு ஈரோடு மாவட்டம் பவானியில் சிலை அமைத்திட ஆவண  செய்து உத்தரவு பிறப்பித்த மாண்பு மிகு அம்மா அவர்களுக்கு  மக்களின் சார்பிலும், கொங்கு தமிழகத்தின் சார்பிலும் மீண்டும்,மீண்டும் நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன்.
                                                              இவன்:-
                                                      டி.கே.தீரன்சாமி 
                                                 (  மாநிலஅமைப்பாளர்.)
 குறிப்பு:-                                      
கடந்த 13 -ஆண்டுகளில் நடைபெற்ற 5 -பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து எமது சொந்தச்செலவில் கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.என்பது குறிப்பிடத்தக்கது!

அம்மா அவர்கள் முதல்வர் பொருப்பெற்ற பிறகு நேரில் சந்தித்து எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை தங்களிடம் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

புதன், 11 செப்டம்பர், 2013

தமிழ் தேசியப்போராளியின் விடுதலைக்கனவு..


அம்மா சிங்கம் சீறீடவே..அடிமைத்தலைகளை அறுத்திடவே..

           
நம் தாகம் முழுவதும் தனிந்திடவே..சிதறிய தலைகள் சேர்ந்திடவே..                

சிங்கள மோகம் ஒழிந்திடவே..சிறு நரிக்கூட்டம் தொலைந்திடவே..

நம் தலைகளின் வேசம் கலைந்திடவே..மண்ணின் மானம் காத்திடவே..                                                                                                  

தமிழன் ரோசம் பிறந்திடவே..புலிகளின் இரத்தம் பாய்ச்சிடவே..

வீரம்..வீரம்..வீரம் பொங்கிடவே..வேண்டா விதியை முறித்திடவெ..

வெற்றிக் கோட்டைத் தொட்டிடவே..புயலின் வேகம் சுழன்றிடவே..

புதியபாதை கண்டிடவே..புழுக்களின் கோட்டையை அழித்திடவே..

படைகளின் வேட்டை தொடர்ந்திடவே..பாரில் தனி ஈழம் கண்டிடவே..                                                                                                    

அகண்ட தமிழிகம் உதித்திடவே..பாரெங்கும் புலிக்கொடிகள் பறந்திடவே..பறந்திடவே..பறந்திடவே...