செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கொங்கு தமிழர் கட்சி மற்றும் தென்னிந்திய சிறு விசைத்தறியாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி செய்தி அறிக்கை.:-
கொங்கு தமிழர் கட்சி மற்றும் தென்னிந்திய சிறு விசைத்தறியாளர்கள்
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி செய்தி அறிக்கை.:-

கொங்கு தமிழகத்தில் விவசாயம் குறிப்பாக சிறு விவசாயம் பொய்த்துப்போன
பின்பு கிராமப்பொருளாதரத்தைத் தூக்கி நிறுத்தும் சக்தியாக விளங்கியது
சிறு விசைத்தறி தொழில். திருப்பூர்,ஈரோடு,சேலம்,கரூர்,திண்டுக்கல்,கோவை
கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்
டி.கே.தீரன்சாமி
வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டபோது எடுத்த படம்
உள்ளிட்ட கொங்கு தமிழகம் முழுவதும் கடந்த நாற்பது ஆண்டுகளாக வளர்ந்து சிறப்புடன் செயல்பட்டு வந்தது.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் கடந்த பத்து ஆண்டுகாள தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவும்,நிலையற்ற பஞ்சு,மற்றும் நூல் விலை உயர்வின் காரணமாகவும்,மலிவு விலையில்,தரம் குறைந்த சீனா துணிகளை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் காரணமாகவும் சிறுவிசைத்தறித் தொழில் பெறும் பாதிப்புக்கு ஆளானது.

மேலும் சிறு விசைத்தறி துணிகளின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்களும் கடந்த பத்து ஆண்டுகளில் சரிந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மைய அரசு ஜவுளித்தொழிலளை நவீனப்படுத்துவதாக சொல்லி ஏர் லூம்,செட் லூம், வாட்டர் செட் என்று அதி நவீன தறிகளை இறக்குமதி செய்து அமைத்துக்கொள்ள மானியமும்,வங்கியில் கடனும் வழங்கியது.

சொந்தமாக குறைந்தது இருபது இலட்சம் முதலீடு செய்தால் மட்டுமே மேற்படி தானியங்கித் தறிகளை அமைக்க மைய அரசின் மானியமும்,வங்கிகளில் கடனும் பெறமுடியும்.இத்தகைய நவீனமயம் வசதிபடைத்த பெறும் ஜவுளிஉற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதகமாக அமைந்தது.தாமே சொந்தமாக தானியங்கி தறிகளை அமைத்து வருகின்றனர்.இதனால் அவர்களிடம் கூலிக்கு நெசவு செய்து வந்த சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்குறைப்புக்கும்,வேலை இழப்புக்கும் ஆளாகி உள்ளனர்.

இதன் விளைவு சுமார் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள சிறு விசைத்தறிகள்
ரூபாய் பத்தாயிரத்துக்கு.பழைய இரும்புக்கடைகளுக்கு எடைக்கு விற்கப்படும்
அவலத்திற்கு சிறு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கும் குறைவான ஜவுளி உற்பத்தியாளர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்த மையஅரசு,சுமார் இருபது இலட்சம் சிறு விசைத்தறியாளர்களையும்,இலட்சக்கணக்கான தொழிலாளர்களையும் படுகுழியில் தள்ளியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் நம்முடைய இயக்கம் தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பேசியபோது மேற்படி கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

கொங்கு தமிழகத்தின் அவசர சிகிச்சை பிரிவில் ஊசலாடும் சிறுவிசைத்தறித் தொழிலை காப்பாற்ற தமிழக முதல்வர் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை: